பலாப்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு தீமைகளா..?

Advertisement

பலாப்பழம் நன்மைகள் தீமைகள்

வாசகர்களுக்கு வணக்கம்..! இன்று நம் பதிவின் வாயிலாக பலாப்பழத்தின் தீமைகள் பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பலாப்பழத்தின் மேல் பகுதி முள்ளாகவும், கடுமையாகவும் இருந்தாலும் அதனின் உள்பகுதி ருசியாக இருக்கும். அதனாலேயே பலாப்பழத்தை விரும்பி சாப்பிடுவார்கள். இதில் நன்மைகளும், சத்துக்களும் இருக்கின்றன. ஆனால் நன்மை போலவே தீமையும் இருக்கின்றது. அதனால் இந்த பதிவின் மூலம் பலாப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

பலாப்பழம் தீமைகள்:

வயிற்று வலி:

 பலாப்பழம் நன்மைகள் தீமைகள்

பலாப்பழம் ருசியாக இருக்கிறது என்று அதிகமாக சாப்பிட கூடாது. அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் வயிற்று வலி மற்றும் வாந்தி பிரச்சனையை ஏற்படுத்த கூடும்.

செரிமான பிரச்சனை, வயிற்றுவலி, ஏப்பம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

இரைப்பை குடல் பிரச்சனை:

 பலாப்பழம் நன்மைகள் தீமைகள்

 பலாப்பழம் சாப்பிடுவதால் இரைப்பை குடல் பிரச்சினைகளை ஏற்படுத்தும். பலாப்பழத்தில் ஃப்ரக்டான்ஸ் என்ற ஒரு கலவை உள்ளது, இது சிலருக்கு வாயு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும் ஒரு கார்போஹைட்ரேட் வகை. கூடுதலாக, பலாப்பழ விதைகளில் லெக்டின்கள் உள்ளன, அவை கார்போஹைட்ரேட்டுகளுடன் பிணைக்கக்கூடிய மற்றும் குடல் அசௌகரியத்தை ஏற்படுத்தும் புரதங்கள். 

பலாப்பழத்தின் நன்மைகள்..!

ஆரோக்கியத்திற்கு தீங்கானது:

மேலும், பலாப்பழம் வெப்பமண்டல காலநிலையில் பயிரிடப்படுவதால், பூச்சிகள் பயிரை சேதப்படுத்தாமல் இருக்க பூச்சிக்கொல்லிகளை தெளிக்கலாம். இருப்பினும், இந்த பூச்சிக்கொல்லிகள் அதிக அளவில் உட்கொண்டால் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

அலர்ஜி:

சில நபர்களுக்கு  பலாப்பழம் அலர்ஜியை ஏற்படுத்தும். பலாப்பழம் ஒவ்வாமையின் அறிகுறிகளில் அரிப்பு, வீக்கம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஆகியவை அடங்கும். பலாப்பழம் சாப்பிட்ட பிறகு இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் சந்தித்தால், நீங்கள் விரைவில் மருத்துவரை அணுக வேண்டும்.

யாரெல்லாம் பலாப்பழம் சாப்பிட கூடாது:

செரிமான பிரச்சனை உள்ளவர்கள், வயிற்றில் ஏதும் பிரச்சனைக்கு இருப்பவர்கள் பலாப்பழத்தை சாப்பிட கூடாது.

உடல் பருமனாக இருப்பவர்கள் பலாப்பழம் சாப்பிட கூடாது. 

சர்க்கரை நோயாளிகள் பலாப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்கள் பலாப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

பலாப்பழத்தை செங்காயாக இருக்கும் போதோ அல்லது நன்றாக பழம் பழுக்காமல் சாப்பிட்டாலோ செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும்.

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் சாப்பிட கூடாது.

பலாப்பழம் பயிரிடும் முறையும் அதன் பயன்களும்..!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 Health tips tamil

 

Advertisement