ஆரோக்கியமாக உடல் எடை அதிகரிக்க இந்த டிப்ஸை Follow பண்ணுங்க 100%ரிசல்ட்

Advertisement

உடல் எடை அதிகரிக்க எளிமையான டிப்ஸ்

உடல் எடை அதிகமாக இருந்தாலும் பிரச்சனை, குறைவாக இருந்தாலும் பிரச்சனை தான். உடல் எடை குறைவாக உள்ளவர்கள் ஒல்லியாக இருக்கிறோம் என்று நினைக்க மாட்டார்கள். கூட இருப்பவர்கள் தான் ஏன் இவ்வளவு ஒல்லியாக  இருக்க சாப்பிடுகிறாயா இல்லையா என்று கேட்பார்கள். உங்களின் பெற்றோர்களை பார்த்தால் சாப்பாடு போடுகிறாயா இல்லையா என்று கேட்பார்கள். ஒல்லியாக இருப்பது பிரச்சனை இல்லை. ரொம்ப ஒல்லியாக அதவாது குச்சி போல இருப்பார்கள். அவர்கள் கொஞ்சமாவது உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். ஆரோக்கியமாக உடல் எடையை அதிகரிப்பது எப்படி என்று இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

புரோட்டீன் நிறைந்த உணவுகள்:

protein foods list

உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் புரோட்டீன் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியமானது. புரோட்டீன் நிறைந்த உணவுகளான பால், தயிர், முட்டை, சிக்கன், நெய் போன்ற உணவுகளை தினமும் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள் ⇒ 7 நாட்களில் உங்கள் உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ் இதோ உங்களுக்காக..!

கார்போஹைட்ரேட் உணவுகள்:

Carbohydrates Food List in Tamil

கார்போஹைட்ரெட் உணவுகளை சாப்பிட வேண்டும். கார்போஹைட்ரெட் உணவுகளான Brown rice ஸ்வீட் pototo, சோளம், பூசணிக்காய், பிராக்கோலி  போன்ற உணவுகளில் ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகள் இருக்கிறது. அதனால் இந்த உணவுகளை உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் இந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.

Avoid Trans Fat in Tamil:

Avoid Trans Fat in Tamil

கடையில் விற்கும் பர்கர், பீசா, பிரை ரைஸ், ஜூஸ் போன்றவை உணவில் சேர்த்து கொள்ள கூடாது. இதற்கு பதிலாக நட்ஸ், தேங்காய் நிறைந்த உணவுகள், காலா மீன் போன்ற உணவுகளை அதிகமாக சாப்பிடுங்கள்.

கலோரி அதிகம் உள்ள உணவு வகைகள்:

நீங்கள் தினமும் சாப்பிடும் கலோரிகளை அதிகப்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக தினமும் 1200 கலோரிகள் நிறைந்த உணவுகளை தான் சாப்பிடுகிறேன் என்றால் 1500 கலோரிகளாக அதிகப்படுத்த வேண்டும்.

சாப்பிடும் முன் தண்ணீர்:

சாப்பிடும் முன் தண்ணீர்

சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும் தண்ணீர் கண்டிப்பாக குடிக்க கூடாது. சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடித்தால் அதிகமாக சாப்பிட முடியாது. சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் கழித்து தண்ணீர் குடிக்க வேண்டும்.

பிளாங்க் உடற்பயிற்சி:

பிளாங்க் உடற்பயிற்சி

நீங்கள் தினமும் பிளாங்க் உடற்பயிற்சி அல்லது புஷ் அப் இரண்டில் எதாவது ஒரு உடற்பயிற்சியை தொடர்ந்து செய்யுங்கள். கண்டிப்பாக உடல் எடை அதிகரிக்கும்.

மேல் கூறப்பட்டுள்ள டிப்ஸ் அனைத்தும் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு செய்யுங்கள். நீங்களே மாற்றத்தை காண்பீர்கள். ஆரோக்கியமாக உடல் எடை அதிகரிக்க இந்த குறிப்புகள் உங்களுக்கும் உதவும்.

Keep On The Body Cool in Tamil:

 உடல் எடை அதிகரிப்பதற்காக மேல் கூறப்பட்டுள்ள எல்லா டிப்சையும் Follow செய்து உங்களது உடலில் வெப்ப நிலை அதிகமாக இருந்தால் பலன் அளிக்காது. அதற்க்கு உடலை குளிர்ந்த நிலையில் வைத்து கொள்ளவும். குளிர்ந்த நிலையில் வைப்பதற்கு யழனி, பதனி, மோர், மட்டன் போன்றவை சாப்பிடுவதன் மூலம் உடலை குளிர்ந்த நிலையில் வைத்திருக்க முடியும். மேலும் வாரத்தில் ஒரு நாள் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். உடல் எடையை அதிகரிப்பதற்கு லெஸி தினமும் குடியுங்கள். உடலை முடிந்த வரைக்கும் குளிர்ச்சியாக வைத்திருக்கவும்.  

இதையும் படியுங்கள் ⇒ உடல் இளைக்க இதை மட்டும் தினமும் காலை செய்து சாப்பிடுங்கள் போதும்..

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்

 

Advertisement