துளசியின் மருத்துவ குணங்கள் (Holy basil uses in tamil)..!

துளசி பயன்கள்

துளசியின் மருத்துவ குணங்கள் (Holy basil uses in tamil)..!

இயற்கை தந்த படைப்புகளில் துளசி ஒரு அற்புதமான மூலிகை மருந்து. துளசி செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. ஒரு காலத்தில் அனைவரது வீட்டிலும் இந்த துளசி செடி இருக்கும். துளசி ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

சித்தர்களாலும், முனிவர்களாலும் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட இந்த துளசியின் மருத்துவ குணங்களை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்வோம் வாங்க…

வயிற்று புண் மற்றும் குடல்புண்ணுக்கான மூலிகை வைத்தியம் !!!

துளசி பயன்கள் – மலேரியா காய்ச்சல் குணமாக:-

10 துளசி இலையுடன் சிறிதளவு மிளகு சேர்த்து நன்றாக இடித்து இரண்டு டம்ளர் தண்ணீரில் கலந்து. அரை டம்ளர் தண்ணீர் வரும் வரை நன்றாக காய்ச்சி. மிதமான சூட்டில் இந்த பானத்தை அருந்த வேண்டும்.

பின்பு இந்த பானம் அருந்திய பிறகு சிறிதளவு எலுமிச்சை சாறு அருந்த வேண்டும். பின்பு நல்ல கம்பிளி போர்வையை எடுத்து உடல் முழுவதும் போத்திகொண்டு உறங்க வேண்டும். இவ்வாறு செய்வதினால் மலேரியா காய்ச்சல் குணாகும்.

துளசி பயன்கள் – சிறுநீரக கற்கள் கரைய:-

இரவில் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அவற்றில் சிறிதளவு துளசி இலைகளை போட்டு மூடி வைக்கவும். இந்த தண்ணீரை மறுநாள் காலை வெறும் வயிற்றில் துளசியுடன் சேர்த்து பருகவும். இவ்வாறு 48 நாட்கள் தொடர்ந்து செய்து வர படிப்படியாக சிறுநீரக கற்கள் கரைய ஆரம்பிக்கும்.

மேலும் இரத்தத்தில் உள்ள தேவையற்ற வேதி பொருட்கள், விஷநீர் போன்றவை சிறுநீரகம் வழியாக வெளியேறிவிடும்.

துளசி பயன்கள் – உடலில் ஏற்படும் அழற்சி குணமாக:-

கண்களுக்கு தெரியாத சில பூச்சிகள் கடித்து. அதனால் உடலில் அழற்சி ஏற்படும் அவற்றை குணப்படுத்த துளசி சாறு மற்றும் தும்பை சாறு இரண்டையும் சம அளவு எடுத்து ஒரு வாரம் வரை பருகி வர இந்த அழற்சி குணமாகும்.

துளசி பயன்கள் – பற்கள் பலம்பெற:-

துளசி மற்றும் புதினா இரண்டையும் சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியுடன் சிறிதளவு கிராம்பு பொடி சேர்த்து நன்றாக கலந்து பல் துலக்கி வர சொத்தை பல், ஈரலில் ஏற்படும் வீக்கம், வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகள் சரியாகும்.

மேலும் பற்கள் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.

துளசி பயன்கள் – இதயம் பலம் பெற:-

துளசி சாறு ஒரு மில்லி அளவு, தேன் ஐந்து மில்லி அளவு மற்றும் வெந்நீர் ஐந்து மில்லி அளவு ஆகியவற்றை கலந்து காலை மற்றும் மாலை இரு வேளையும் 20 அல்லது 40 நாட்கள் வரை அருந்தி வர இதயம் பலம் பெரும்.

40 வகை கீரைகள் மற்றும் அவற்றின் மருத்துவ பலன்கள்..!

துளசி பயன்கள் – கக்குவான் இருமல் குணமாக:-

துளசி பூங்கோத்து, வசம்பு மற்றும் திப்பிலி ஆகியவற்றை சம அளவு எடுத்து பொடி செய்து. அதனுடன் நான்கு மடங்கு சர்க்கரை கலந்து, ஒரு சிட்டிகை தேனில் கலந்து உன்ன இந்த கக்குவான் இருமல் குணமாகும்.

கற்றாழை மருத்துவ பயன்கள்

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil