கார்போக அரிசி செடி| Karboga Arisi in Tamil
நண்பர்கள் அனைவருக்கும் எங்களது வணக்கங்கள். பொதுவாக நாம் சாப்பிடும் காய்கறிகள் , பழங்களை விட கீரைகள் மற்றும் மூலிகை செடிகளில் தான் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆகவே நாம் உணவு முறைகளில் அதிகளவு கீரைகள் மற்றும் மூலிகை செடிகளை பயன்படுத்துவது மிகவும் நல்லது. அந்த வகையில் அதில் ஒவ்வொன்றிலும் அதிகம் சத்துக்கள் நிறைந்துள்ளது. அதில் மிகவும் முக்கியமாக கார்போக அரிசியில் அதிகளவு சத்துக்கள் இருக்கிறது. அதனை பற்றி தெளிவாக இந்த பதிவில் காண்போம்.
தோல் நோய்களை போக்குகிறது:
- இந்த கார்போக அரிசி தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இது அற்புதமான மருந்தாக இருக்கிறது. இந்த கார்போக விதை கருமை நிறமாக இருக்கிறது. இது வெண்புள்ளி, வெண்குஷ்டம் போன்ற நோய்களுக்கு சிறப்பான மருந்தாக இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் நம் உடலில் உள்ள உறுப்புகளை சுத்தப்படுத்துகிறது. கார்போக அரிசிக்கு வேறு பெயர்கள் இருக்கின்றன குஷ்டநாசினி, சோமவள்ளி என்ற பெயர்களும் உண்டு. இது அதிக அளவில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த அரிசி புற்றுநோய், பூஞ்சை காளான்கள் போன்ற நுண் கிருமிகளை அழிக்கிறது.
வயிற்று பிரச்சனை தீர:
- கார்போக அரிசி பொடி 2 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும். சிறிது மஞ்சள் தூள் சேர்க்கவும். பின்னர் அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர வயிற்று பூச்சிகள் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.
வெண்குஷ்டம் குணமாக மருந்து:
- கார்போக அரிசி, மஞ்சள்தூள் அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து வெண்குஷ்டம் மேல் தடவி வர வெண்குஷ்டம் மறையும்.
வியர்வை துர்நாற்றம் நீங்க:
- கார்போக அரிசி 400 கிராம், பாசி பயிறு 50 கிராம், அதனுடன் கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்து வறுத்து பொடியாக அரைத்து உடம்பில் தடவி குளித்து வந்தால் உடலில் தோன்றும் வியர்வை, துர்நாற்றம் போன்ற எந்த பிரச்சனையும் வராமல் தடுக்கிறது.
சொறி சிரங்கு நீங்க:
- கார்போக அரிசியை தண்ணீரில் ஊற வைத்து அதனுடன் பால் சேர்த்து நன்கு அரைக்கவும்.
- அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து வாணலியில் ஊற்றி தைலம் போல் காய்ச்சவும். பின் ஆறியதும் வடிகட்டி தேமல், சொறி சிரங்கு இருக்கும் இடத்தில்
- சிறிது நேரம் தடவி வைத்திருக்கவும். 15 நிமிடத்திற்கு பிறகு எடுத்துவிடவும்.
இதனை தொடர்ந்து செய்து வர உடலில் தேமல், சொறி சிரங்கு வராமல் தடுக்கலாம்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> |
ஆரோக்கியமும் நல்வாழ்வும் |