2 நிமிடத்தில் உடல் சூடு குறைய – அருமையான வழி..! Udal soodu kuraiya enna vali tamil..!

உடல் சூடு குறைய

உடல் சூடு குறைய என்ன செய்ய வேண்டும்..! Udal Soodu Kuraiya Tips Tamil..!

Udal soodu symptoms in tamil: கால மாற்றங்களினால் நம்மில் பலருக்கு உடல் உஷ்ணம் ஏற்படும், குறிப்பாக இந்த பிரச்சனை அதிக நேரம் வெயிலில் பணிபுரிபவர்களுக்கும், அதிக நேரம் நாற்காலியில் அமர்ந்து பணிபுரிபவர்களுக்கும் இந்த உடல் உஷ்ணம் (Reduce Body Heat) ஏற்படுகிறது. இந்த உடல் உஷ்ணத்தினால் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அனைத்து பகுதிகளும் ஆரோக்கியத்தை இழந்துவிடுகிறது. மேலும் முடி உதிர்வு, வயிற்று வலி, முக பருக்கள் போன்ற எரிச்சலை மூட்டும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. உடல் சூடு குறைய சில இயற்கை டிப்ஸ்களை இன்று நாம் பார்ப்போம் வாங்க..!

newஉடலை ஆரோக்கியமாக வைத்திருக்க சில வழிமுறைகள் !!!

உடல் உஷ்ணம் குறைக்க:

டிப்ஸ் 1:

சந்தனாதி தைலம் 

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE" சேனல SUBSCRIBE" பண்ணுங்க: Pothunalam Youtube

உடலில் அதிகமான சூடு உள்ளவர்கள் ஆயுர்வேதா கடைகளில் விற்கக்கூடிய சந்தனாதி தைலத்தை வாரத்தில் 2 முறை தேய்த்து குளித்தால் உடல் சூடு குறையும்.

உடல் சூடு இருப்பவர்கள் தயிர், மோர், நெய் வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

டிப்ஸ் 2:

பருப்பு கீரை 

உடல் சூடு உள்ளவர்கள் கண்டிப்பாக உணவில் கீரைகளை சேர்த்து சாப்பிட வேண்டும். கீரை வகைகளில் முக்கியமாக பருப்பு கீரையை சேர்த்து சாப்பிட்டு வந்தால் நிச்சயமாக உடலில் இருக்கும் வெப்பத்தன்மை நீங்கும்.

டிப்ஸ் 3:

நெல்லிக்காய் 

நெல்லிக்காயை உடல் சூடு இருப்பவர்கள் தினமும் எடுத்து கொள்வது மிகவும் நல்லது. நெல்லிக்காய் உடலில் இருக்கும் சூட்டை குறைக்கும் தன்மை வாய்ந்தது.

டிப்ஸ் 4:

வெண்பூசணி, கல்யாண முருங்கை, மணத்தக்காளி 

உடல் சூடு, உடல் உஷ்ணம் உள்ளவர்கள் வெண்பூசணி, கல்யாண முருங்கை, மணத்தக்காளி போன்ற ஏதேனும் ஒரு கீரை வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த கீரைகள் உடல் சூட்டை குறைத்து உடலில் இருக்கும் ஆர்கான்ஸ்களை நன்கு செயல்படுத்தும் தன்மையை கொண்டுள்ளது.

டிப்ஸ் 5:

திராட்சை

உடலில் அதிகமான வெப்பம் உள்ளவர்கள் திராட்சை பழத்தை சாப்பிடலாம். திராட்சை பழம் சாப்பிட விரும்பாதவர்கள் ஜூஸ் போட்டும் குடிக்கலாம். வெப்பத்தன்மை குறையும்.

newஹீமோகுளோபின் அதிகரிக்க இது ஒன்னு போதும்..!

 டிப்ஸ் 6:

தாமரை பூ 

உடல் சூடு உள்ள நபர்கள் தினமும் தாமரை பூ இதழ்களை நன்றாக மென்று சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும்.

இருதயமும் தாமரை பூ இதழ்களை சாப்பிடுவதால் நன்கு வளர்ச்சி அடையும்.

டிப்ஸ் 7:

வெள்ளை வெங்காயம்

வெள்ளை வெங்காயத்தை உடலில் சூடு உள்ளவர்கள் உணவில் இதை சேர்த்து சாப்பிட்டுவர உடல் சூடு தணியும்.

