உடல் எடை குறைய தேன் – Honey for Weight Loss in Tamil
நண்பர்களுக்கு வணக்கம்.. தேன் பொதுவாக பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு மிகவும் சிறந்த மருத்துவ பொருள் என்று அனைவருக்கும் தெரிந்திருக்கும். குறிப்பாக தேனை பயன்படுத்தி பெண்கள் பலவகையான அழகு குறிப்புகளையும் பின்பற்றுவார்கள். அதிலும் தேன் உடல் எடையை குறைக்க ஒரு சிறந்த பொருள் என்று சொல்லலாம். அதாவது தேனுடன் சில பொருட்களை கலந்து சாப்பிட்டுவருவதன் மூலம் உங்கள் எடையை மிக வேகமாக குறைத்துவிடலாம் அது என்னென்ன பொருட்கள், எப்படி சாப்பிட வேண்டும் போன்ற தகவலை கீழ் படித்தறியலாம் வாங்க.
தேன் மற்றும் எலுமிச்சை சாறு:
Honey for Weight Loss in Tamil – இந்த தேன் மற்றும் எலுமிச்சை சாறை சரியான முறையில் பயன்படுத்தினீர்கள் என்றால் உடலில் உள்ள அளவுக்கு அதிகமான கொழுப்புகளை எறியப்படும். இதனால் உடல் எடை மிக எளிதாக குறைய ஆரம்பிக்கும். ஆகவே தண்ணீரை லேசாக சூடாக்கி கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். நன்றாக இரண்டையும் கலந்து சூடு ஆறிய பின்னர் பருகலாம். இதனை காலை உடற்பயிற்சி செய்த பின்னர் பருகும் போது நல்ல பலனளிக்கும். இதனை தொடர்ந்து இரண்டு வாரம் செய்து வர நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
தேன் மற்றும் இஞ்சி:
Honey for Weight Loss in Tamil – உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த டிப்ஸை கூட ட்ரை செய்து பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும். அதவாது 250 கிராம் நீரில், சிறிதளவு இஞ்சியை இடித்து போட்டு நன்றாக காய்ச்சி கொள்ளுங்கள் அதாவது நீரானது 200 கிராம் வரும் அளவிற்கு நன்றாக காய்ச்சி கொள்ளுங்கள். பின் வடிகட்டி மிதமான சூட்டில் 50 கிராம் தேன் கலந்து காலை வெறும் வயிற்றில் பருக வேண்டும். இந்த டிப்ஸை தொடர்ந்து 90 நாட்கள் பின்பற்ற வேண்டும். இவ்வாறு செய்வதினால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் நீங்கி. உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.
இதை கிளிக் செய்து படியுங்கள் 👉 உடல் எடை குறைய உணவு அட்டவணை |
தேன், இலவங்கப்பட்டை தூள் மற்றும் பூண்டு:
Honey for Weight Loss in Tamil – வாயு தொல்லைக்கு பூண்டு மிகவும் சிறந்த மருத்துவ பொருள் என்று சொல்லலாம். இந்த பூண்டை பயன்படுத்தி கூட நமது உடல் எடையை மிக எளிதாக குறைக்க முடியும். அதாவது ஒரு டம்ளர் சூடான நீரில் 1/2 ஸ்பூன் இலவங்கப்பட்டை தூளை சேர்த்து கலந்துவிடுங்கள், பின் அந்த நீரை நன்றாக ஆறவைக்கவும். நீர் நன்றாக ஆரிய பின் ஒரு ஸ்பூன் தேன் கலந்து பருக வேண்டும். அதுவும் இந்த நீரை காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றி பருக வேண்டும். இவ்வாறு 30 நாட்கள் பருகி வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் கரைத்து. உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in Tamil |