ஆண்கள் தலை முடியை பராமரிக்கும் பொழுது செய்யும் சில தவறுகள்

Advertisement

ஆண்களுக்கான தலை முடி பராமரிப்பு 

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் ஆண்கள் தங்களது முடியை பராமரிக்கும் பொழுது செய்யும் சில தவறுகளையும், முடியை எப்படி பராமரிப்பது என்றும் தெரிந்துகொள்ளலாம். பொதுவாகவே முடியை பெண்கள் தான் அதிகமாக பராமரித்து வருவார்கள். முடியை எப்படி பாதுகாப்பது, அதற்கு எந்த எண்ணெய்யை பயன்படுத்துவது என்று தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் ஆண்கள் இதை கவனிப்பதே இல்லை, இதனால் இளம் வயதிலே முடி உதிர்வது, வழுக்கை போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இது போன்ற  பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கு நம் பதிவில் சில குறிப்புகளை பார்க்கலாம் வாங்க.

ஆண்களுக்கான ஹேர் ஸ்டைல்..!

ஆண்கள் தலை முடியை பராமரிக்கும் பொழுது செய்யும் தவறுகள்:

ஆண்கள் அவசர அவசரமாக குளிக்கும் பொழுது தலை முடியை ஒழுங்காக அலசாமல் வந்தால், அந்த ஷாம்புவில் உள்ள வேதிப்பொருட்கள் தலை முடியின் ஆரோக்கியத்தை பாதித்து முடி உதிர்வை ஏற்பட செய்யும்.

தலை குளித்த பிறகு தலை முடி காய்வதற்கு முன்பு ஹேர் ஜெல் போன்ற பொருட்களை தலை முடியில் உபயோகிப்பதால் முடியை உதிர செய்து, இளம் வயதிலே வழுக்கை ஏற்படுவதற்கு காரணமாகவும்  உள்ளது.

குளிக்கும் பொழுதும், தலை முடியை காயவைக்கும் பொழுது  தலை முடிக்கு அதிகமா அழுத்தம் கொடுப்பதாலும் தலை முடி உதிர்வதற்கு காரணமாக இருக்கிறது.

ஆண்கள் தலை முடியை பராமரிக்கும் முறை:

முதலில் உங்களுக்கு ஏற்ற ஷாம்புவை பயன்படுத்த வேண்டும். குளிக்கும் பொழுது தலைமுடியை சுத்தமாக அலசவேண்டும். இப்படி செய்வதால் முடி உதிர்வு பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். ஷாம்புவை பயன்படுத்திய பிறகு தலை முடியை மென்மையாக்குவது மிகவும் அவசியம்.

ஒரு ஷாம்புவை உபயோக்கிக்கும் பொழுது மற்றொரு ஷாம்புவை உபயோகிப்பதை தவிர்ப்பது நல்லது. அல்லது நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு பயனாக இல்லை என்றால் வேற ஷாம்புவை மாற்றிக்கொள்ளலாம்.

ஆரோக்கியமான முடியை பெறுவதற்கு தினமும் எண்ணெய் தேய்ப்பது அவசியம். வெதுவெதுபான எண்ணெய்யை கொண்டு தினமும் தலை முடி வேர்களில் படுவது போல மசாஜ் செய்வது மிகவும் அவசியம். இப்படி செய்வதால் தலை முடி வளர்வதற்கு உறுதியாக இருக்கும்.

சில ஆண்கள் தலை சீவும் பொழுது வேகமாக சீவுவார்கள்  இப்படி செய்வதால் அதிகப்படியன  முடி உதிர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. தலை சீவும் பொழுது தலை முடியை பொறுமையாக கையாளுவது மிகவும் அவசியம்.

சில ஆண்களுக்கு சிறிய வயதிலேயே நரை முடி போன்ற பிரச்சனைகள் இருக்கும், இது போன்ற பிரச்சனைகளை தீர்வு செய்வதற்கு ஹேர் டை உபயோகிப்பார்கள். ஹேர் டை உபயோக்கிக்கும் பொழுது ஆயுர்வேதம் நிறைந்த ஹேர் டை உபயோகிப்பதால் முடி உதிர்வு பிரச்சனைகளில் இருந்து தடுக்கலாம்.

 

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil
Advertisement