குழந்தை பாக்கியம் தரும் மலைவேம்பு

Advertisement

மலைவேம்பு நன்மைகள்  | Malai Vembu Uses for Pregnancy in Tamil

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் மலைவேம்பின் நன்மைகள் பற்றித்தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். இந்த மலைவேம்பு இலைகள் ஆனது வேப்பிலை போல் இருக்கும். இவை பலவகையான மருத்துவ குணங்களுக்கு பயன்படுகிறது. முக்கியமாக இந்த மலைவேம்பானது கல்யாணம் ஆகி குழந்தை இல்லாத பெண்களுக்கு இது மருந்தாக கொடுக்கப்படுகிறது. இந்த மலைவேம்பு கஷாயம் குடிப்பதன் மூலம் சில மாதங்களிலே கரு உருவாகிறது. மேலும் மலைவேம்பின் நன்மைகளை பற்றி அறியலாம் வாங்க.

மலைவேம்பு பற்றி நன்மைகள் பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மலைவேம்பை பார்த்து இருப்போம். இது உடம்பிற்கு மிகவும் நலல்து என்று கூற கேட்டு இருப்போம். ஆனால், அவற்றை எப்படி சாப்பிட வேண்டும்.? அதன் நன்மைகள் என்ன என்பது பற்றி தெரியாது. குறிப்பாக மலைவேம்பு குழந்தை வரும் அளிக்கும் என்பதே நமக்கு தெரியாது. ஓகே வாருங்கள் Malai Vembu Uses for Pregnancy in Tamil பற்றி தெரிந்துகொள்ளலாம்.

யாருக்கும் தெரியாத வேப்பிலையின் நன்மைகள் உங்களுக்கு தெரிய வேண்டுமா

மலைவேம்பு மருத்துவ குணங்கள்:

  • மலைவேம்பில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. மலைவேம்பு மரத்தில் உள்ள  பட்டை, காய், பூ, இலைகள், கனி போன்றவற்றிலும் மருத்துவம் குணம் நிறைந்து உள்ளது.
  • பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகள் மற்றும் அதன் வலிகளில்  இருந்து விடுபடுவதற்கு மலைவேம்பு இலையை நீரில் கொதிக்கவைத்து அதில் தேன்  அல்லது பால் கலந்து குடித்தால் வலிகள்  தீரும்.
  • மலைவேம்பு கிருமிகளை அளிக்க கூடியது என்பதால்  குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு கருவில் உள்ள கிருமிகளை சுத்தம் செய்து, குழந்தை உருவாகுவதற்கு இவை நன்மை  அளிக்கின்றது.
  • நீர்க்கட்டி இருக்கும் பெண்களுக்கு  உடல் பருமன் அதிகமாக இருக்கும்.  இதனால் குழந்தை தரிப்பதற்கு நீண்டநாள்  ஆகிறது. இதற்கு மலைவேம்பு கஷாயம் குடிப்பதால் நல்ல தீர்வு காணலாம்.
  • நீண்ட நாளாக மாதவிடாய் வராமல் இருக்கும் பெண்களும் இந்த நிலவேம்பு கஷாயம் குடிப்பதன் மூலம் நல்ல பலன் அளிக்கும்.
  • இந்த மலைவேம்பானது கருப்பையில் உள்ள நீர்கட்டியை மட்டும் கரைப்பது இல்லாமல் கருப்பையில் உள்ள தேவையில்லாத கழிவுகளையும் நீக்கிவிடும்.

கர்ப்பம் தரிக்க மலைவேம்பு சாப்பிடும் முறை:

முதலில் கர்ப்பம் தரிப்பதற்கு இந்த மலைவேம்பை காலை எழுந்ததும் பல்லை சுத்தம் செய்துவிட்டு, வெறும் வயிற்றில் மலைவேம்பு இலையை அரைத்து சாப்பிட வேண்டும். அதன் பிறகு தண்ணீர் அதிகமாககுடிக்க வேண்டும். தண்ணீர் அதிகமாக குடிப்பதன் மூலம் கசப்பு வயிற்றில் இறங்கி கருப்பையை சுத்தம் செய்யும். ஒரு மணி நேரத்திற்கு பிறகு உணவில் உப்பு இல்லாமல் சாப்பிடுவது நல்லது. இந்த மலைவேம்பை மாதவிடாயின் போது 1 மற்றும் 3 வது நாளில் சாப்பிடவேண்டும். இந்த மலை வேம்பை அரைக்கும் பொழுது உப்பு மற்றும்  காரம் இல்லாமல் அரைத்து சாப்பிடவேண்டும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement