தண்ணீரை வைத்து இப்படியெல்லாம் கூட உடல் எடையை குறைக்கலாமா..? தெரிலைனா தெரிஞ்சுக்கோங்க..!

Advertisement

உடல் எடை குறைய 

இந்த நவீன காலத்தை பொறுத்தவரை மனிதர்களுக்கு இருக்கும் பல பிரச்சனைகளில் உடல் எடை அதிகரிப்பும் ஒன்று. இந்த உடல் எடை பிரச்சனையால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். சரி எப்படியாவது உடல் எடையினை குறைக்க வேண்டும் என்று நிறைய நபர்கள் டயட் இருக்கிறார்கள். வேறு சில நபர்கள் உடல் பயிற்சியினை செய்கிறார்கள். நாம் உணவு சாப்பிடாமல் டயட் இருப்பதனால் உடல் எடை குறைந்தாலுமே கூட அதன் பிறகு வேறு ஏதேனும் பின் விளைவுகள் வரக்கூடும். ஆகையால் இன்றைய பதிவில் உடல் எடையினை குறைக்க எளிமையான முறையில் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

தொப்பை இருந்த இடம் தெரியாமல் குறைய ஒரே ஒரு முறை இதை ட்ரை பண்ணுங்க போதும்.. 

உடல் எடை அதிகரிக்க காரணம் என்ன:

 நாம் தினமும் சாப்பிடும் உணவுகளில் அளவுக்கு அதிகமான கலோரிகளை எடுத்துக்கொள்வதன் மூலமாக உடல் எடை அதிகரிக்க செய்கிறது. 

இப்படி கலோரிகள் அதிகமாகும் போது தகுந்த உடற்பயிற்சியினை செய்யாமல் இருப்பதனாலும் கூட உடல் எடை அதிகரிக்க செய்யும்.

How to Weight Loss in Tamil:

நாம் தினமும் சாப்பிடும் உணவில் அதிகமான நன்மைகள் இல்லை என்று தான் கூற வேண்டும். இத்தகைய முறையற்ற உணவினை எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் எடை அதிகரிக்க செய்யும். அதுபோல அளவுக்கு அதிகமான கலோரிகள் இருப்பதனாலும் கூட உடல் எடை அதிகரிக்கும்.

அதனால் கலோரிகள் குறைவதற்கு உடலின் மெட்பாலிசயத்தை அதிகரிக்க செய்தால் போதும் கலோரிகள் குறைந்து உடல் எடை குறைந்து விடும். ஆகவே உடலின் மெட்டபாலியசத்தை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் குடித்தல்:

உடல் எடை குறைய 

உடலில் கலோரிகள் அதிகமாக இல்லாமல் இருப்பதற்கு உடலின் மெட்டபாலிசம் வேகமாக இருந்தால் போதும் கலோரிகள் அனைத்தும் வேகமாக எரிக்கப்படும். ஆகையால் தினமும் சரியான அளவில் குளிர்ச்சியான தண்ணீர் குடித்து வருவதன் காரணமாக மெட்டபாலிசம் 25% அதிகரித்து அதன் மூலம் உடலின் கலோரிகள் குறைந்த உடல் எடை குறையக்கூடும். 

உங்களின் உடல் எடை ஒரே வாரத்தில் அதிகரிக்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க.. 

நல்ல தூக்கம்:

நல்ல தூக்கம்

நாம் முறையற்ற சாப்பாட்டினை சாப்பிடுவதன் மூலம் உடல் எடை அதிகரிக்க செய்யும். அதுமட்டும் இல்லாமல் நாம் சரியான அளவு தூங்கவில்லை என்றாலும் கூட நம்முடைய உடல் எடை அதிகரிக்க செய்யும்.

ஆகவே நாம் தினமும் சரியான அளவில் தூங்க வேண்டும். இப்படி தூங்குவதன் காரணமாக உடலில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தும் சமநிலை அடைந்து உடல் எடை விரைவில் குறைய தொடங்கும்.

புரதச்சத்து நிறைந்த உணவு:

புரதச்சத்து

புரதச்சத்து நிறைந்த உணவுகளை நாம் சாப்பிட்டால் வெகு நேரம் பசி எடுக்காமல் மந்தமாக இருக்கும். இப்படி இருந்தாலும் கூட உடலில் கலோரிகள் அதிகமாக சேராமல் இருப்பதற்கு புரதச்சத்து நிறைந்த உணவுகள் தான் பயனளிக்கிறது.

எனவே கொழுப்புச்சத்து மற்றும் மாவுச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடாமல் புரதச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடல் எடை விரைவில் குறைய செய்யும்.

இந்த மூன்று முறைகளை செய்ததோடு மட்டும் இல்லாமல் தகுந்த உடற்பயிற்சியினையும் செய்ய வேண்டும். அப்போது தான் உடல் எடை நீங்கள் எதிர்பார்த்த மாதிரி குறையும். 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil
Advertisement