எடையை குறைக்க உதவும் லெமன் காபி | Lemon and Coffee For Weight Loss In Tamil
உடல் பருமனாக உள்ளவர்கள் தங்களது உடல் எடையை குறைப்பதற்காக பல வகையிலும் முயற்சி செய்து வருகின்றனர். சரியான உணவு முறை மற்றும் உடற்பயிற்சி இருந்தாலே உடலில் சேரப்படும் தேவையற்ற கொழுப்புகளை கரைத்து விட முடியும். நாம் இந்த தொகுப்பில் உடல் எடையை குறைப்பதற்கு லெமன் மற்றும் காஃபி எவ்வாறு பயன்படுகிறது என்பதை படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க. இந்த பதிவு உடல் எடையை விரைவாக குறைக்க நினைப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க லெமன் காபி உடல் எடையை குறைக்க உதவுமா? என்று தெரிந்து கொள்ளலாம்.
லெமன் காபி – Lemon and Coffee For Weight Loss In Tamil:
- Coffee With Lemon for Weight Loss in Tamil: உடல் எடையை குறைப்பதற்கு எலுமிச்சை மற்றும் காபி இரண்டுமே தனித்தனியாக அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் உணவுப்பொருள்களில் ஒன்று.
- காபியுடன் எலுமிச்சை சாற்றை கலந்து குடிப்பதால் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது, ஆனால் இவை கொழுப்பை குறைப்பது சற்று கடினம் தான்.
- பசி அதிகரிப்பதை குறைக்க காபியுடன் எலுமிச்சை சாற்றை கலந்து குடிக்கலாம். இவை பசியை குறைப்பதால் உடலில் மேலும் கொழுப்புகள் சேராமல் இருக்க உதவுகின்றன.
- தலைவலியை குறைக்கவும், செரிமானத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
- தலைவலியை குறைப்பதற்கு லெமன் காபி உதவுவதாக கூறினாலும், காபியில் இருக்கும் காஃபின் என்னும் பொருள் தலைவலி வருவதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
லெமன் காபி:
- Lemon and Coffee for Weight Loss in Tamil: காபியுடன் எலுமிச்சை சாற்றை கலந்து குடிப்பதில் சில நன்மைகள் இருந்தாலும் இவை உடல் உபாதைகளை தரலாம் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்கள் லெமன் காபி குடிக்க வேண்டாம்.
- எலுமிச்சை சாற்றினை பால் கலந்த காபியில் சேர்த்து குடிக்க கூடாது, ஏனெனில் பாலில் எலுமிச்சை சாற்றினை சேர்த்தால் பால் திரிந்து விடும்.
- எலுமிச்சை சாற்றினை ப்ளாக் காபியில் சேர்த்து குடிக்க வேண்டும். ஒரு தடவைக்கு மேல் லெமன் காபியை அருந்த வேண்டாம். லெமன் காபி குடிப்பவர்கள் ஆரோக்கியமான உணவையும், உடற்பயிற்சியையும் மேற்கொள்வது நல்லது.
Lemon For Weight Loss In Tamil:
- உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள், கிருமிகள் சேராமல் இருப்பதற்கு எலுமிச்சை மிகவும் பயன்படுகிறது.
- பசியுணர்வை கட்டுக்குள் வைத்து கொள்வதற்கும், நாள் முழுவதும் ஆற்றலுடன் இருப்பதற்கும் எலுமிச்சை உதவுவதால் இது உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு சிறந்த உணவாக பயன்பட்டு வருகிறது.
- Pre-Radicals ஏற்படுத்தும் சிதைவை குணப்படுத்த எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பயன்படுகிறது.
How To Take Lemon For Weight Loss In Tamil:
- காலையில் வெறும் வயிற்றில் வெந்நீருடன், எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிப்பதன் மூலம் உடல் எடையை விரைவாக குறைக்கலாம்.
- தொப்பையை குறைப்பதற்கு வெள்ளரிக்காய் ஜூஸுடன், எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம்.
- உடல் எடையை குறைப்பதற்கு எலுமிச்சை சாறு எந்த அளவிற்கு பயன்படுகிறதோ அதே அளவிற்கு மலச்சிக்கலை சரி செய்யவும், இதய நோய், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பயன்படுகிறது.
உடல் எடை குறைய நார்ச்சத்து உணவுகள் |
உடல் எடை குறைய யோகாசனம்..! Yoga For Weight Loss..! |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in tamil |