வெயில் காலத்தில் ஏற்படும் வியர்க்குரு குறைய சில இயற்கை மருத்துவ குறிப்புகள்.

வேர்க்குரு சரியாக இயற்கை மருத்துவ குறிப்புகள்..!

வெயில் காலத்தில் ஏற்படும் வியர்க்குரு நீங்க சில இயற்கை மருத்துவ குறிப்புகள் ..!

இந்த வெயில் காலம் வந்தாலே போதும், கூடவே வியர்க்குரு பிரச்சனையும் சேர்ந்து வந்துடும், இந்த வியர்க்குரு பிரச்சனை வந்திடுச்சின்னா அதிக அரிப்பையும், அதிக எரிச்சலையும் ஏற்படுத்திவிடும். இந்த வியர்க்குரு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாடாகப்படுத்தும் முக்கியமான பிரச்சனையாக உள்ளது. எனவே நம் தட்பவெப்பநிலைக்கு ஏற்ப உணவு முறைகள், நடைமுறை பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் வியர்க்குருவை எதிர்கொள்ளலாம்.

இதையும் படிக்கவும்  மாதுளை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

சரி வாங்க கோடை வெயில் தாக்கத்தினால் ஏற்படும் வியர்க்குரு பிரச்சனையில் இருந்து நம்மள எப்படி பாதுகாக்கலாம் என்று இந்த பகுதியில் நாம் காண்போம் வாங்க..!

வியர்க்குரு குறைய (Heat rash treatment):

வியர்க்குரு குறைய (Heat rash treatment)- தண்ணீர்:

உடலில் பித்தம் அதிகமுள்ளவர்கள், உடல் பருமனால் அவதிப்படுபவர்கள், உடலில் அதிகம் உஷ்ணமுள்ளவர்களுக்கு இந்த வியர்க்குரு பிரச்சனை ஏற்படுகிறது. அவர்கள் இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியம்.

அதேபோல் உடலுக்கு தேவையான அளவுக்கு தண்ணீர் அருந்த வேண்டியதும் மிகவும் அவசியமாகும். இவ்வாறு செய்வதினால் வியர்க்குரு பிரச்சனையில் இருந்து விடுபெறலாம்.

பழங்கள்:

இந்த விர்க்குரு சரியாக அதிகளவு நீர்ச்சத்து நிறைந்துள்ள பழங்களை சாப்பிடவேண்டியது மிகவும் அவசியம்.

அந்த வகையில் நீர்ச்சத்து நிறைந்துள்ள பழங்களான வெள்ளரிக்காய், கிர்ணி, தர்பூசணி, இளநீர், கரும்புச்சாறு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் சாப்பிடுவதினால் இந்த கோடை வெயில் தாக்கத்தினால் ஏற்படும் வியர்க்குரு பிரச்சனை சரியாகும்.

மேலும் கோடை காலத்தில் அதிகம் விற்கப்படும் நுங்கு சாப்பிடுவதினால் நுங்கு நீரிழப்பை சரிசெய்வதுடன், வியர்க்குரு பிரச்சனையை குணப்படுத்தும்.

இந்த வியர்க்குரு பிரச்சனை, மற்ற இடங்களுக்கு பரவாமல் இருக்க நுங்கு நீரினை சருமத்தில் பூசலாம் இவ்வாறு செய்வதினால் வியர்க்குரு மற்ற இடங்களுக்கு பரவாமல் இருக்கும்.

வியர்க்குரு குறைய (Heat rash treatment):

வியர்க்குரு நீங்க இரவு தூங்குவதற்கு முன் திரிபலா அதாவது (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்) பொடியை ஒரு ஸ்பூன் எடுத்து நீரில் கலந்து குடித்து வர வியர்க்குரு மறையும்.

அதேபோல் பகல் வேளையில் திரிபலா அல்லது வெட்டிவேர் பவுடரை நீரில் கரைந்து, உடலில் தேய்த்து குளித்துவர வியர்க்குரு குறைய ஆரம்பிக்கும்.

