நாவல் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் உங்களுக்கு தெரியுமா..?

Novel Fruit Side Effects in Tamil

வணக்கம் நண்பர்களே..! ஆரஞ்சு, ஆப்பிள், மாதுளை, மாம்பழம், கொய்யாப்பழம் இதுபோன்ற நிறைய வகையான பழங்கள் சாப்பிட்டு இருப்பீர்கள். அத்தகைய பழங்களில் நாவல் பழமும் ஒன்று. சர்க்கரை நோய்களுக்கு சிறந்த தீர்வை நாவல் பழம் தருகிறது. அதுபோல குடல் புண் மற்றும் கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைக்கு நல்ல பலனை தருகிறது. ஆனால் அந்த நாவல் பழத்தை நாம் அளவோடு சாப்பிட வேண்டும். அளவுக்கு அதிகமாக நாவல் சாப்பிட்டால் ஏற்படும் தீமைகள் பற்றி இன்றைய பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்⇒ கேரட் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் உங்களுக்கு தெரியுமா..?

நாவல் பழம் நன்மைகள்:

naval palam theemaigal

செரிமான கோளாறு பிரச்சனைக்கு நாவல் பழம் நல்ல நன்மையை தருகிறது. அந்த நாவல் பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைக்க செய்கிறது.

நாவல் பழத்தில் உள்ள வைட்டமின் C மற்றும் ஆண்டிபயாடிக் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவிகிறது.

 இந்த பழத்தில் உள்ள கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்து இருப்பதால் இது உடம்பில் உள்ள எலும்பை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.  

நாவல் பழம் தீமைகள்:

அறுவை சிகிச்சை செய்ய இருக்கும் நபர்கள் நாவல் பழத்தை சாப்பிட கூடாது. ஏனென்றால் இந்த நாவல் பழம் அறுவை சிகிச்சையின் போது சர்க்கரையின் அளவை குறைத்து விடும்.

ஒரு நாளைக்கு 6 அல்லது 7 நாவல் பழம் மட்டுமே கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டும். அளவுக்கு அதிகமாக நாவல் பழம் சாப்பிட கூடாது.

வெறும் வயிற்றிலோ அல்லது பால் குடித்த பிறகோ நாவல் பழத்தை சாப்பிட கூடாது. ஒரு வேளை அப்படி சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல் உண்டாகும்.

சர்க்கரை நோய் குறைவாக உள்ளவர்கள் நாவல் பழம் மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட வேண்டும்.

நாவல் பழத்தை அமிலத்தன்மை இருப்பதால் இதனை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் நெஞ்சு எரிச்சல், பசியின்மை மற்றும் வயிற்று புண் போன்ற பிரச்சனைகள் வரும்.

இதையும் படியுங்கள்⇒ குங்குமப் பூ தீமைகள் | Saffron Flower Side Effects in Tamil

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil