மங்கு குணமாக | Melasma Treatment in Tamil

melasma treatment in tamil

 மங்கு மறைய என்ன செய்ய வேண்டும்
| Melasma Treatment in Tamil

நம் தோலில் ஒவ்வாமை, அழற்சி காரணமாக பலவகையான நோய்கள் வருகின்றன. அதில் ஒன்றான மங்கு எப்படி வருகிறது, ஏன் வருகிறது என்பதை பற்றியெல்லாம் இந்த பதிவில் பார்க்கலாம். மங்கு என்பதற்கு ஆங்கிலத்தில் Melasma என்று பெயர். இது பாகுபாடின்றி ஆண், பெண் இருவருக்கும் ஏற்படுகிறது. மங்கு என்பது நோய் அல்ல எப்படி பரு, தேமல் எவ்வாறு முகத்தில் வருகிறதோ அது போல தான் இந்த மங்கும். மங்கு குணமாக என்ன செய்ய வேண்டும் என்பதை கீழே விரிவாக படிக்கலாம் வாங்க.

Melasma Treatment in Tamil – மங்கு வகைகள்:

 1. எபிடெர்மல்
 2. டெர்மல் மற்றும்
 3. Mixed Types
 • எபிடெர்மல் என்பது தோலின் மேல் பகுதியில் இந்த மெலஸ்மா ஏற்படும். இது மங்குவின் ஆரம்ப நிலை.
 • டெர்மல் என்பது தோலின் உட்பகுதியில் வரும்.
 • Mixed Types என்பது எபிடெர்மல், டெர்மல் இரண்டு பகுதியிலும் ஏற்படும்.

மங்கு ஏற்படுவதற்கான காரணம்:

 • இது பொதுவாக கன்னம், மூக்கு, நெற்றி மற்றும் முழங்கால் பகுதியில் வரும். மங்கு என்பது முகத்தில் கருப்பான புள்ளிகள் படர்ந்து ஒரு பாட்ச்சஸ் போல இருக்கும்.
 • மெலாஸ்மா வருவதற்கான முக்கிய காரணம் அதிக சூரிய ஒளி நம் முகத்தில் படுவதால் ஒரு பாட்ச்சஸ் போல முகத்தில் ஏற்படுகிறது. இதனை Hyper Pigmentation என்றும் சொல்லலாம்.
 • மன உளைச்சல், கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாறுபடுவது, ஹார்மோன் மாத்திரை எடுத்துக்கொள்வது, ஹார்மோன் மெனோஃபாசில், Cosmetics போன்றவைகளால் இந்த மங்கு ஏற்படுகிறது.
 • பெண்களுக்கு 91%, ஆண்களுக்கு 10% மங்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளது

Melasma Meaning in Tamil: 

Melasma Meaning in Tamil

mugathil mangu maraiya tips in tamil – தேவையான பொருட்கள்:

 1. வெந்தயம் – 2-3 ஸ்பூன்
 2. தயிர் – 2-3 டேபிள் ஸ்பூன்
 3. தண்ணீர் – தேவையான அளவு.

Melasma Treatment in Tamil – டிப்ஸ்: 1

 • வெந்தயத்தை 2 அல்லது 3 ஸ்பூன் எடுத்துக்கொண்டு அதனை 12 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.
 • வெந்தயம் ஊறிய பின் அந்த தண்ணீரை தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள். ஊறிய வெந்தயத்தை நன்றாக பேஸ்ட் போல அரைத்து கொள்ளுங்கள். பின் அதனுடன் 2-3 ஸ்பூன் தயிர் சேர்த்துக்கொள்ளவும்.
 • பின் வெந்தயம் ஊறிய தண்ணீரை மங்கு ஏற்பட்ட இடத்தில் தடவி கொள்ளவும். அதன் பின் வெந்தயம் மற்றும் தயிர் சேர்த்த கலவையை அதன் மேல் தடவி 30-40 நிமிடம் கழித்து அதனை கழுவி வர மங்குவை முகத்தில் இருந்து நீக்கலாம்.
 • வெந்தயத்தில் ப்ரோடீன்ஸ், விட்டமின் K மற்றும் C, அல்கலாயிட்ஸ், லைசின்ஸ் போன்ற Anti Agents இருப்பதால் சருமத்தை பளபளப்பாகவும் மற்றும் சரும பிரச்சனைகள் ஏற்படாமலும் பாதுகாத்து கொள்கிறது.
 • தயிரில் லாக்டிக் அமிலம், வைட்டமின் சி, அல்போஹைட்ரஸி அமிலம் இருப்பதால் உடம்பில் வீக்கம் ஏற்படாமல் பாதுகாக்க உதவுகிறது. தோல் செல்கள் பாதிப்படையாமல் இருக்கவும் உதவுகிறது.

மங்கு குணமாக: 

Melasma Meaning in Tamil

mangu maraya tips in tamil – தேவையான பொருட்கள்:

 1. அதிமதுரம் அல்லது அதிமதுர வேர் – 1-2 ஸ்பூன்
 2. பால் – தேவையான அளவு

முகத்தில் உள்ள மங்கு மறைய டிப்ஸ்: 2

 • அதிமதுரம் அல்லது அதன் வேறை பொடியாக்கி ஒரு பௌலில் 1-2 ஸ்பூன் எடுத்துக்கொண்டு அதில் தேவையான அளவு பால் சேர்த்து ஒரு பேஸ்ட் போல ரெடி செய்து கொள்ளுங்கள்.
 • அதனை மெலாஸ்மா உள்ள இடத்தில் தடவி 30-40 நிமிடம் ஊறவைத்து உலர்ந்த  பின்னர் கழுவ வேண்டும். இது போல செய்து வர மங்கு ஏற்படாமல் தடுக்கலாம்.
 • அதிமதுரம் பயன்படுத்துவதால் உடலில் மெலானின் பரவுவதை கட்டுப்படுத்துகிறது. சூரிய ஒளியால் செல்கள் சேதமடைவதை தடுக்கவும் உதவுகிறது.
 • மங்கு சிலருக்கு தானாக குணமடையும். ஒரு சிலருக்கு சரியாவது சற்று கடினமாக இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு மங்கு குணமடையாமல் மீண்டும் மீண்டும் வரலாம் அப்படி இருப்பவர்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.
முகத்தில் உள்ள மரு உதிர எளிமையான வீட்டு வைத்தியம்
முகத்தில் உள்ள கரும்புள்ளி மறைய மஞ்சளை எப்படி பயன்படுத்துவது?
முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்கும் வழிமுறை

 

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil