நெஞ்சு எரிச்சலால் அவதிப்படுபவர்கள் இந்த இயற்கையான முறையை செய்யுங்கள்..

nenju erichal remedy

நெஞ்சு எரிச்சல் வீட்டு வைத்தியம்

நாம் சாப்பிடும் உணவுகள் சில நேரங்களில் செரிமான பிரச்சனை மற்றும் நெஞ்செரிச்சல் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. அதில் எப்போதாவது உணவு முறையினால் நெஞ்செரிச்சல் பிரச்சனை ஏற்படுகிறது என்றால் பிரச்சனையில்லை. அதுவே ஒருவருக்கு அடிக்கடி நெஞ்செரிச்சல் பிரச்சனை ஏற்படுகிறது என்றால் கவனிக்க வேண்டும். அதனால் உங்களுக்கும் உதவும் வகையில் இன்றைய பதிவில் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாமலும் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி நெஞ்செரிச்சல் பிரச்சனை சரி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

நெஞ்செரிச்சல் பிரச்சனை வரமால் இருக்க:

 நெஞ்சு எரிச்சல் வீட்டு வைத்தியம்

உங்களுக்கு அடிக்கடி நெஞ்செரிச்சல் பிரச்சனை ஏற்படுகிறது என்றால் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் குளிர்சாதன பெட்டியில் வைத்த உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

நீங்கள் அதிக எடையுடன் இருந்தால் சாப்பிட்ட உணவுகளால் நெஞ்செரிச்சல் பிரச்சனை ஏற்படும். அதனால் உடல் எடையை குறைப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

உங்களால் எவ்வளவு உணவு சாப்பிட முடியுமோ அந்த அளவிற்கு சாப்பிட வேண்டும். அதற்காக அதிகமாக சாப்பிட கூடாது. ஏனென்றால் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் பிரச்சனை ஏற்படும்.

நீங்கள் சாப்பிட்டவுன் உறங்குவதை தவிர்க்க வேண்டும். மற்றொன்று இரவு உணவை தூங்குவதற்கு முன்பு 3 மணி நேரத்திற்கு முன்பே சாப்பிட வேண்டும்.

செரிமான பிரச்சனை நீங்க இஞ்சி லேகியம்..!

நெஞ்செரிச்சல் பிரச்சனையை தடுப்பது எப்படி.?

பால்:

 நெஞ்சு எரிச்சல் வீட்டு வைத்தியம்

நெஞ்செரிச்சல் பிரச்சனையை தவிர்க்க இரவு தூங்குவதற்குவே முன்பு ஒரு டம்ளர் பாலை குடித்து விட்டு தூங்க வேண்டும். முக்கியமாக பாலில் இனிப்பு சேர்க்காமல் வெறும் பாலை குடிக்க வேண்டும். இப்படி குடிப்பதால் நெஞ்செரிச்சல் பிரச்சனை வராமல் தவிர்க்கலாம்.

கற்றாழை சாறு:

 நெஞ்சு எரிச்சல் வீட்டு வைத்தியம்

கற்றாழையில் எண்ணற்ற நன்மைகள் இருக்கிறது. உங்களுக்கு செரிமான பிரச்சனையால் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது என்றால் சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்பு கற்றாழை சாற்றை குடித்து விட்டு சாப்பிடவும்.

உங்களுக்கு சளி பிரச்சனை, ஆஸ்துமா, நுரையீரல் பிரச்சனை போன்றவை இருந்தால் இந்த குறிப்பை தவிர்க்க வேண்டும்.

ஆப்பிள் சைடர் வினிகர்:

 நெஞ்சு எரிச்சல் வீட்டு வைத்தியம்

ஆப்பிள் சைடர் வினிகர் நெஞ்செரிச்சல் பிரச்சனையை சரி செய்வதற்கு சிறந்ததாக இருக்கிறது. இதற்கு 1/2 டம்ளர் தண்ணீர் எடுத்து கொள்ளவும், அதில் 1 தேக்கரண்டி தேன்,1 தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகர் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். 

நம் உடலில் உள்ள அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு தரும் கருப்பு எள்..!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்