சிறுநீரக கல் வராமல் இருக்க சில டிப்ஸ்..!

சிறுநீரக கல் கரைய வீட்டு வைத்தியம்

சிறுநீரக கல் வராமல் இருக்க சில டிப்ஸ்..!

சிறுநீரக கல் கரைய வீட்டு வைத்தியம் – பொதுவாக உடலில் நீர் பற்றாக்குறை போன்ற சில காரணமாக இரத்தத்தில் நீர் பிரியும் போது ஏற்படுவது தான் சிறுநீரக கல் அதாவது Kidney Stone.

இந்த சிறுநீரக கற்கள் (Kidney Stone) எப்படி உருவாகிறது என்பதையும், அதற்கான காரணங்களையும், சிறுநீரக கற்கள் வராமல் இருப்பதற்கு சில வழி முறைகளையும் இந்த பகுதியில் நாம் காண்போம்.

அல்சர் குணமாக பாட்டி வைத்தியம் ..! Ulcer முற்றிலும் குணமாக Tamil…

காரணங்கள்:-

சிறுநீரக கல் வர காரணம்: 1 

இந்த பிரச்சனை எப்படி தோன்றுகிறது என்றால் சுற்றுசூழல் காரணமாக அதாவது நாம் தினமும் குடிக்கும் தண்ணீரில் அதிகளவு சுண்ணாம்பு சத்து இருந்தால் இந்த சிறுநீரக கற்கள் ஏற்படுகிறது.

சிறுநீரக கல் வர காரணம்: 2

தினமும் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் அருந்தாமல் இருப்பது, சிறுநீர் கழிக்காமல் இருப்பதினால் இந்த கற்கள் உருவாகின்றது.

சிறுநீரக கல் வர காரணம்: 3

பரம்பரரை பரம்பரையாக உள்ளவர்களுக்கு இந்த நோய் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அதாவது அம்மா, தாத்தா, பாட்டி, அப்பா ஆகியவர்களுக்கு இந்த நோய் இருந்தால் அவர்கள் பிள்ளைகளுக்கு இந்த நோய் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

சிறுநீரக கல் அறிகுறி:-

அடிவயிற்றில் வலியோ அல்லது சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலோ அல்லது இரத்த கசிவோ ஏற்பட்டால் சிறுநீரக கற்கள் இருப்பதற்கு அறிகுறியாகும்.

இவ்வாறு அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக ஸ்கேன் செய்து பார்த்துக்கொள்வது மிகவும் நல்லது.

வயிற்று புண் மற்றும் குடல்புண்ணுக்கான மூலிகை வைத்தியம் !!!

சிறுநீரக கற்களுக்கு என்ன மருத்துவம்?

பொதுவாக மருத்துவர்கள் சிறுநீரக மண்டலத்தில் கற்கள் எந்த அளவிற்கு உள்ளது என்பதை பொறுத்து தான் மருத்துவம் செய்கின்றனர். குறிப்பாக சிறுநீரக கற்கள் 5 மில்லி மீட்டருக்கு சிறிதாக இருந்தால் அவற்றை மாத்திரைகள் மூலமாக கரைத்துவிட முடியும் என்று பரிந்துரைக்கின்றனர். மேலும் இந்த சிறுநீரக கற்களை நீக்குவதற்கு பல நவீன மருத்துவங்களும் உள்ளது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

கிட்னி கல் வராமல் தடுக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

சிறுநீரக கற்கள் வராமல் இருப்பதற்கு என்ன வழி:

சிறுநீரக கல் கரைய வீட்டு வைத்தியம்: 1

உடலுக்கு தேவையான அளவிற்கு தினமும் 2 லிட்டர் முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் அருந்தவும்.

சிறுநீரக கல் கரைய வீட்டு வைத்தியம்: 2

நீர் சத்து அதிகமுள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை தினமும் அதிகளவு சாப்பிடவும்.

சிறுநீரக கல் கரைய வீட்டு வைத்தியம்: 3

ஆடு இறைச்சி மற்றும் மாட்டிறைச்சி உட்கொள்வதை தவிர்த்து கொள்ளவும்.

சிறுநீரக கல் கரைய வீட்டு வைத்தியம்: 4

வாழை தண்டில் தாதுப்பு அதிகளவு நிறைந்துள்ளதால் சிறுநீரக கற்களை கரைப்பதற்கு அதிகளவு உதவுகிறது.  எனவே தினமும் உணவில் அதிகளவு வாழைத்தண்டு சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.

சிறுநீரக கல் கரைய வீட்டு வைத்தியம்: 5

மேலும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை தவறாமல் உட்கொள்ளவும். உணவில் அதிகளவு உப்பு சேர்த்துக்கொள்வதை தவிர்த்து கொள்ளவும்.

சிறுநீரக கல் கரைய வீட்டு வைத்தியம்: 6

சிட்ரிக் அமிலம் நிறைந்துள்ள எலுமிச்சை ஜூஸ், ஆரஞ்சு, சாத்துக்குடி ஜூஸை அதிகளவு தினமும் அருந்தி வரவும்.

கால் விரல் நகம் சொத்தை காரணம் மற்றும் குணப்படுத்தும் முறை !!!…

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil