முருங்கைக்கீரை சூப்
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம். காம் பதிவில் முருங்கை கீரை சூப்பின் பயன்கள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம். “முருங்கை தின்னால் முன்நூறு வராது” என்பது பழமொழி. இந்த பழமொழியில் சொல்லப்பட்டுள்ளது போல அவ்வளவு பயன்கள் நிறைந்து இருக்கின்றன இந்த முருங்கைக்கீரை சூப்பில். வீட்டில் இருந்த படியே கிடைக்கும் இந்த முருங்கை கீரையை சமைத்து சாப்பிடுவதற்கு சிலருக்கு நேரம் இருக்காது. இனி நீங்கள் கவலை பட வேண்டாம். முருங்கைக் கீரையை நீங்கள் சூப் வைத்து கூட குடிக்கலாம். இன்னும் விரிவாக முருங்கைக் கீரையின் சூப்பை பற்றி தெரிந்துகொள்ளாம்.
இதையும் படியுங்கள்⇒ துவர்ப்பு உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா.!
முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள்:
முருங்கை கீரையை நம்முடைய உணவில் வாரத்திற்கு 3 முறை சேர்த்துக்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாம் முருங்கை கீரையில் வைட்டமின் A, வைட்டமின் C, கால்சியம், இரும்பு சத்து, நார்ச்சத்து என நிறைய சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன.
- பாலை விட 2 மடங்கு புரோட்டின்
- ஆரஞ்சை விட 7 மடங்கு வைட்டமின் C
- வாழைப்பழத்தை விட 3 மடங்கு பொட்டாசியம்
- கேரட்டை விட 4 மடங்கு வைட்டமின் A
- பாலை விட 4 மடங்கு கால்சியம்
முருங்கைக்கீரை சூப் பயன்கள்:
முருங்கைக்கீரை சூப்பை இரத்தம் குறைவாக இருப்பவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வருவதனால் ஒரே வாரத்தில் இரத்தம் அதிகரிக்கும். அதுமட்டும் இல்லாமல் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு கூடும்.
அதிக உடல் எடை உள்ளவர்கள் இந்த முருங்கைக்கீரை சூப்பை தினமும் குடித்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை நீக்கி உடல் எடையை குறைத்துவிடும்.
முதுகு வலி, மூட்டு வலி, தோல்பட்டை வலி, எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகளுக்கு வாரம் 2 முறை முருங்கைக்கீரை சூப் குடிக்க வேண்டும்.
முருங்கைக்கீரை சூப் குடிப்பதால் அல்சர், வாய் புண், கண் பார்வை தெளிவு, தலை வலி, ஆஸ்துமா இதுபோன்ற பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல தீர்வாக இருக்கிறது.
குழந்தை பெற்ற தாய்மார்கள் இந்த சூப்பை குடித்தால் தாய்ப்பால் அதிகரிக்கும்.
நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள இந்த சூப்பை தினமும் குடிப்பதனால் மலட்டுத்தன்மை நீங்கும், உடல் சூடு குறையும், மலசிக்கல் பிரச்சனை குறையும் இவை அனைத்திற்கும் நல்ல பலனை தரும்.
புற்றுநோய் காரணிகள் வராமல் தடுப்பதற்கு இந்த சூப்பை குடியுங்கள். சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது.
30 வகையான ஆன்ட்டி ஆக்சன் கொண்ட ஒரே கீரை உங்கள் வீட்டிலேயே 1 ரூபாய் கூட செலவு இல்லாமல் கிடைக்க கூடிய இந்த முருங்கைக்கீரை தான்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |