சமையலில் பச்சை மிளகாயை சேர்ப்பதற்கு முன்பு இதை தெரிந்துக்கொள்ளுங்கள்..!

Advertisement

Green Chilli Benefits in Tamil

பொதுவாக நாம் அனைவரும் சமைக்கும் சாப்பாடு சைவ உணவாக இருந்தாலும் சரி  அசைவ உணவாக இருந்தாலும் சரி அதில் கண்டிப்பாக பச்சை மிளகாய் சேர்க்காமல் இருக்க மாட்டோம். அப்படி தினமும் சமைக்கும் உணவில் பச்சை மிளகாய் மட்டுமில்லாமல், வெங்காயம், தக்காளி மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றைம்  சேர்ப்பது இயல்பான ஒன்று. அதுபோல பச்சை மிளகாய் எப்போதும் டிமாண்ட் உள்ள ஒரு காயாகவும் இருக்கிறது. அதனால் இன்றைய பதிவில் சமையலில் பச்சை மிளகாயை பயன்படுத்துவதற்கு முன்பு தெரிந்துக்கொள்ள நன்மைகள் மற்றும் யாரெல்லாம் பச்சை மிளகாய் சாப்பிடக்கூடாது போன்ற விரிவாக பற்றியும் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

இதையும் படியுங்கள்⇒ புதினா இலையை யார் யாரெல்லாம் சாப்பிட கூடாது தெரியுமா..?

பச்சை மிளகாயில் உள்ள சத்துக்கள்:

100 கிராம் பச்சை மிளகாயில் உள்ள சத்துக்கள்.

  1. புரதம்- 2.9 கிராம்
  2. கொழுப்பு- 0.6 கிராம்
  3. கால்சியம்- 30 மில்லி கிராம்
  4. நார்ச்சத்து- 6.8 கிராம்
  5. இரும்புச்சத்து- 4.4 கிராம்
  6. வைட்டமின் A- 176 மியூஜி
  7. வைட்டமின் C- 111 மில்லி கிராம்

பச்சை மிளகாய் நன்மைகள்:

பச்சை மிளகாய்

பச்சை மிளகாயில் காரம் அதிகமாக இருக்கிறது. இதில் கலோரிகள் இல்லாத காரணத்தினால் உடல் எடை குறைவிற்கு சிறந்த நன்மையை தருகிறது. அதுமட்டும் இல்லாமல் பச்சை மிளகாய் நாம் சாப்பிட்ட உணவை எளிதில் செரிமானம் அடைய செய்கிறது.  

மூளை நரம்புகள்:

மூளை நரம்புகள்

தினமும் நாம் சாப்பிடும் உணவில் காரம் நிறைந்த பச்சை மிளகாயினை சேர்த்துக்கொள்வதன் மூலம் இது மூளை நரம்புகளுக்கும் மற்றும் உடல் சுறுசுறுப்பிற்கும் நல்ல பலனை தருகிறது.

நீரிழிவு நோய்:

நீரிழிவு நோய் குணமாக

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் உள்ளவர்கள் தினமும் சாப்பிட்டில் ஏதோ ஒரு வகையில் பச்சை மிளகாயை எடுத்துக்கொள்ளும் போது சர்க்கரையின் அளவு குறைந்த விடும்.

நுரையீரல் புற்றுநோய்: 

நுரையீரல் புற்றுநோய்

ஒரு நாளைக்கு 2 பச்சை மிளகாய் சாப்பாட்டுடன் எடுத்துக்கொள்ளும் போது இது நுரையீரல் புற்றுநோய் வராமல் இருப்பதற்கும் மற்றும் புகைபிடித்தலில் இருந்து விடுபடுவதற்கும் ஒரு மருந்தாக பச்சை மிளகாய் பயன்படுகிறது.

இரத்த சோகை:

இரத்த சோகை

இரத்த சோகை உள்ள பெண்கள் பச்சை மிளகாயை சரியான அளவில் சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிடும் போது அதில் இருக்கும் இரும்புச் சத்து இரத்த சோகையை போக்கி உடலை ஆரோக்கியமாக வைக்க செய்கிறது.

தோல் பிரச்சனை:

skin problem

 

பச்சை மிளகாய் ஆன்டி-பாக்டீரியா என்ற குணம் கொண்டிருப்பதால் தோல் பிரச்சனை எதுவும் வராமல் உடலையும் ஆரோக்கியாக வைக்க உதவுகிறது.

பாகற்காயை சாப்பிடுவதற்கு முன்பு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

பச்சை மிளகாயை உணவில் சேர்த்து சாப்பிட வேண்டியவர்கள்:

  1. முடி உதிர்வு உள்ளவர்கள்
  2. சீரான இரத்த ஓட்டம் உள்ளவர்கள்
  3. அதிக உடல் எடை உள்ளவர்கள்
  4. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள்

பச்சை மிளகாய் உடலுக்கு நன்மை தரக்கூடியது என்றாலும் அதை அதில் அதிக காரம் இருப்பதால் அளவுக்கு அதிகமாக சாப்பிட கூடாது.

பச்சை மிளகையை  உணவில் சேர்த்து சாப்பிட கூடாதவர்கள்:

  1. நெஞ்சு எரிச்சல் உள்ளவர்கள்
  2. வயிற்று புண் உள்ளவர்கள்
  3. வயிற்று போக்கு உள்ளவர்கள்
  4. வயிறு வலி உள்ளவர்கள்

மேலே சொல்லப்பட்டுள்ள நபர்கள் பச்சை மிளகாயை போதுமான அளவு சாப்பிட்டில் இருந்து தவிர்த்து கொள்வது நல்லது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்
Advertisement