வேப்பிலையின் பயன்கள் | Veppilai Benefits in Tamil
ஆரோக்கியம் சார்ந்த செய்திகளை உங்களுக்கு பயனுள்ள வகையில் சொல்லுகிறோம். அது போல் இன்றைய பதிவில் வேப்பிலையின் நன்மைகளை பற்றி படித்து தெரிந்து கொள்வோம். பெரும்பாலான வீட்டில் வாசலில் முன் வேப்ப மரம் வைத்திருப்பார்கள். ஏன் என்று தெரியுமா.? வேப்பிலையில் இருந்து வரும் காற்று நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். வேப்ப மரத்தில் உள்ள இலை, பூ, விதை, மரம் போன்ற எல்லாமே நமக்கு பயனுள்ளதாக இருக்கும். நம் முன்னோர்கள் எல்லாம் வேப்ப சாறை தினமும் குடிப்பார்கள். அவர்களுக்கு எந்த நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
இப்படி சிறப்பு வாய்ந்த வேப்பிலை நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது. அது என்னென்ன என்பதை பற்றி விரிவாக படித்து தெரிந்து கொள்வோமா.!
நிலவேம்பு பயன்கள் |
செரிமான பிரச்சனைக்கு தீர்வு:
சில நபருக்கு எது சாப்பிட்டாலும் செரிமானம் ஆகாது. இப்படி பிரச்சனை உள்ளவர்கள் தினமும் வேப்பிலை சாற்றை குடித்து வந்தால் செரிமான பிரச்சனையை சரி செய்து விடும். வேப்பிலையில் உள்ள அஸ்ட்ரிஜெண்ட் பண்புகள் வாயு பிரச்சனை வராமல் தடுக்கிறது. இதனால் வயிறு வீக்கம், மலசிக்கல் போன்ற பிரச்சனையையும் சரி செய்கிறது.
காயம் ஆற மருந்து:
வேப்பிலையை அரைத்து காயம் உள்ள இடத்தில் தடவி வர காயம் சரியாகிவிடும். அதுமட்டுமில்லாமல் வேப்பிலை சாற்றை குடித்து வந்தால் வாய் புண், வயிற்று புண்ணை குறைந்து விடும். வேப்பிலையில் உள்ள பயோ ஆக்டிவ் சேர்மங்கள் திசு உருவாவதையும், சேதமடைந்த திசுக்களை சரி செய்யவும் உதவுகிறது.
இரத்தத்தை சுத்தம் செய்வது எப்படி:
வேப்பிலையில் இயல்பாகவே நச்சு கிருமிகளை நீக்கும் சக்தி இருக்கிறது. அதனால் வேப்பிலை சாற்றை தினமும் குடித்து வந்தால் நம் உடலில் இருக்கும் நச்சு கிருமிகளை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
சர்க்கரை அளவை குறைக்க:
வேப்பிலை சாற்றின் கசப்பான தன்மை சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும். அதனால் வேப்பிலை சாற்றை குடித்து வந்தால் சர்க்கரையின் அளவை குறைக்க செய்யலாம்.
பருக்கள் நீங்க:
வேப்பிலை சாறு சரும பிரச்சனையிலுருந்து போராட உதவுகிறது. பருக்கள், கொப்பளங்கள் போன்றவற்றை நீக்கி சருமத்தை அழகாக வைத்திருக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும்:
நம் உடலில் பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கும் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்றவற்றிலுருந்து எதிர்த்து போராட வேப்பிலை சாறு உதவுகிறது. இதனால் காய்ச்சல், சளி, வாய் புண் போன்றவை வராமல் நம்மை பாதுகாக்கும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | உடல் ஆரோக்கிய குறிப்புகள் |