டிப்ஸ் 8:

சீரக தண்ணீர் 

உடல் சூடு உள்ளவர்கள் 1 டீஸ்பூன் சீரகம் எடுத்து கொள்ளவும். 1 டீஸ்பூன் சீரகத்தை தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரை அருந்தி வர உடல் சூடு முற்றிலும் குறையும்.

டிப்ஸ் 9:

அருகம்புல் மற்றும் கற்றாழை சாறு

உடல் சூடு குறைய அருகம்புல் சாறு மற்றும் கற்றாழை சாறுவை குடித்து வந்தால் உடலில் இருக்கும் சூடு பிரச்சனை நீங்கும்.

டிப்ஸ் 9:

கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி துவையல்

உடல் அதிக வெப்பநிலை கொண்டவர்கள் வாரத்தில் 2 முறை கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி துவையல் அரைத்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு நீங்கி உடல் எப்போதும் குளிர்ச்சியான நிலையில் இருக்கும்.

உடல் சூடு என்பது ஆண்கள், பெண்கள் என இருவருக்கும் உள்ள பிரச்சனை ஆகும். அதிக தண்ணீர் குடிக்காமல் இருப்பதனால் கூட உடல் சூடு பிரச்சனை வர காரணமாய் உள்ளது.

உடல் சூடு குணமாக இந்த டிப்ஸ்களை பின்பற்றி நன்மை அடையுங்கள்.

newநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? Noi Ethirpu Sakthi Tharum Unavugal Tamil..!



உடல் சூடு குறைய பாட்டி வைத்தியம் (Reduce Body Heat)..!

குதிகால் வெடிப்பு நீங்க சில இயற்கை வைத்தியம்..!

உடல் சூடு குறைய பாட்டி வைத்தியம்

Udal Soodu thaniya tips in tamil:

சரி இந்த உடல் உஷ்ணத்தை தணிக்க (Reduce Body Heat) நம் வீட்டில் இருக்கும் சில பொருட்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எனவே நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை பயன்படுத்தி உடல் உஷ்ணத்தை எப்படி குறைக்கலாம் என்பதை பற்றி இப்போது நாம் காண்போம்.

உடல் சூடு குறைய எண்ணெய் செய்ய தேவையான பொருட்கள்:

  • நல்லெண்ணெய் – 1/2 குளிக்கரண்டி அளவு
  • பூண்டு – மூன்று பற்கள்
  • மிளகு – 5

2 நிமிடத்தில் உடல் சூடு குறைய எண்ணெய் செய்முறை:

அடுப்பில் ஒரு வாணலியை வைக்கவும். அவற்றில், சிறிதளவு நல்லெண்ணெய்யை ஊற்றவும், இப்போது அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொள்ளவும்.

பின்பு தோல் நீக்காத பூண்டு மூன்று பற்கள், ஐந்து மிளகு ஆகியவற்றை சேர்த்து மிதமான சூட்டில் இரண்டு நிமிடங்கள் வரை பொறித்து, பின்பு அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.

பிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..!

2 நிமிடத்தில் உடல் சூடு குறைய எண்ணெய்  பயன்படுத்தும் முறை:

இந்த எண்ணெயை மிதமான சூட்டில் எடுத்து கொண்டு, உங்கள் கால் விரலின் பெருவிரலில் தடவி, இரண்டு நிமிடம் கழித்து, கால்களை கழுவவும்.

இந்த எண்ணெயை மனம் அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் உடல் உஷ்ணம் உள்ளவர்கள் பயன்படுத்தலாம்.

காய்ச்சல், இருமல், சளி போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் பயன்படுத்தக்கூடாது.

குறிப்பு:

உடல் சூடு குறைய இந்த எண்ணெயை இரண்டு நிமிடத்துக்கு மேல் தங்கள் கால்விரல்களில் வைத்திருக்க வேண்டாம். இந்த எண்ணெய் குளிர்ச்சி தன்மை உடையதால் சளி, காய்ச்சல், இருமல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே இரண்டு நிமிடங்கள் வரை வைத்திருந்தாலே போதும்.

உடல் சூடு குறைய விளக்கெண்ணெய்:-

சிலருக்கு உடல் அதிகமாக சூடாக இருக்கு அப்படி பட்டவர்கள் வாரத்தில் ஒரு முறை இரவு உறங்குவதற்கு முன் தொப்பிளில் 2 துளிகள் விளக்கெண்ணெய் வைத்து உறங்குங்கள்.

இவ்வாறு செய்வதினால் உடல் உள்ள சூடு குறையும்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil