கண்களை சுற்றி கருவளையம் வருவதற்கு நாம் செய்யும் சின்ன தவறுகள் தான் காரணம்..!

How to Reduce Dark Circles in Tamil

பொதுவாக நம்மில் பலருக்கும் இந்த கேள்வி இருக்கும். அவ்வளவு ஏன் நம்மில் பலருக்கு இந்த பிரச்சனை இருக்கும். அது என்னவென்றால் கருவளையம் தான். இந்த கருவளையம் வருவதற்கு காரணம் கேட்டால் வீட்டில் கஷ்டம் வந்தால் இந்த பிரச்சனை வரும் என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் என்ன தான் காரணம் நமக்கு ஏன் இது போல் கருவளையம் வருகிறது என்று கேள்வி இருக்கும். அது என்ன காரணம் மற்றும் அதற்கு என்ன தான் தீர்வு என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்வோம் வாங்க..!

What is The Reason of Dark Circles in Tamil:

போன் அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால் கருவளையம் வருகிறது.

அதேபோல் கம்ப்யூட்டர், சிஸ்டெம் அதிகமாக பார்ப்பதாலும், Tv –யை அதிகம் பார்ப்பதாலும் இந்த கருவளையம் வருகிறது.

இது மட்டுமில்லாமல் கண்களில் அலர்ஜி வருவதாலும் இந்த கருவளையம் வரும்.  அப்படி அலர்ஜி வந்தால் கண்களை போட்டு கசக்குவதை தவிர்க்கவும்.

கண்களை சுற்றி உள்ள கருவளையம் மறைய இந்த பொருள் மட்டும் போதும்.

அதேபோல் அளவுக்கு அதிகமாக வெயிலில் இருப்பதாலும் இந்த கருவளையம் வரும். அதாவது வெயிலில் அதிகமாக செல்வதால் நம்முடைய உடலில் மெலனின் அதிகம் ஏற்படும். அதனால் கருவளையம் வரும். இந்த மெலனின் என்பது நம்முடைய தோலில் நிறத்தை கொடுக்கக்கூடியது. இது அதிகமாக சுரப்பதால் இது அதிகமாக மாறும்.

அடுத்து நம்முடைய முன்னோர்கள் அதாவது அம்மா, அப்பா, தாத்தா என்று நம்முடைய சொந்தத்தில் இந்த பிரச்சனை இருந்தால் அவர்களுக்கு இருக்கும் அந்த பிரச்சனை நமக்கும் ஏற்படும்.

அடுத்து நம்முடைய உடலில் நமக்கு தேவையான சத்துக்கள் இல்லையென்றாலும் இந்த சத்துக்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

Reduce Dark Circles Naturally in Tamil:

cold compress for dark circles

முதலில் Cold Compress இதற்கு குளிர்ந்த நீரில் காட்டன் துணியை நனைத்து நம்முடைய கண்களில் வைத்து வைத்து எடுக்கவேண்டும். அதை மிகவும் கடினமாக கையாளாமல் மிருதுவாக செய்யவேண்டும். இதுபோல தினமும் செய்யவும். இல்லையென்றால் வாரத்திற்கு 3 முறை செய்யலாம்.

cold compress for dark circles

பின்பு நன்கு தூங்க வேண்டும். குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் தூங்கவேண்டும். தூங்குவதற்கு முன் 1 மணி நேரமாவது கண்களுக்கு நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.

cold compress for dark circles

பிறகு நன்றாக தண்ணீர் குடிக்கவேண்டும். குறைத்து 3 லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும். முடிந்தளவு நமக்கு தாகம் எடுக்கும் போது நிறைய தண்ணீர் குடித்தால் அதுவே நம்முடைய கண்களை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

அதேபோல் நீர் சத்துக்கள் உள்ள பழங்களை சாப்பிடவேண்டும். ஆரஞ்சு, மாதுளை, திராட்சை, எலுமிச்சை பழம், கொய்யாப்பழம், ஸ்ட்ராபெரி போன்ற பழங்களை உட்கொள்வது நல்லது.

இதையும் ட்ரை பண்ணுங்க 👉👉 கண்களை சுற்றியுள்ள கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போக இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 Health tips tamil