பழங்களும் அதன் மருத்துவ பயன்களும் (Fruits Benefits In Tamil)..!

Advertisement

பழங்களும் அதன் பயன்களும் (Fruits Benefits In Tamil)..! | Fruits Uses in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் பழங்களும் அதன் பயன்களும் (Fruits Benefits In Tamil) பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம். ஒவ்வொரு பழங்களிலும் ஒவ்வொரு வகை ஊட்ட சத்துக்கள் மற்றும் ஒவ்வொரு வகை மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளது. சரி எந்த பழத்தில் என்ன ஊட்டச்சத்து உள்ளது. என்னென்ன நோய்களுக்கு மருந்தாகிறது. தினமும் பழங்கள் சாப்பிடுவதினால் ஏற்படும் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..!

எந்தெந்த காய்கறிகள் சாப்பிட்டால் என்னென்ன நன்மை கிடைக்கும்..?

Benefits of Fruits in Tamil:

ஆப்பிள் பயன்கள் (Apple Fruit Benefits):

apple fruit benefits

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதினால் நாம் மருத்துவரை நாடவேண்டிய அவசியம் இருக்காது. ஏனெனில் ஆப்பிளில் வைட்டமின்கள், புரோட்டீன்கள் போன்ற உயிர் சத்துக்கள் நிறைய உள்ளது.

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதினால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் கரைக்கப்படும்.

குறிப்பாக ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின்கள் நிறைய உள்ளது. எனவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நினைப்பவர்கள். தினமும் ஒரு ஆப்பிள் பழத்தை சாப்பிடுங்கள். பழமாக சாப்பிட பிடிக்காதவர்கள் ஜூஸ் செய்து சாப்பிடுங்கள்.

அதேபோல் தினமும் அதிகம் ஆப்பிள் சாப்பிடுவதினால், அவற்றில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் கண் புரை நோய் ஏற்படுவதை தடுக்கும்.

தினமும் ஆப்பிள் மற்றும் ஆப்பிள் ஜூஸ் சாப்பிடுத்தினால் இதைய நோய் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

ஆப்பிளில் உள்ள ஒரு வகை ஊட்டச்சத்து நுரையீரல், மார்பகம் மற்றும் குடல் போன்ற பகுதிகளில் ஏற்படும் புற்று நோயை தடுக்கலாம்.

மாதுளை பயன்கள் (Pomegranate Fruit Benefits):-

pomegranate fruit benefits

மாதுளை பழத்தில் பலவகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அதாவது கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, சோடியம், வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் நிராய்ந்துள்ளது.

மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் தொடர்ந்து மாதுளம் பழத்தை சாப்பிட்டு வர மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.

அதேபோல் வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.

பித்த சம்மந்த மான அனைத்து உடல்நல பிரச்சனைகளுக்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம்.

அரியவகை பழங்களும் அதன் பலன்களும் (Fruit Benefits In Tamil)..!

மருத்துவ குணங்கள் நிறைந்த மாம்பழம் (Mango fruit benefits):

mango fruit benefitsமாம்பழத்தில் ஏராளமான ஊட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து மற்றும் புரதச்சத்து அதிகம் மாம்பழத்தில் நிறைந்துள்ளது.

மாம்பழம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயன்படுகிறது. மாம்பழத்தை தினமும் உட்கொள்வதினால் நமது உடலில் ரத்தம் அதிகரிக்கப்படுகிறது.

பழங்களின் மருத்துவப் பயன்கள் – பப்பாளி பயன்கள் (Papaya benefits):-papaya benefits

பப்பாளி பழத்தில் வைட்டமின் ஏ, இ, பொட்டாசியம், கால்சியம், ஃபோலேட் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது.

இத்தகைய பப்பாளி பழத்தை சாப்பிடுவதினால் பல் சம்மந்தமான பிரச்சனைகளுக்கும், சிறுநீரக கற்களை கரைப்பதற்கு இந்த பப்பாளி பழத்தை சாப்பிட்டாலே போதும்.

மேலும் நரம்புகள் பலமடையவும், ஆண்மை தன்மை பலமடையவும், ரத்த விருத்தி உண்டாக்கவும் ஞாபக சக்தியை அதிகரிக்க தினமும் பப்பாளி பழத்தை சாப்பிடலாம்.

லிச்சி பழம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா ?

பழங்களின் மருத்துவப் பயன்கள் – வாழைப்பழம் பயன்கள் (Bananas benefits):

bananas benefits

வாழைப்பழத்தில் ஏராளமான ஊட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது, குறிப்பாக வாழைப்பழம் உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட் வழங்கும். மேலும் வாழைப்பழத்தில் வைட்டமின்கள், பொட்டாசியம், ஃபோலேட், அமினோ அமிலம் போன்ற சத்துக்கள் உள்ளது.

தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுவதினால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும். தினமும் உணவிற்கு பின் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதினால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.

நாவல் பழம் நன்மைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு..?

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil
👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.
Advertisement