கெடுதல் இல்லாத இயற்கையான தண்ணீர் சுத்தம் செய்யும் கருவி..!

WATER FILTER

கெடுதல் இல்லாத இயற்கையான தண்ணீர் சுத்தம் செய்யும் கருவி..!

மண்பானை ஒரு சிறந்த தண்ணீர் சுத்தம்  செய்யும்  WATER FILTER கருவியாக விளங்குகிறது. மண்பானையில் தண்ணீர் ஊற்றி ஐந்து மணி நேரம் கழித்து அந்த தண்ணீரை குடித்தால் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும்.

ஐந்து மணி நேரம் கழித்து இந்த தண்ணீரை குடிப்பதால் மண்பானை அந்த தண்ணீரில் உள்ள கெட்ட சத்துகளை உறிஞ்சிக் கொள்கிறது அதற்கு பதிலாக நமக்கு முழுமையாக ஆரோக்கியத்தையும், மண் சத்தையும் மற்றும் சுத்தமான தண்ணீரையும் நமக்கு அளிக்கிறது.

மண்பானையின் சிறப்பை பற்றி இங்கு பார்ப்போம்:

  • மண்பானை உலகின் மிக சிறந்த தண்ணீர் சுத்தம் செய்யும் கருவியாக விளங்குகிறது.
  • தண்ணீரை மண்பானையில் வைத்துக் குடித்தால் நமக்கு சுத்தமான தண்ணீரை தருகிறது மற்றும் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.
  • மண்பானை தண்ணீருடன் வெட்டி வேர், துளசி, சீரகம் ஆகியவற்றை கலந்து போட்டால் தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும்.
  • குளிர்ச்சிக்காக பிர்ட்ஜியில் இருக்கும் தண்ணீரை குடிக்க 15 நிமிடம் வரை நாம் காத்திருக்க வேண்டும்.
  • ஆனால் மண்பானை தண்ணீரை நமக்கு எப்போது தாகம் எடுத்தாலும் அந்த தண்ணீரை குடிக்கலாம் பிர்ட்ஜி தண்ணீர் போல் 15 நிமிடங்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
  • மண்பானைத் தண்ணீர் வைக்கும் முன் மண்பானையின் அடிப்பகுதியில் கொஞ்சம் மணல் கொட்டி அதன் பிறகு மண்பானையை வைக்க வேண்டும். ஏன் என்றால் மணல், மண்பானை தண்ணீரை இன்னும் குளிர்ச்சியை அதிகரிக்க செய்யும்.
  • தினமும் மண்பானை தண்ணீர் குடிப்பதால் நம் உடலில் வெப்பத்தன்மை குறைகிறது மற்றும் உடலில் ஏற்படும் பலவகையான நோய்களை குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது மண்பானை குடிநீர்.

 

மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல், குறிப்பு மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

SHARE