ஜாதிக்காய் பயன்கள் | Jathikai Uses in Tamil

ஜாதிக்காய் மருத்துவ பயன்கள் | Jathikai Payangal

Jathikai Uses in Tamil:- நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.. இன்றைய பதிவில் ஜாதிக்காய் மருத்துவ பயன்களை பற்றி தெரிந்து கொள்வோம். இந்த ஜாதிக்காயில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது. இந்த ஜாதிக்காய் கனியின் உள்ளே இருக்கும் விதை தான் ஜாதிக்காய். கனிக்கும் விதைக்கும் இடையே விதையைச் சுற்றி இருக்கும் மெல்லிய தோல் போன்ற பகுதி தான் ஜாதிபத்திரி. இவற்றில் விதையும் ஜாதிபத்திரி இதழும் தான் அதிக  நறுமணமும் மருத்துவக்குணமும் கொண்டது. இந்த ஜாதிக்காயை மருந்தாக பயன்படுத்துவதன் மூலம் விந்துக்களின் எண்ணிக்கை குறைவு, வயிற்று போக்கு, ஆஸ்துமா போன்ற பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகளை குணப்படுத்தலாம். சரி இந்த பதிவில் ஜாதிக்காய் மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாமா?

ஜாதிக்காய் நன்மைகள் | Nutmeg Uses in Tamil

வயிற்றுப்போக்கு குணமாக:-

Diarrhoea

ஜாதிக்காய் மற்றும் சுக்குத்தூள் இரண்டையும் சம அளவு எடுத்து கொள்ளுங்கள். மேலும் இதனுடன் இரண்டு பங்கு சீரகம் சேர்த்து நன்றாக பொடி செய்து கொள்ளுங்கள். இந்த பொடியினை தினமும் உணவருத்துவதற்கு முன் மூன்று சிட்டிகை அளவு சாப்பிட்டு வருவதன் மூலம் வயிறு சம்மந்தப்பட்ட எந்த பிரச்சனைகளும் வராது. அதாவது வயிற்றில் ஏற்படும் வாயு தொல்லை மற்றும் அஜீரண பிரச்சனைகள் குணமாகும். அதேபோல் பாக்டீரியா மற்றும் வைரஸ் காரணமாக ஏற்படும் அனைத்து வகையான வயிற்றுப்போக்கு பிரச்சனைகளும் குணமாகும்.

இயற்கை தந்த கடுக்காய் மருத்துவ குணங்கள்..!

மன அழுத்தம் நீங்க:-

Jathikai Uses in Tamil: வாழ்க்கையில் ஏற்படும் பலவகையான பிரச்சனைகளினால் பலரும் இப்பொழுது மன அழுத்த பிரச்சனையை சந்தித்து வருகின்றனர். இந்த மன அழுத்த பிரச்சனையை சரி செய்ய ஜாதிக்காய் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இரவு உறங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை ஜாதிக்காய் பொடியுடன் பசும்பால் கலந்து சாப்பிட்டு வர மன அழுத்தம் பிரச்சனை குணமாகும். மேலும் நரம்புகள் வலிமை பெரும், மன அழுத்தத்தினால் ஏற்படும் தூக்கமின்மை பிரச்சனை சரியாகும்.

பனங்கற்கண்டு நன்மைகள்

மாதவிடாய் பிரச்சனை குணமாக:-

நன்றாக சுத்தம் செய்த ஜாதிக்காய், கிராம்பு, ஏலக்காய், பச்சைக் கற்பூரம், சணல் விதை, வெண்கொடிவேலி வேர் ஆகியவற்றை சம அளவு எடுத்து கொள்ளுங்கள். பின் நன்றாக பொடி செய்து ஒரு சுத்தமான பாட்டிலில் வைத்துக்கொண்டு தினமும் பயன்படுத்தி வரலாம். இந்த ஜாதிக்காய் பொடியை மாதவிடாய் பிரச்சனை உள்ள பெண்கள் தொடந்து சாப்பிட்டு வர வயிற்று வலி, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தீவிர வலி போன்ற பிரச்சனைகள் குணமாகும். மேலும் ஒற்றை தலைவலி பிரச்சனை உள்ளவர்களும் இந்த ஜாதிக்காய் பொடியை சாப்பிட்டு வர ஒற்றைத் தலைவலி பிரச்சனை குணமாகும்.

40 கீரை வகைகள் அதன் பயன்களும்..!

இரத்த சுத்திகரிப்பு:-

Nutmeg Uses in Tamil: அமிலத்தன்மை இல்லாத தாவர வகையை சேர்ந்த காய் எது என்றால் அதனை ஜாதிக்காய் என்று சொல்லலாம். எனவே தினமும் பாலில் சிறிதளவு ஜாதிக்காய் பொடியினை சேர்த்து அருந்தி வர உடலில் இரத்தத்தில் உள்ள கழிவுகள் நீங்கி, இரத்தத்தில் படியும் கெட்ட கொழுப்புகளை தடுத்து, இரத்தத்தை சுத்தம் செய்கின்றது. மேலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த ஜாதிக்காய் பொடியை இரவு உறங்குவதற்கு முன் பாலில் கலந்து அருந்தி வரலாம். இதன் மூலம் தங்களது நோய் எதிர்ப்பு சக்தியை எளிதாக அதிகரிக்கலாம்.

ஆண்மைக்குறைவு மற்றும் மலட்டுத்தன்மை நீங்க:-

இன்றைய காலத்தில் ஆண்கள் பெரும்பாலும், மன அழுத்த பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே இந்த மன அழுத்த பிரச்சனை அவர்களின் இனபெருக்க நரம்பு மண்டலத்தை பாதித்து ஆண்மை குறைவு மற்றும் மலட்டுத்தன்மை குறைபாடு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. இப்படிப்பட்ட பிரச்சனைகளை சந்திக்கும் ஆண்கள் தினமும் இரவு உறங்குவதற்கு முன் பாதம் பருப்பை அரைத்து, பசும்பாலில் கலந்து அதனுடன் சிறிதளவு ஜாதிக்காய் பொடி சேர்த்து 48 நாட்கள் அருந்தி வர நரம்புகள் வலுப்பெற்று ஆண்மைக்குறைவு மற்றும் மலட்டுத்தன்மை நீங்கும்.

வெந்தயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்