இளமையிலும், முதுமையிலும் எலும்பு பிரச்சனை வராமல் இருக்க இந்த செயல்களை செய்யாதீர்கள்..!

Advertisement

எலும்புகள் பலம் பெற

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு சில செயல்களை செய்ய கூடாது. நம் முன்னோர்கள் காலத்தில் வயதானால் எலும்பு பிரச்சனை ஏற்படும். ஆனால் இப்போது அப்படி இல்லை இளம் வயதினருக்கும் எலும்பு பிரச்சனை ஏற்படுகிறது. எலும்புகளில் மீது யாரும் கவனம் செலுத்துவதில்லை. எலும்பு பலவீனம் ஆகும் போது தான் அதற்கான வழிமுறைகளை தேடுகிறோம். எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு சில செயல்களை செய்யாமல் இருப்பது அவசியமானதாகும். அது என்னென்னெ என்று இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க..

இதையும் படியுங்கள்⇒ எலும்பு பலம் பெற கால்சியம் அதிகம் உள்ள உணவு வகைகள்..!

அதிக நேரம் உட்கார்ந்து கொண்டிருப்பது:

அதிக நேரம் உட்கார்ந்து கொண்டிருப்பது

அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டே இருக்க கூடாது. நீங்கள் அதிக நேரம் உட்கார்ந்திருப்பதால் கால்சியம் சத்து குறைகிறது. அதனால் தினமும் நடைப்பயிற்சி மற்றும் ஓடுவது போன்ற பயிற்சிகள் செய்வதனால் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும்.

அசைவம் சாப்பிடுவது:

அசைவம் சாப்பிடுவது

அசைவம் சாப்பிடுவது நல்லது தான். ஆனால் அதிகம் எடுத்து கொள்ள கூடாது. அசைவம் மற்றும் பால் அதிகம் அதிகமாக சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். ஏனென்றால் அசைவம் அதிகமாக சாப்பிடும் போது எலும்புகளின் கால்சியம் சத்தை சிறுநீராக வெளியேற்றுகிறது.

புகை பிடிக்கும் பழக்கம்:

புகை பிடிப்பது மற்றும் புகையிலை சாப்பிடுவது எலும்புகளின் ஆரோக்கியத்தை  பாதிக்கும்.

குளிர்பானம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்:

குளிர்பானம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்

குளிர்ச்சி நிறைந்த பொருட்களை சாப்பிடுவது எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும். குளிர்பானங்களில் நிறைந்திருக்கும் சுகர், காபின் மற்றும் பாஸ்போரிக் ஆசிட் எலும்புகளில் நிறைந்திருக்கும் கால்சியத்தை வெளியேற்றுகின்றன.

டீ, காபி குடிப்பதால் ஏற்படும் தீமைகள்:

டீ, காபி குடிப்பதால் ஏற்படும் தீமைகள்

சில நபர்கள் அளவுக்கு அதிகமாக டீ, காபி குடிக்கும் பழக்கம் இருக்கும். “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்ற பழமொழி போல் தான் அளவுக்கு மீறி எந்த பொருளையும் உட்கொள்ள கூடாது. டீ, காபி அதிகமாக குடித்தால் எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று ஆய்வில் கூறியுள்ளனர்.

உப்பு அதிகம் சாப்பிட்டால்:

உப்பு அதிகம் சாப்பிட்டால்

உப்பும், சர்க்கரையும் சில நபர்களுக்கு அதிகமாக இருந்தால் சாப்பிடுவார்கள். இந்த இரண்டு பொருள்களும் உணவில் அதிகம் சேர்த்து சாப்பிட்டால் எலும்புகளை பாதிக்க செய்யும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil
Advertisement