கீழாநெல்லி பயன்கள் | Keelanelli Uses in Tamil
Phyllanthus Niruri in Tamil: நண்பர்கள் அனைவருக்கும் பொதுநலம்.காம்-ன் அன்பான வணக்கம்..! இன்றைய பதிவில் மிகப்பெரிய கொடிய நோய்களையும் எளிதாக சரிசெய்ய கூடிய அற்புத மூலிகை செடித்தான் இந்த கீழாநெல்லி. இந்த கீழாநெல்லி பல மருத்துவ குணங்களும், எண்ணற்ற நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. கீழாநெல்லியை கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி என்ற வேறு பெயராலும் அழைக்கிறார்கள். கீழாநெல்லியின் இலைகளானது புளிய மரத்தின் இலைகளை போன்றே காட்சி தரக்கூடிய ஒன்று. இந்த கீழாநெல்லியின் இலைகளில் அதிகமாக கசப்பு தன்மையும், பொட்டாசியம் சத்தும் நிறைந்துள்ளது. சரி இப்போது பல மருத்துவ குணம் நிறைந்த கீழாநெல்லியை எந்தெந்த நோய்க்கு எப்படி எடுத்துக்கொண்டால் அந்த நோயிலிருந்து எப்படி விடுபடலாம் என்பதை பற்றி படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!
கரிசலாங்கண்ணி மருத்துவ குணங்கள் |
மஞ்சள் காமாலை குணமாக:
மஞ்சள் காமாலை என்ற நோய் குணமாக கீழாநெல்லி இலையினை பறித்து நன்றாக கழுவி சுத்தமான இலையை அரைத்து வைத்துக்கொள்ளவும். அரைத்து வைத்துள்ள கீழாநெல்லி இலையுடன் எலுமிச்சை சாறு மற்றும் மோர் கலந்து குடித்து வந்தால் மஞ்சள் காமாலை உடனடியாக குணமாகும்.
சர்க்கரை நோய் குணமாக:
கீழாநெல்லி இலையினை நன்கு உலர வைத்து பொடி செய்து காலை, மாலை மற்றும் இரவில் உணவு சாப்பிடுவதற்கு முன்பு எடுத்துக்கொண்டால் உடலில் இருக்கும் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். மேலும் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்புக்களைத் தடுத்து டயாலிஸிஸ் செய்வதிலிருந்து நம்மை பாதுகாப்பாக வைத்திருக்கும்.
உடல்சூடு மற்றும் வைரஸ் நோய்கள் வராமல் தடுக்க:
வெயிலில் உடற்சூட்டினால் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர் வரையிலும் அவதிப்படுவார்கள். உடற்சூடு பிரச்சனையிலிருந்து தப்பிக்க கீழாநெல்லி வேரினை நன்றாக அரைத்து பசும்பாலுடன் கலந்து குடித்துவர உடலில் இருக்கும் சூடு குறைந்து உடலானது குளிர்ச்சியாக இருக்கும். எந்த வித தொற்று நோய்களும் நம்மை அண்டாது.
வயிற்று புண் முற்றிலும் சரியாக:
அல்சரினால் உண்டாகக்கூடிய வயிற்று புண் குணமாகுவதற்கு கைப்பிடி அளவுக்கு கீழாநெல்லி இலையினை நன்றாக அரைத்து 1 டம்ளர் அளவு மோரில் கலந்து குடித்து வர வயிற்று புண் மற்றும் வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களும் முற்றிலும் குணமாகிவிடும்.
தலைவலி நீங்க:
நல்லெண்ணெய் இரண்டு டீஸ்பூன், கீழாநெல்லி வேர், சீரகம் மற்றும் பசும்பால் அனைத்தையும் சேர்த்து நன்றாக வடிகட்டிய பிறகு அந்த சாறினை குடித்து வந்தால் எப்படிப்பட்ட தலைவலியும் உடனடியாக பறந்தோடிவிடும்.
சொறி சிரங்கு குணமாக:
உடலில் ஏற்படும் சொறி சிரங்கு குணமாக கீழாநெல்லி இலையுடன் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக் அரைத்து குளித்து வர உடலில் அரிப்பு, சொறி சிரங்குகள் முற்றிலும் குணமாகிவிடும்.
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் நோயை குணப்படுத்தும்:
பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் வெள்ளைப்படுதல் பிரச்சனை ஏற்படும். வெள்ளைப்படுதல் நோயை சரி செய்வதற்கு கையளவு கீழாநெல்லி இலையை நன்றாக நசுக்கிக் கொள்ளவும். பிறகு அதை மூன்று டம்ளர் அளவு தண்ணீரில் சேர்த்து ஒரு டம்ளர் அளவிற்கு நீர் வரும்வரை நன்றாக அடுப்பில் வைத்து காய்ச்சவும். காய்ச்சிய தண்ணீரை காலை, மாலை என இரு வேளையிலும் குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் பிரச்சனை இருக்காது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips In Tamil |