கருங்குறுவை அரிசியின் பயன்கள் | Karunguruvai Rice Uses in Tamil

Advertisement

கருங்குறுவை அரிசி பயன்கள் | Karunguruvai Arisi Benefits in Tamil

பாரம்பரியம் மிக்க அரிசியில் ஒன்றானது இந்த கருங்குறுவை. நம் முன்னோர்களால் பயன்படுத்தி வந்த மருத்துவ குணமிக்க அரிசிகளில் ஒன்றாகவும் இந்த கருங்குறுவை கருதப்படுகிறது. தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடக போன்ற நாடுகளில் பயிரிடப்படுகிறது. இதனை 120-125 நாட்களில் அறுவடை செய்யப்படுகிறது. மேலும் இந்த வகை நெல் டிசம்பர் – ஜனவரி மற்றும் ஜூன் – ஜூலை ஆகிய மாதங்களில் பயிரிடப்படுகிறது. இது Oryza Sativa (அறிவியல் பெயர்) எனும் குடும்பத்தை சேர்ந்தது. இந்த அரிசியின் நிறம் கருப்பு மற்றும் சிவப்பு நிறம் கலந்து காணப்படும்.பாரம்பரியமிக்க மற்ற அரிசி வகைகளில் முதன்மை வாய்ந்தது  இந்த கருங்குறுவை. இந்த அரிசி அந்த அளவுக்கு பிரபலம் அடையவில்லை என்றாலும் இன்னும் பாரம்பரியமிக்க அரிசிகளை உண்ணும் மக்களை இந்த அரிசி வெகுவாக கவர்ந்துள்ளது என்றே கூறலாம். அப்படி என்ன இந்த அரிசியின் மருத்துவ குணம் என்று இன்றைய பொதுநலம்.காம் பதிவில் பார்க்கலாம்.

கவுனி அரிசி மருத்துவ பயன்கள்

 புற்றுநோய் செல்களை அழிக்கும்: 

karunguruvai arisi payangal

கருங்குறுவை அரிசியில் Iron, Calcium, vitamin- A, B, B12, K, புரதசத்து மற்றும் மாவுசத்து உள்ளது. மேலும் இந்த அரிசியில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் புற்றுநோய் செல்களை வளராமல் தடுக்க உதவுகிறது.

பாரம்பரிய காட்டுயாணம் அரிசி பயன்கள்

Karunkuruvai Rice Health Benefits in Tamil:

இந்த அரிசியை தொடர்ந்து சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியமாகவும், சுறுப்பாகவும் இருக்கும். மேலும் ரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. மலச்சிக்கலை குணப்படுத்தவும், மகப்பேறு அடைவதற்கும் முக்கிய மருந்தாக இந்த அரிசி பயன்படுகிறது.

karunguruvai rice uses in tamil

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலில் அதிகப்படியான கொழுப்புகளை கரைக்கவும் இந்த அரிசி பயன்படுகிறது.

அரிசி வகைகளும் அதன் பயன்களும்
பூங்கார் அரிசி பயன்கள்

கருங்குருவை அரிசி பயன்கள் – தோல் பளபளப்பாக இருக்க:

karunguruvai arisi benefits in tamil

  • Karunguruvai Rice Nutrition Facts: தேகம் பளபளப்பாகவும், வயது முதிர்வை தடுக்கவும், பித்தத்தை சரி செய்யவும் இந்த அரிசி மிகவும் சிறப்பாக பயன்படுகிறது. சித்த மருத்துவத்தில் முதன்மையான மருந்தாக இந்த கருங்குறுவை அரிசி பயன்படுகிறது.
  • Karunguruvai Rice in Tamil: மேலும் இந்த அரிசி யானைக்கால் நோய் மற்றும் காலரா போன்ற நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.
Health Benefits Of Mappillai Samba Rice in Tamil

கருங்குறுவை அரிசி சமையல்:

கருங்குறுவை அரிசியை நீங்கள் இட்லி, தோசை, ஆப்பம், புட்டு, இடியாப்பம், முறுக்கு மற்றும் கஞ்சி போன்ற வகைகளில் சமையல் செய்து சாப்பிடலாம்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்

 

Advertisement