Foods to strengthen the Spleen in Tamil | Spleen Healthy Foods | Good Foods For Spleen
நம் உடலில் உள்ள உறுப்புகளில் மண்ணீரலும் மிக முக்கிய பாகு வகிக்கின்றது. மண்ணீரல் என்பது வயிற்றின் மேல் பகுதியில் இடது பகுதியில் அமைந்துள்ளது. உடல் உள்ள குறைபாடுள்ள உள்ள சிவப்பணுக்களை அழிப்பதை மண்ணீரல் செய்கிறது. WBC- லிம்போசைட்டுகளை உருவாக்கி, தொற்றுநோய்களைத் தடுக்கிறது. கூடுதலாக, இது இரத்த சிவப்பணுக்கள் மற்றும் பிளேட்லெட்டுகளை சேமிக்கிறது. அத்துடன் நோய் எதிர்ப்பாற்றலை முறைபடுத்துவதிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இப்படி முக்கிய பங்கு வகிக்கும் மண்ணீரல் ஆரோக்கியமாக இருக்க சில உணவு வகைகளை எடுத்து கொள்ள வேண்டும். அது என்னென்ன உணவுகள் என்று இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..
மண்ணீரல் பலம் பெற உணவுகள் | Spleen Health Foods:
அசைவம்:
அசைவ உணவுகளான கோழி, ஆடு, மாடு போன்றவை உணவுகளில் சேர்த்து கொள்ள வேண்டும். மீனில் ட்ரவுட், சால்மன், டுனா, மத்தி மீன் போன்ற வகைகளை சேர்த்து கொள்ள வேண்டும்.
பழங்கள்:
பழங்களில் ஆப்பிள், ஆப்ரிகாட்கள், பேரீட்சைப்பழம் , அத்திப்பழங்கள், இனிப்பு செர்ரிகள், பீச், பிளம்ஸ், சிவப்பு திராட்சை, திராட்சை போன்ற உலர்ந்த பழங்கள் போன்றவை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
காய்கறிகள்:
முட்டைக்கோஸ், பூசணி, கேரட், இனிப்பு உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளை அன்றாட உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
தானியங்கள்:
வேர்க்கடலை, பாதாம், பிஸ்தா, வால்நட், போன்றவை சாப்பிட வேண்டும்.
மண்ணீரல் நோயிற்கான இயற்கை வைத்தியம்..!
மண்ணீரலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய உணவுகள்:
குளிர்ந்த உணவுகள் மற்றும் குளிர்ந்த நீர் அல்லது சோடாக்கள் நிறைந்த பானங்களை அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
ஐஸ்கிரீம் அல்லது சாலடுகள் குளிர்ச்சியானது அதனால் இதனையும் தவிர்க்க வேண்டும்.
மேலும் அன்னாசி, வாழைப்பழங்கள், தர்பூசணிகள், எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு போன்றவை உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
தயிர், பால், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பாலில் செய்யப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.
சர்க்கரை, பால் மற்றும் குளிர்ச்சியை உள்ளடக்கியது! மண்ணீரல் சரியாகச் செயல்படாத ‘ஈரமான’ நிலையை பால் ஏற்படுத்துகிறது.
மண்ணீரலை பலப்படுத்த உதவும் யோகாசனம்..!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |