வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகைகள் | Mooligai Maruthuvam
Mooligai Maruthuvam: மூலிகை என்றாலே நம் உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய பலன்களை அளிக்கும் என்று நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அனைத்து வகை மூலிகை செடிகளும் ஏதாவது வகையில் நம் உடலில் ஏற்படும் ஏதாவது ஆரோக்கிய பிரச்சனையை சரி செய்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது. உடலில் அடிக்கடி ஏற்படும் சிறு சிறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு ஒரு சில மூலிகைகள் உடனடி நிவாரணத்தை அளிக்கின்றது. எனவே இந்த பதிவில் வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகைகள் மற்றும் அதன் மருத்துவ குணங்களை பற்றி நாம் படித்தறியலாம் வாங்க.
மூலிகைகளின் மருத்துவ குணங்கள் – Mooligai Maruthuvam – Benefits of Herbal Plants
திருநீற்று பச்சிலை பயன்கள் – Thiruneetru Pachilai Uses in Tamil:-
- திருநீற்று பச்சிலையில் ஏராளமான மருத்துவகுணங்கள் நிறைந்துள்ளது. அதாவது இந்த திருநீற்று பச்சிலை இலையை வெறும் வாயில் மென்று சாப்பிடுவதினால் வாய்வேக்காடு குணமாகும்.
- தேள் கடித்த இடத்தில் திருநீற்று பச்சிலை சாறினை தேய்த்து வர வீக்கம் குணமாகும்.
- சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த இலையினை 5 சாப்பிடு வர பிரச்சனை குணமாகும்.
- முகத்தில் உள்ள பருக்களை விரட்ட வேண்டுமா அப்படினா இந்த திருநீற்று பச்சிலை இலையை கசக்கி அதன் சாறினை பருக்கள் மீது தடவி வர முகத்தில் உள்ள பருக்கள் மறைய ஆரம்பிக்கும்.
- திருநீற்று பச்சிலை வேரினை நன்றாக காயவைத்து இடித்து பொடி செய்து கொள்ளுங்கள். இந்த பொடியில் செய்த கஷாயத்தை காலை மற்றும் மாலை என இருவேளை அருந்திவர வயிற்று புண் குணமாகும்.
பிரண்டை பயன்கள் – Pirandai Benefits in Tamil:
- பிரண்டையில் துவையலை அரைத்து அடிக்கடி சாப்பிட்டு வர உடல் சோர்வு நீங்கி உடல் என்றும் சுறுசுறுப்பாக இருக்கும்.
- ஞாபக சக்தி குறைபாடு உள்ளவர்கள் பிரண்டையில் செய்த துவையலை தொடர்ந்து சாப்பிட்டு வர ஞாபக சக்தி அதிகரிக்கும்.
- இந்த பிரண்டையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளது என்பதினால் இந்த பிரண்டையை உணவில் சேர்ந்து கொள்வதன் மூலம் எலும்பு மற்றும் மூட்டுகள் பலம் பெருகும்.9
- ஆறு தேக்கரண்டி பிரண்டை சாறுடன் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து காலை மட்டும் ஒரு வாரம் சாப்பிட்டு வர மாதவிடாய் பிரச்சனை சரியாகும்.
- அடிபட்ட வீக்கம் குணமாக பிரண்டையிலிருந்து சாறு எடுத்து புளி, உப்பு சேர்த்து காய்ச்சி பொறுக்கும் சூட்டில் அடிபட்ட இடத்தில் மேல் பூச்சாகப் பற்றுப் போட வேண்டும்.
40 கீரை வகைகள் அதன் பயன்களும் |
மூக்கிரட்டை பயன்கள் – Mookirattai Powder Uses in Tamil:-
- மூக்கிரட்டை மூலிகை நம் உடலின் முக்கிய உறுப்புகளான கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகிய உறுப்புகளிலில் உள்ள கழிவுகளை முற்றிலும் வெளியேற்றி உடல் நலத்தை ஆரோக்கியமாக பாதுகாக்கிறது.
- வாத வியாதிக்கு மூக்கிரட்டை ஒரு சிறந்த மருந்தாக செயல்படுகிறது. அதேபோல் இரத்த சோகையால் ஏற்படும் உடல் வீக்கம், மூச்சிரைப்பைப் போக்க மற்றும் மஞ்சள் காமாலையால் பாதித்தவர்களின் வயிற்று உப்புசம் குறைந்து நச்சு நீர் வெளியேற, மூக்கிரட்டை உதவி செய்கிறது.
- புற்று நோய்கள் புற்று வியாதிகளை ஏற்படுத்தும் நச்சுக் கிருமிகளை அழிக்கும், தொற்று வியாதிகளின் பாதிப்பை சரி செய்யும், உடல் திசுக்களை சரி செய்து, உடலில் ஏற்படும் முதுமைத் தன்மையை போக்கி, உடல் இளமையை தக்கவைத்து கொள்ளும் இந்த மூக்கிரட்டை.
- மூளைக்கு ஆற்றலை அளித்து, உடலுக்கு சுறுசுறுப்பையும், மனதிற்கு உற்சாகத்தையும் உண்டாக்கும்.
- மூக்கிரட்டை இலை, பொன்னாங்கன்னி இலை மற்றும் கீழாநெல்லி இலை ஆகியவற்றை சம அளவில் எடுத்துக் கொண்டு, அவற்றை நன்கு அரைத்து, சிறிதளவு மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வர, கலங்கலான பார்வை மற்றும் வெள்ளெழுத்துக் குறைபாடுகள் விலகி, கண் பார்வை தெளிவாகும்.
20 வகை நோய்களுக்கு எளிய நாட்டு மருத்துவ குறிப்புகள் |
மேல் கூறப்பட்டுள்ள மூலிகை செடிகளை தங்கள் வீட்டு தோட்டத்தில் வளர்த்து வர நம் உடலில் ஏற்படும் சிறு சிறு ஆரோக்கிய பிரச்சனைகளை நாமே குணப்படுத்தலாம். சரி இனியாவது இது போன்ற வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகை செடிகள் சிலவற்றை நம் தோட்டத்தில் வளர்க்க ஆரம்பிப்போம்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Natural health tips in tamil |