கருமுட்டை வெளிவரும் அறிகுறிகள் | Ovulation Symptoms in Tamil Language
புதுமண தம்பதிகள் திருமணத்திற்கு பிறகு ஒவ்வொரு மாதமும் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கும் நல்ல செய்தியில் முக்கியமான ஒன்று கருத்தரித்தல். அதற்கு பெரிதும் உதவியாக இருப்பது அண்டவிடுப்பு தான். கருமுட்டை சினைப்பையிலிருந்து வெளிபடுவது தான் அண்டவிடுப்பு. கருதரிப்பதற்கு அல்லது கருத்தரிப்பை தள்ளி போடுவதற்கும் கருமுட்டை வெளிப்படும் நாட்களை தெரிந்து வைத்து கொள்வது அவசியம். ஒவ்வொரு மாதம் கருமுட்டை வெளிப்படும்போதும் பெண்களின் உடலில் சிலவிதமான அறிகுறிகள் தோன்றும். அந்த வகையில் நாம் இந்த தொகுப்பில் கருமுட்டை வெளிப்படுவதற்கான அறிகுறிகளை படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.
ஒவுலேஷன் என்றால் என்ன?
- கருமுட்டை வெளிவரும் நாட்களை தான் ஓவுலேசன் என்று அழைக்கிறோம். கருப்பை ஒன்றிலிருந்து முதிர்ந்த முட்டையை விடுவிப்பது அண்ட விடுப்பு எனப்படும்.
- கருமுட்டை வெளியேறும் நாள் ஒவ்வொரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சியை பொறுத்து மாறுபடும்.
வெள்ளைபடுதல்:
- Ovulation Symptoms in Tamil: கருமுட்டை வெளிப்படுவதற்கான முதல் அறிகுறி கருப்பை வாயில் தண்ணீர் போன்ற திரவம் வெளிப்படும்.
- இந்த திரவம் கருமுட்டை வெளிப்படும்போது அதிகமாகவும், மற்ற நேரங்களில் குறைவாக வெளிப்படும்.
அடிவயிறு வலி:
- Ovulation Symptoms in Tamil Language: அடிவயிறு மற்றும் இடுப்பில் வலி ஏற்படும். இடுப்பின் இடது அல்லது வலது பக்கத்தில் தசைப்பிடிப்பு மற்றும் வலி இருக்கலாம். இந்த அறிகுறி மாதவிடாய் சரியான காலத்தில் வெளிப்படுபவர்களுக்கு நிச்சயம் இருக்கும்.
உடல் வெப்பநிலை:
- கருமுட்டை வெளிவரும் அறிகுறிகள்: ஒரு சிலருக்கு கருமுட்டை வெளிப்படும் போது உடலின் வெப்பநிலையில் மாற்றம் ஏற்படும்.
- இது உடலில் புரோஜெஸ்ட்ரான் உற்பத்தி அதிகரிப்பதால் ஏற்படுகிறது.
மார்பகங்களில் ஏற்படும் மாற்றம்:
- ஓவுலேசன் அறிகுறிகள்: ஹார்மொன்களில் மாற்றம் ஏற்படுவதால் மார்பகத்தில் புண் அல்லது வலி ஏற்படும்.
- மார்பகங்கள் மென்மையாக, கனமாக இருப்பதற்கான வாய்ப்பு அதிகம். இது ஈஸ்ட்ரோஜன் மற்றும் லுடினைசிங் ஹார்மோன் அதிகரிப்பதால் மார்பகங்களில் மாற்றம் ஏற்படுகிறது.
கர்ப்பப்பை வாய் நிலையில் மாற்றம்:
- அண்டவிடுப்பின் அறிகுறிகள்: அண்டவிடுப்பு வெளியேறுவதை குறிக்கும் விதமாக பெண்களின் கர்ப்பப்பை வாய் மென்மையாகவும், திறந்த நிலையிலும் இருப்பது போன்ற உணர்வு காணப்படும்.
- இது போன்ற அறிகுறிகள் மாதவிடாய் சரியான நாட்களில் அதாவது 28 நாட்கள் அல்லது 30 நாட்கள் மாதவிடாய் ஏற்படும் பெண்களுக்கு மேற்கூறப்பட்ட அறிகுறிகள் தோன்றும்.
- மாதவிடாய் தாமதமாக வரும் பெண்களுக்கு இந்த அறிகுறிகள் வெளிப்படுவது சற்று கடினமான ஒன்று.
- இந்த அண்டவிடுப்பு ஏற்படும் காலத்தில் உறவு கொள்ளும்போது குழந்தை பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
- கர்பத்தை உறுதி செய்வதற்கு டெஸ்ட் கருவிகள் இருப்பதை போல, அண்டவிடுப்பு நிகழ்வதை கண்டறிவதற்கும் கருவிகள் உள்ளது, இந்த கருவியும் Pregnancy kid போல இருக்கும், இதை உபயோகப்படுத்தும் விதமும் ஒரே மாதிரியாக இருக்கும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> |
Tamil maruthuvam tips |