30 நாட்களில் 5 கிலோ வரை உடல் எடை அதிகரிக்க வேண்டுமா..? அப்போ வாழைப்பழத்துடன் இதை மட்டும் சேர்த்து சாப்பிடுங்க போதும்..!

Healthy Weight Gain Drink in Tamil

Healthy Weight Gain Drink in Tamil

நான் நன்றாக தான் சாப்பிடுகிறேன், ஆனாலும் எனது உடல் எடை அதிகரிக்கவே மாட்டேங்கிது என்று ஒரு சிலர் புலம்புவதை நாம் கேட்டிருப்போம். அதனால் அவர்களும் தங்களின் உடல் எடையை அதிகரிக்க பல முயற்சிகளை மேற்கொண்டிருப்பார்கள். ஆனாலும் அவர்களுக்கு அவர்கள் எண்ணிய சரியான பலன் கிடைத்து இருக்காது.

அதனால் அவர்களுக்கெல்லாம் உதவும் வகையில் தான் இன்றைய பதிவில் உடல் எடையை மிகவும் ஆரோக்கியமான மற்றும் இயற்கையான முறையில் அதிகரிக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி தான் அறிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி உங்களின் உடல் எடையை அதிகரித்து கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ 5 நாட்களில் 2 கிலோ வரை உடல் எடை அதிகரிக்க சீரகத்துடன் இதை மட்டும் சேர்த்து குடியுங்கள் போதும்

Best Weight Gain Drink at Home in Tamil:

Best Weight Gain Drink at Home in Tamil

உடல் எடையை மிகவும் ஆரோக்கியமான மற்றும் இயற்கையான முறையில் அதிகரிக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி அறிந்து கொள்ளலாம் வாங்க. முதலில் அதற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.

  1. காய்ந்த அத்திப்பழம் – 4
  2. பேரிச்சை – 4
  3. பாதாம் – 6
  4. முந்திரி – 10
  5. வேர்க்கடலை – 20 கிராம் 
  6. கருப்பு கொண்டக்கடலை – 40 கிராம் 
  7. பச்சை பயிறு – 20 கிராம் 
  8. வாழைப்பழம் – 2
  9. பால் – 1 டம்ளர்  
  10. தண்ணீர் – தேவையான அளவு 

கிண்ணத்தை எடுத்து கொள்ளவும்:

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 4 காய்ந்த அத்திப்பழம், 4 பேரிச்சை, 6 பாதாம், 10 முந்திரி, 20 கிராம் வேர்க்கடலை, 40 கிராம் கருப்பு கொண்டக்கடலை மற்றும் 20 கிராம் பச்சை பயிறு ஆகியவற்றை சேர்த்து கொள்ளுங்கள்.

பின்னர் இவை அனைத்தும் நன்கு மூழ்கி ஊறுவதற்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி ஒரு நாள் இரவு முழுவதும் நன்கு ஊறவிடுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்⇒ 10 நாட்களில் உடல் எடை அதிகரிக்க வேண்டுமா அப்போ தேங்காய் பாலுடன் இந்த 2 பொருளை சேர்த்து சாப்பிடுங்கள் போதும்

மிக்சி ஜாரை எடுத்து கொள்ளுங்கள்:

அடுத்து ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்திருந்த 1 டம்ளர் பால் மற்றும் 2 வாழைப்பழத்தையும் அதனுடைய தோல்களை நீக்கி விட்டு சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள்.

பிறகு அதனுடனே நாம் முதல் நாளே ஊற வைத்திருந்த பருப்புகளையும் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளுங்கள். இதனை காலை வெறும் வயிற்றுடன் குடியுங்கள். இதனை தினமும் தொடர்ந்து 1 மாதத்திற்கு குடித்து வருவதன் மூலம் உங்களின் உடல் எடை அதிகரிப்பதை நீங்களே காணலாம்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்⇒ உங்களின் உடல் எடை ஒரே வாரத்தில் அதிகரிக்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> udal edai athikarikka tips