வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தினமும் நல்லெண்ணெயில் ஆயில் புல்லிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள்..!

Updated On: September 17, 2024 6:03 PM
Follow Us:
Oil pulling benefits in tamil
---Advertisement---
Advertisement

நல்லெண்ணெய் ஆயில் புல்லிங் | Health Benefits of Oil Pulling in Tamil 

Oil pulling benefits in tamil:- பலநூறு ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஆயுர்வேத முறைதான் இந்த ஆயில் புல்லிங். ஆயில் புல்லிங் என்பது காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பல் துலக்குவதற்கு முன் வாயில் சிறிதளவு நல்லெண்ணெய்யை ஊற்றி 10 முதல் 15 நிமிடங்கள் வரை வாய் கொப்பளிப்பதுதான் ஆயில் புல்லிங் என்று சொல்வார்கள். இவ்வாறு ஆயில் புல்லிங் செய்தபிறகு தான் பிரஸ் பயன்படுத்தி பல் துலக்க வேண்டும்.

தினமும் ஆயில் புல்லிங் செய்வதினால் உடலில் ஏற்படும் பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகளை சரி செய்யலாம். இப்பொழுது உள்ள ஆரோக்கிமற்ற வாழ்க்கைமுறையில் ஒருவர் தினமும் அல்லது வாரத்தில் இரண்டு முறை நல்லெண்ணெய்யால் ஆயில் புல்லிங் செய்வதினால் உடல் நலத்தை என்றும் ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம். சரி இந்த ஆயில் புல்லிங் செய்வது எப்படி? ஆயில் புல்லிங் செய்வதினால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

ஆயில் புல்லிங் செய்வது எப்படி? | Gingelly Oil Pulling Benefits in Tamil:

காலையில் எழுந்தவுடன் பல் துலக்குவதற்கு முன் சிறிதளவு நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி 10 முதல் 15 நிமிடங்கள் நன்றாக நுரை வெள்ளையாக மாறும் அளவிற்கு கொப்பளிக்க வேண்டும். அதன் பிறகு எப்பொழுதும் போல் பிரஸ் பயன்படுத்தி பல் துலக்க வேண்டும். இந்த முறையை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினர்களும் செய்யலாம். சரி இவ்வாறு ஆயில் புல்லிங் செய்வதினால் ஏற்படும் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

ஆயில் புல்லிங் நன்மைகள்:

oil pulling

பற்கள் ஆரோக்கியம் மேம்படும்:-

ஆயில் புல்லிங் தினமும் செய்வதினால் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும், வாய் துர்நாற்றம் நீங்கும், பற்களில் உள்ள கிருமிகள் அனைத்தும் வெளியேறிவிடும். ஈறுகளில் ஏற்படும் இரத்தக்கசிவை சரி செய்து ஈறுகள் பலம் பெரும், பல் கூச்சம் சரியாகும் மற்றும் பற்கள் என்றும் உறுதியாக இருக்கும்.

உடல் ஆற்றல் அதிகரிக்கும்:-

தினமும் ஒருவர் ஆயில் புல்லிங் செய்து வருவதினால் உடலில் ஆற்றல் அதிகரித்து அன்றைய நாள் முழுவதும் அவர்கள் நன்கு சுறுசுறுப்புடன் இருப்பார்கள்.

ஒற்றை தலைவலி குணமாகும்:-

ஒற்றை தலைவலியால் அவதிப்படுபவர்கள் நல்லெண்ணெய்யால் தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால் ஒற்றை தலைவலி சரியாகும். மேலும் சைனஸ் மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த ஆயில் புல்லிங் முறையை தொடர்ந்து பின்பற்றி வர பிரச்சனைகள் சரியாகும்.

தூக்கமின்மை சரியாக:-

தினமும் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் நல்லெண்ணெய்யால் தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால் இரவில் நல்ல நிம்மதியான தூக்கம் வரும்.

Oil pulling benefits

  1. தினமும் நல்லெண்ணெய்யால் வாய் கொப்பளிப்பதினால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, சருமம் பொலிவோடு இருக்க உதவும்.
  2. முறையற்ற மாதவிடாய் பிரச்சனை சில பெண்களுக்கு இருக்கும், அவர்கள்  தினமும் ஆயில் புல்லிங் செய்தால், ஹார்மோன் சமநிலையின்மை குணமாகி, சரியான மாதவிடாய் சுழற்சி ஏற்படும்.
  3. தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், தினமும் அல்லது வாரத்தில் இரண்டு முறை ஆயில் புல்லிங் செய்து வந்தால், தைராய்டு ஹார்மோனை சீராக சுரக்க செய்து, தைராய்டு பிரச்சனையைக் கட்டுப்பாட்டில் வைக்கலாம்.
  4. இப்பொழுது பலரும் சந்திக்கின்ற ஒரு பிரச்சனையாக இருப்பது பார்வை கோளாறு. இந்த பார்வை கோளாறு சரியாக ஒரு சிறந்த முறை தான் ஆயில் புல்லிங். தினமும் ஆயில் புல்லிங் செய்து வர பார்வைக் கோளாறானது சரியாகும்.
  5. வயதானவர்களுக்கு பொதுவாக மூட்டுகளில் பிரச்சனை ஏற்படும், எனவே அவர்கள் தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால், அது மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலிகளை குணப்படுத்தும்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now