குறைந்த இரத்த அழுத்தம் அறிகுறிகள் | Low BP Symptoms in Tamil

Advertisement

குறைந்த இரத்த அழுத்தம் சரியாக | Symptoms of Low Blood Pressure in Tamil

நாம் செய்கின்ற வேலையை பொறுத்து நமது உடலில் உள்ள இரத்த அழுத்தமானது ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். ஆனால் உடலில் இரத்த அழுத்தத்தின் அளவானது குறைய தொடங்கும் போது மயக்கம் போன்ற பிரச்சனை ஏற்படும். சில சமயங்களில் குறைந்த இரத்த அழுத்தம் உயிருக்கு கூட ஆபத்தினை ஏற்படுத்தலாம். சரி நாம் இந்த பதிவில் உடலில் குறைந்த இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான அறிகுறிகளை படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..

நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகள்

பலவீனமாக இருத்தல்:

 kuraintha ratha alutham arikuri in tamil

உடலில் குறைந்த இரத்த அழுத்தம் காணப்படும் போது அதிக சோர்வுடன் இருப்பீர்கள். எதிர்பாராத விதமாக திடீரென்று உடலில் இரத்த அழுத்தத்தில் வீழ்ச்சி ஏற்பட்டால் உங்களால் சரியாக நடப்பதற்கு கூட வலிமை இல்லாத நிலை ஏற்படும்.

மயக்கம் அல்லது தலைச்சுற்றல் ஏற்படுதல்:

 Low bp symptoms in tamil

உடலில் குறைந்த இரத்த அழுத்தத்தின் பொதுவான அறிகுறியாக இருப்பது தலைசுற்றல் பிரச்சனை. உடலில் இரத்தம் அழுத்தம் சரியான அளவிற்கு இல்லாமல் மிகவும் குறைந்த அளவில் காணப்படும் போது அந்த நபருக்கு மயக்கம், தலைச்சுற்றல் பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

நீரிழிப்பு ஏற்படும்:

 குறைந்த இரத்த அழுத்தம் அறிகுறிகள்

குறைந்த இரத்த அழுத்த பிரச்சனை மற்றும் நீரிழிப்புக்கு இடையே நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. உடலில் இரத்த அழுத்தத்தின் அளவானது அதிக அளவில் குறையும் போது உடலில் வறட்சி தன்மை அதிகரித்து காணப்படும்.

தொண்டை புற்றுநோய் அறிகுறிகள் அதன் சிகிச்சை முறைகள்

மங்கலான பார்வை தென்படும்:

 குறைந்த இரத்த அழுத்தம் சரியாக

இரத்த அழுத்தம் உடலில் போதுமான அளவிற்கு இல்லாமல் இருந்தால் உங்களால் எந்த செயலிலும் சரியாக கவனம் செலுத்த முடியாத நிலை உருவாகும். பக்கத்தில் இருக்கின்ற பொருளை கூட உங்களால் சரியாக பார்த்து எடுக்க முடியாத அவலநிலை இந்த இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் ஏற்படும் அறிகுறியாகும்.

உடல்நிலை மாற்றம் அடைதல்:

 kuraintha ratha alutham arikuri in tamil

இரத்த அழுத்தம் குறைவாக இருக்கும் போது உடலில் சில மாற்றங்கள் ஏற்படும். குறைந்த இரத்த அழுத்தம் உங்களுடைய உடலை எப்போதும் குளிர்ச்சியாகவும், வியர்வை தன்மை அதிகமாகவும் வைத்திருக்கும். சில நேரங்களில் இதய துடிப்பானது பலவீனம் அடைந்து காணப்படும். இந்த அறிகுறிகளெல்லாம் உங்களுக்கு தென்பட்டால் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும்.

மேலும் இரத்த அழுத்தத்திற்கான சில அறிகுறிகள்:

  1. உடலில் தடிப்புகள் ஏற்படுதல்
  2. உடல் முழுவதும் இறுக்கமான ஒரு உணர்வு
  3. அடிக்கடி மூச்சு திணறல் பிரச்சனை ஏற்படுதல்
  4. மயக்கம் அல்லது மனதில் அதிகமாக குழப்ப நிலை ஏற்படும்
  5. வாய், நாக்கு, தொண்டை மற்றும் உதடு பகுதிகளில் வீக்கம் காணப்படும்
  6. உணவு சாப்பிடுவதில் சிக்கல் ஏற்படுதல்
  7. உடலில் நடுக்கம் ஏற்படுதல்
  8. மிருதுவான தோல் காணப்படுதல்
  9. இதய துடிப்பு அதிகமாதல்
  10. எந்த செயலிலும் நிதானம் இல்லாமை

மேல் கூறிய இந்த அறிகுறிகள் உங்களுக்கு ஏதேனும் தென்பட்டால் குறைந்த இரத்த அழுத்தத்திற்கான அறிகுறியாக இருக்கலாம். உடனே மருத்துவரை பார்த்து தகுந்த சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

இரத்த புற்றுநோய் அறிகுறிகள்

குறைந்த இரத்த அழுத்தம் வீட்டு வைத்தியம்:

  • குறைந்த இரத்த அழுத்தத்தை வீட்டிலே எளிமையான முறையில் தடுப்பதற்கு நாம் முதலில் அதிகமாக எப்போதும் தண்ணீர் அருந்த வேண்டும்.
  • கண்டிப்பாக மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
  • சத்தான உணவுகள் மற்றும் சோடியம் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • உடலில் ஓடுகின்ற இரத்த ஓட்டத்தை தூண்டுவதற்கு படுக்கையில் இருந்து நாம் எழுவதற்கு முன்பு உங்களுடைய கால்களுக்கு சிறிது நேரம் அசைவு கொடுக்க வேண்டும்.
  • திரவம் சார்ந்த பானங்களை அதிகமாக பருக வேண்டும்.

குறைந்த இரத்த அழுத்த பிரச்சனையை ஆரம்ப காலத்திலே பார்த்து சரி செய்துவிட வேண்டும். இல்லையெனில் கடுமையான உடல்நிலை பிரச்சனை உண்டாகி மரணம் கூட ஏற்படலாம்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement