எலுமிச்சை பழம் பயன்கள்
எலுமிச்சை பழத்தை பூஜைக்கு பயன்படுத்துவோம். ஜூஸ் போடுதவற்கு மற்றும் சாதம் செய்வதற்கு பயன்படுத்துவோம். மேலும் சில முக அழகுக்கு பேஸ் பேக்காக பயன்படுத்துவோம். எலும்பிச்சை பழத்தை எல்லாரும் பயன்படுத்தினார்கள் அதனால் நாமும் பயன்படுத்துகிறோம். ஆனால் இந்த பழத்தில் உள்ள சத்துக்கள் மற்றும் அதனுடைய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
எலுமிச்சை பழத்தில் உள்ள சத்துக்கள்:
எலுமிச்சை பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி 6, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு, பாஸ்பரஸ், துத்தநாகம், தாமிரம், பாந்தோத்தேனிக் அமிலம், நியாசின், தியாமின் மற்றும் பல வகையான புரதங்கள் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
இதையும் படியுங்கள் ⇒ எலுமிச்சை மரத்தில் காய்கள் அதிகமாக காய்க்க இதை செய்யுங்கள்..!
எலுமிச்சை பழத்தில் உள்ள கலோரிகள்:
1 எலுமிச்சை பழத்தில் 17 கலோரிகளும், 0.17 கிராம் கொழுப்பும், புரதம் 0.64 கிராமும் நிறைந்துள்ளது.
எலும்பிச்சை பழம் நன்மைகள்:
இதய ஆரோக்கியம்:
எலும்பிச்சை பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் இதய பிரச்சனைகள் வருவதை தடுக்கும். மேலும் கொலஸ்ட்ராலையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும். ஒரு மாதத்தில் 24 கிராம் சிட்ரஸ் பைபர் சாற்றை சாப்பிடுவதனால் இரத்த கொழுப்பின் அளவை குறைக்கும்.
உடல் எடையை குறைக்க எலுமிச்சை:
உடல் எடையை குறைப்பதற்கு டயட் எல்லாம் பின்பற்றாமல் காலையில் சூடான தண்ணீரில் எலுமிச்சையை சாறாக பிழிந்து குடிப்பதனால் உடல் எடை குறையும்.
சிறுநீரக கற்கள் கரைய:
எலுமிச்சைபழத்தில் உள்ள சிட்ரிக் அமிலம் சிறுநீரின் அளவை அதிகரிக்க செய்யும். அதுமட்டுமில்லாமல் சிறுநீரக கற்கள் உருவாமலும் தடுக்கும். ஒரு நாளைக்கு 1/2 கப் அளவிற்கு எலுமிச்சை சாறு குடிப்பதால் சிறுநீரக கற்களை சரி செய்ய உதவுகிறது.
புற்றுநோய் வராமல் தடுக்க:
இந்த பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் புற்று நோய் செல்கள் உருவாவதை தடுக்கிறது.
செரிமான பிரச்சனை:
எலுமிச்சை பழத்தில் நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் செரிமான பிரச்சனை ஏற்படாமல் பார்த்து கொள்ளும். மேலும் மலசிக்கல் பிரச்சனை வராமலும் தடுக்கும்.
எலுமிச்சை பழம் யாரெல்லாம் சாப்பிட கூடாது.?
- வயிற்று புண் மற்றும் வாய் புண் உள்ளவர்கள் எலுமிச்சை பழம் சாப்பிட கூடாது.
- பற்களில் கூச்சம் இருந்தாலும் எலும்பிச்சை பழத்தை சாப்பிட கூடாது. ஏனென்றால் இந்த பழத்தில் உள்ள சிட்ரிக் அமிலம் பற்களில் பிரச்சனையை ஏற்படுத்தும்.
- நெஞ்செரிச்சல் பிரச்சனை உள்ளவர்களும் சாப்பிட கூடாது.
இதையும் படியுங்கள் ⇒ தூக்கி வீசும் எலுமிச்சை தோலில் இவ்வளவு பயன் இருக்கிறதா.!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Tamil maruthuvam tips |