வியர்க்குரு குறைய (Heat rash treatment) சந்தனம்:

இந்த வியர்குருவை குணப்படுத்துவதில் சந்தனம் ஒரு சிறந்த நிவாரணம் தரக்கூடியது. எனவே சந்தனத்தை உடல் முழுவதும் பூசி குளிக்கலாம், இந்த சந்தனத்துடன் சிறிதளவு மஞ்சளும் கலந்து கொள்ளலாம்.

மஞ்சள் ஒரு கிருமி நாசினி என்று நம் அனைவருக்கு தெரிந்த ஒன்றுதான் இந்த மஞ்சள் வியர்குருவை கட்டுப்படுத்துவதுடன் இந்த வியர்க்குரு பிரச்சனையால் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிசல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

வியர்க்குரு சரியாக அருகம்புல்:

வியர்க்குரு நீங்க அறுகம்புல்லுடன் சிறிதளவு மஞ்சள் கலந்து அரைத்து உடலில் தேய்த்து குளித்துவர இந்த வியர்க்குரு பிரச்சனையில் இருந்து விடுபெறலாம்.

இது ‘அறுகன் தைலம்’ , ‘தூர்வாரி தைலம்’ என்று நாட்டு மருந்து கடைகளில் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கிடைக்கின்றது. அவற்றை வாங்கி வந்து கூட தாங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

வேயர்க்குரு குறைய (Heat rash treatment) வேப்பிலை:

வியர்க்குரு நீங்க வேப்பிலை, சந்தனம், மஞ்சள் ஆகியவற்றை சமஅளவு எடுத்து நன்றாக மைபோன்று அரைத்து கொள்ளவும்.

இந்த பேஸ்ட்டை வியர்க்குரு உள்ள இடத்தில் பூசி குறைந்து ஒரு மணி நேரம் வரை அப்படியே வைத்திருக்க வேண்டும். பின்பு குளிக்கவும் இவ்வாறு செய்வதினால் அரிப்பு நீங்குவதுடன் வியர்க்குரு குணமாகும்.

இதையும் படிக்கவும்  தொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய் வைத்தால் ? அற்புத நன்மைகள்..!

வியர்க்குரு குறைய (Heat rash treatment):

வியர்க்குரு நீங்க பாசிப் பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் வெந்தயம் ஆகியவற்றை பொடி செய்து உடலுக்கு தேய்த்து குளிப்பதினால் வியர்க்குரு பிரச்சனை சரியாகும்.

மேலும் கற்றாழை ஜெல்லை தலைக்கு ஷாம்புபோல் தேய்த்து குளித்து வருவதினால் இந்த வியர்க்குரு பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

வியர்க்குரு குறைய இயற்கை மருத்துவ குறிப்புகள் :

வியர்க்குரு நீங்க – வியர்க்குரு பிரச்சனையில் இருந்து நம்மை பாதுகாக்க, வறுத்த மற்றும் பொரித்த உணவுகளை தவிர்த்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அதேபோல் காரம் அதிகம் உள்ள உணவுகளை தவிர்த்து கொள்ள  வேண்டியது மிகவும் அவசியம்.

மேலும் குப்பைமேனி கீரையை பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர உடல் சூடு தணிவதுடன் வியர்க்குரு பிரச்சனை நம்மை நெருங்கவே நெருங்காது.

வியர்க்குரு குறைய – சித்த மருத்துவ குறிப்புகள் :

வியர்க்குரு குறைய – சீரகம், சுக்கு, ஏலம் ஆகியவற்றை சம அளவு எடுத்து பொடி செய்து கொள்ளவும், இந்த ஒரு ஸ்பூன் பொடிக்கு ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்க்க வேண்டும். இந்த பொடியை தினமும் காலை உணவுக்கு பிறகு அரை டீஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டினால் ஏற்படும் நோய்களையும், வியர்க்குருவையும் குணப்படுத்தும்.

இதையும் படிக்கவும்  தேவையற்ற கொழுப்பு குறைய அற்புத பானங்கள் !!!
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com