நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக ஆடாதோடை!!!

Nurai Eeral Problem Symptoms in Tamil

நுரையீரல் சம்பந்தமான நோய்கள்..! Nurai Eeral Problem Symptoms in Tamil..!

மனித உடலில் நுரையீரல் என்பது மிக மிக முக்கியமான உறுப்பு ஆகும். இத்தகைய நுரையீரலினை வைரஸ் மற்றும் பாக்டீரியா கிருமி தொற்றுகள் உள்நுழைந்து பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக மூச்சு குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி உயிரிழப்பும் ஏற்படுத்துகிறது. சரி இந்த பதிவில் நுரையீரல் சம்மந்தமான நோய்களை குணப்படுத்த ஆடாதோடை இலை எப்பவாறு பயன்படுகிறது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

நுரையீரல் சம்பந்தமான நோய்கள்:

நெஞ்சு சளி, இருமல், மூச்சு திணறல், ஆஸ்துமா, சளி, நுரையீரலில் நீர் கோர்த்தல், நுரையீரல் புண், நுரையீரல் அழற்சி, நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் (சிஓபிடி), சயனோசிஸ், நுரையீரல் புற்றுநோய் என்று பலவையான பிரச்சனைகள் ஏற்படுகிறது.

நுரையீரல் சம்பந்தமான நோய்கள் சரியாக ஆடாதோடை:

நமது முன்னோர்களும், சித்தர்களும் அதிகளவு அவர்களது வைத்திய முறைகளுக்கு பயன்படுத்திய ஒரு இலை என்று இந்த ஆடாதோடை இலையை கூறலாம். ஆடாதோடை பல வகையான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு மிகவும் சிறந்த மருத்துவ பொருளாக பயன்படுகிறது. இப்பொழுது சித்த மருத்துவ கடைகள் மற்றும் மறுவனைகளில் அதிகளவு பயன்படுத்தும் பொருளாக ஆடாதோடை இலை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆடாதோடையில் டானின், அல்கலாய்டுகள். சல்பானின், பீனாலிக்சு, ஃபிளாவனாய்டுகள், வாசிசின், வாசினால், வாசினோன், வைட்டமின் சி, கேலக்டோஸ் போன்ற வேதிப்பொருட்கள் இவற்றில் காணப்படுகிறது. குறிப்பாக இவற்றில் அல்கலாய்டுகள் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் அனைத்தயும் குணப்படுத்த பெரிதும் உதவிபுரிகின்றதாம்.

அதாவது நுரையீரல் செல்களில் வேலை செய்து அதை விரிவடைய செய்வதால் இது ஆஸ்த்மா, நாட்பட்ட இருமல், சளி போன்ற நோய்களை தீர்ப்பதில் இந்த மூலிகை முக்கிய பங்கு வகிக்கின்றது.

சாப்பிடும் முறை:

இந்த ஆடாதோடையை கஷாயம் செய்து குடிக்கலாம், அல்லது பொடி செய்து அதனுடன் தேன் கலந்து சாப்பிடலாம், அல்லது தோசை மாவு அரைக்கும் போது அதனுடன் இந்த ஆடாதோடை இலையை சேர்த்து அரைத்து தோசை செய்து சாப்பிடலாம், அல்லது லேகியம் செய்து சாப்பிடலாம். இவ்வாறு எதாவது ஒரு முறையில் நீங்கள் இந்த ஆடாதொடையை சாப்பிடுவதினால் சளி, இருமல், சளி அதிகமாக இருக்கும் போது ஏற்படும் நெஞ்செரிச்சல், ஆஸ்துமா, சைனஸ், தொண்டை கரகரப்பு போன்ற பலவிதமான பிரச்சனைகள் குணமாகும்.

இயற்கை தாய் நமக்கு தந்த இந்த மருந்தை சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினர்களும் சாப்பிடலாம். நல்ல நிவாரணம் கிடைக்கும்.

மேலும் குடலில் உள்ள புழுக்கள், வயிற்று புழுக்கள் குணப்படுத்த உதவுகிறது.

இரத்த தட்டுகள் மற்றும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த ஆடாதோடை பயன்படுகிறது.

அதேபோல் புற்று நோய் வராமல் தடுக்கவும் பயன்படுகிறது.

மேலும் இரத்த அழுத்தத்தை குறைக்கவும், நரம்பு சம்மந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்கவும் இந்த ஆடாதோடை இலை உதவிபுரிகிறது.

குறைக்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆடாதோடை சிறந்த ஒன்றாகும்.

மேலும் எங்களின் கருப்பையை வலுப்படுத்தவும் ஆடாதோடை பயன்படுகிறது. மேலும் உடலில் உள்ள அனைத்து செல்களையும் சிறக்க வைத்துக்கொள்ளும்.

மேலும் படிக்க 👉 ஆடாதோடை இலையின் மருத்துவ குணம்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil