வாரம் ஒரு முறை நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதினால் ஏற்படும் நன்மைகள்..!

Nellikai Juice Benefits in Tamil

நெல்லிக்காய் ஜூஸ் பயன்கள்..! Nellikai Juice Benefits in Tamil..!

இயற்கை அளித்த ஓர் மருத்துவ குணம் நிறைந்த உணவு பொருள் எது என்றால் அதனை நெல்லிக்காய் என்று சொல்லலாம். நெல்லிக்காயில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதன் காரணமாக தான் ஆயுர்வேதத்தில் அதிகளவு இந்த நெல்லிக்கனியினை மருத்துவ பொருளாக பயன்படுத்துகின்றன. இந்த நெல்லிக்காய் சந்தையில் மிக எளிதில் கிடைக்கக்கூடிய உணவு பொருள் என்பதால் தங்களுக்கு எந்த வித உடல்நல பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கவும், தங்களின் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்க வாரத்தில் ஒரு முறை நெல்லிக்காய் ஜூஸ் செய்து ஒரு கிளாஸ் அருந்திவர ஏராளமான நன்மைகள் ஏற்படும். சரி இந்த பதிவில் ஜெல்லிக்காய் ஜூஸ் அருந்துவதினால் ஏற்படும் மருத்துவ குணங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

நெல்லிக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:-

வைட்டமின்கள், நார்ச்சத்து, சோடியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், மக்னீசியம், ஃபோலேட், நியாசின், அமினோ அமிலங்கள், தையாமின் , வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது.

ஒரு துண்டு நெல்லிக்காய் சாப்பிட்டால் அப்படி என்ன நன்மை கிடைக்க போகிறது?

நெல்லிக்காய் ஜூஸ் பயன்கள் – Nellikai Juice Benefits in TamilNellikai Juice

இதய நோய் வராமல் தடுக்க:-

வாரத்தில் ஒரு முறை நெல்லிக்காய் ஜூஸ் அருந்திருவத்தினால் இதயத்திற்கு ஆரோக்கியத்தை வழங்குகிறது. இந்த நெல்லிக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் வேதி பொருட்கள் இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கும், இருதய இரத்த குழாய்களில் கொழுப்புகள் படிவத்தையும் தடுக்கும். இரத்த ஓட்டம் சீராக இருக்கவும் உதவிபுரிகின்றது. எனவே வாரத்தில் ஒரு முறை காலை வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் பருகி வர இதய நோய் வராமல் தடுக்கலாம்.

சரும நோய் குணமாகும்:-

சரும நோய்களை குணப்படுத்துவதில் நெல்லிக்காய்க்கு தனி இடம் உள்ளது. பொதுவாக இரத்தத்தில் கழிவுகள் அதிகரிக்கும் போதுதான். சரும சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகின்றது. எனவே சரும நோய் உள்ளவர்கள் வாரத்தில் ஒரு முறை காலை வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் நெல்லிக்காய் ஜூஸ் அருந்தி வர இரத்தத்தில் உள்ள கழிவுகள் சுத்தம் செய்யப்படும். இதன் மூலம் சருமத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளான தோல் சுருக்கம், சரும வறட்சி, வெண்புள்ளிகள் மற்றும் தோல் வெண்மை குறைபாடு போன்ற பிரச்சனைகள் சரியாகும்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்:-

நெல்லிக்காயில் உள்ள விட்டமின் சி சத்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. இதன் மூலம் நம் உடலில் ஏற்படும் பல்வேறு விதமான தொற்று நோய்கள் தடுக்கப்படும். அதாவது அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல், ஜாதோஷம் போன்ற பிரச்சனைகளினால் அவதிப்படுபவர்கள் வாரத்தில் ஒரு முறை நெல்லக்காய் ஜூஸினை ஒரு கிளாஸ் காலை வெறும் வயிற்றில் அருந்திவருவதினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.

எலும்புகள் பலம் பெற உணவுகள்:-

எலும்புகள் வலுப்பெற உடலுக்கு அதிகம் கால்சியம் சத்து அவசியம் என்று நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்த கால்சியம் சத்து நெல்லிக்கனியில் அதிகளவு நிறைந்துள்ளது. மேலும் எலும்புகளை சேதப்படுத்தும் செல்களின் செயல்பாட்டினை குறைத்து, எலும்புகள் சேதமடையாமல் பாதுகாக்கிறது. ஆய்வு ஒன்றில் ஆத்ரட்டிஸ் நோயாளிகள் இந்த நெல்லிக்காய் ஜூஸினை காலை வெறும் வயிற்றில் அருந்தி வர மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலி குறைகின்றது என்றும் கூறப்படுகிறது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்