பாரம்பரிய காட்டுயாணம் அரிசி பயன்கள்

Advertisement

காட்டுயானம் அரிசியின் பயன்கள் | Kattuyanam Rice Benefits in Tamil

நமது நாட்டில் பலவகையான அரிசி வகைகள் பயிரிடப்படுகிறது. அவை அனைத்தும் ஒவ்வொரு விதமான சத்துக்களை கொண்டுள்ளது. அந்த வகையில் பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்று காட்டுயானம். சிவப்பு வகை அரிசிகளில் சற்று தடிமனான அரிசி வகை. மற்ற அரிசி வகைகளை விட மருத்துவ குணம் அதிகம் உடையது. காட்டுயானம் ஏழு அடி உயரம் வரை வளரக்கூடிய நெல் வகையாகும். அதாவது யானையை மறைக்கக்கூடிய அளவிற்கு வளரும் தன்மை கொண்டதாம். இதன் காரணமாகவே இந்த நெற்பயிர்க்கு “காட்டுயானம்” என்ற பெயர் வந்தது. சரி இந்த பதிவில் காட்டுயானம் அரிசியின் பயன்கள் பற்றி படித்தறியலாம்.

அரிசி வகைகளும் அதன் பயன்களும்..!

Kattuyanam Rice Health Benefits in Tamil..!

நீரிழிவு நோய் குணமாகும்

நீரிழிவு நோய்

நீரிழிவு நோயாளிகள் (Diabetes) உங்களுடைய உணவு முறையில் இந்த காட்டுயாணம் வரிசையை பயன்படுத்துவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். உங்களது சர்க்கரை நோய் குணமாகும். உடலில் சர்க்கரை அளவு சமநிலையாக இருக்கும். மேலும் டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது.

புற்றுநோய் குணமாகும்

புற்றுநோய்

காட்டுயாணம் அரிசியை உட்கொள்வதன் மூலம் உடலில் உருவாகும் புற்று நோய் செல்களை அழித்து போராடும். மேலும் புற்றுநோயைக் (Cancer) குணப்படுத்தும் தன்மை உள்ளது. ஆகவே உங்களுக்கு புற்றுநோய் வராமல் இருக்க வேண்டும்  என்றால் உங்களுடைய உணவு முறையில் காட்டுயாணம் அரிசியினை பயன்படுத்துங்கள்.

இதய நோய் குணமாகும் – காட்டுயானம் அரிசி பயன்கள்:

காட்டுயாணம் அரிசியில் ஆண்டி ஆக்சிடன்ட் (Anti Oxidant) அதிகளவு நிறைந்திருப்பதால், இதய நோய்க்கு மிக அற்புதமான மருந்தாகும். ஆகவே இதய சம்மந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் இதனை அவசியம் உட்கொள்வது நல்லது.

Health Benefits Of Mappillai Samba Rice in Tamil

மலச்சிக்கல் பிரச்சனை குணமாக:

மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு பயன் தரும் சிறந்த மருந்தாக காட்டுயாணம் அரிசி உதவுகிறது. மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர் தொடர்ந்து காட்டுயாணம் அரிசியி.dzல் செய்த உணவை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

காட்டுயானம் அரிசியின் பயன்கள்

kattuyanam rice

இந்த அரிசி செரிமானம் ஆகி, கொஞ்சம் கொஞ்சமாக ரத்தத்தில் குளுக்கோஸை (Glucose) சேர்ப்பதால், பயணங்களில் சாப்பிடச் சிறந்தது. நீடித்த எனர்ஜி கிடைக்கும். மேலும் விந்து விருத்தியும், அதிக பலமும் உண்டாகும். பசியைத் தாமதப்படுத்தும்.

காட்டுயானம் அரிசி சமையல் – காட்டுயானம் அரிசி பயன்கள்:

காட்டுயானம் அரிசியை இட்லி, தோசை, இடியாப்பம், புட்டு, அடை, பொங்கல், கஞ்சி, பாயசம், பணியாரம் மற்றும் சாதம் வடித்தும் உண்ணலாம். மிகவும் சுவையாகவும் மற்றும் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் தரக்கூடியதாக இருக்கும்.

கவுனி அரிசி மருத்துவ பயன்கள்..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement