பழைய சாதம் சாப்பிட்டால் இதெல்லாம் வருகிறதா என்னப்பா சொல்லுறிங்க..!

palaya soru payangal

பழைய சோறு பயன்கள்

அனைத்து நல் உள்ளம் கொண்ட நண்பர்களுக்கும் வணக்கம் இன்றைய ஆரோக்கியம் பதிவில் அனைவருக்கும் பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம் யாருக்கெல்லாம் பழைய சாதம் பிடிக்கும், யாருக்கு பிடிக்காமல் இருக்காது. ஏனென்றால் அதன் சுவையே தனித்தாங்க அவ்வளவு சூப்பராக இருக்கும். ஆனால் நம்முடைய பாட்டி தாத்தா மட்டும் அதற்கு அவ்வளவு முக்கியதுவம் கொடுப்பார்கள். இப்போது கூட அதை தான் சாப்பிடுவார்கள். அப்படி இருக்கும் போது எப்போதாவது யோசித்தது உண்டா. வாங்க அதில் அப்படி என்னதான் உள்ளது என்று படித்து தெரிந்துகொள்வோம்..!

பழைய சோறு பயன்கள்:

பழைய சாதம் என்பது நம் முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமாக விளங்குயது. அப்படி இருக்கும் போது. தாத்தா பாட்டி இருவருமே இரவு மீந்தசாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்துவிடுவார்கள். அதனை காலை எழுந்ததுமே நீர் ஆகாரம் குடித்துவிட்டு ஒரு 9 மணி நேரம் ஆன பிறகு 5 சின்ன வெங்காயம் உரித்து வைத்துவிட்டு அதில் தயிரை ஊற்றி வைத்துவிட்டு தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக சாப்பிட்டால் சுவை சூப்பராக இருக்கும்.

ஆனால் இதில் நாம் எதுவுமே சேர்த்து சாப்பிடமாட்டோம் ஆனால் அதி எப்படி நன்மை இருக்கிறது என்று சொல்கிறீர்கள் என்று நினைப்பீர்கள் ஆனால் அது தான் உண்மை. அந்த பழைய சாதத்தில் அவ்வளவு நன்மை உள்ளது.

இதனுடைய பெருமைகளை அமெரிக்கன் நியூட்ரிஷன் கூட இதனுடைய பெருமைகளை பட்டியல்போட்டு கட்டியுள்ளது. இந்த உணவானது அமெரிக்கர்களுக்கு மற்ற நாட்டினருக்கும் அதிசயமாக இருக்கலாம். ஆனால் நமக்கு இதம் தரும் காலை உணவாகும்.

முதல் நாள் சாதத்தில் தான் அறிய வைட்டமினான b6, b12 அதிகம் உள்ளது என்று அமெரிக்க மருத்துவர் கூறுகிறார்.

அதுமட்டுமில்லாமல் சிறுகுடலுக்கு நன்மை செய்யக்கூடிய பாக்டீரியா அதிகமாகி சிறுகுடலை ஆரோக்கியமாக வைக்கிறது.

அதேபோல் இதோடு 2 சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

சிலர் தவறாக நினைத்துக்கொண்டு உடல் எடை அதிகமாகும், அதேபோல் தூக்கம் வரும் என்று நினைத்து கொண்டு சாப்பிட மறுத்துவிடுவார்கள் ஆனால் அது முற்றிலும் தவறான கூற்று ஆகும்.

இந்த பழைய சோறு சாப்பிடுவதால் இதில் லட்ச கணக்கான பாக்டிரியாக்கள் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகி உடலை எந்த நோயும் தாக்காமல் பாதுகாக்குகிறது. செரிமான குழாயை நன்றாக வைக்கும்.

தினமும் காலையில் பழைய சோறு சாப்பிட்டு வந்தால் விரையில் முதிர்வு தோற்றம் வராமல் நம்மை எப்போதும் இளமையாக வைத்துக்கொள்ள முடியும். அதேபோன்று எலும்புகளும் வலிமையடையும்.

இன்று அனைவருக்கும் உள்ள பிரச்சனை உடல் சூடு அதனால் உடல் சூடு உள்ளவர்கள் தினமும் சாப்பிட்டுவந்தால் உடலில் ஏற்படவும் சூட்டை நீக்கி குளிர்ச்சியாக வைக்கும்.

இந்த பழைய சோற்றில் நிறைய நார்சத்து நிறைந்துள்ளது. அதனால் காலையில் இதனை எடுத்துக்கொண்டால் மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது.

காலையில் இதனை உட்கொண்டால் சுறுசுறுப்பாக இருப்பீர்கள் மத்திய இடைவேளை வரை சோர்வு அடையாமல் இருப்பீர்கள்.

அதேபோல் இன்று அதிகளவு இரத்த அழுத்தால் பாதிக்கப்பட்டு வருகிறீர்கள் அதனால் இதனை உட்கொண்டால் இரத்த அழுத்தத்தை குறைக்கும் என்று சொல்ல படுகிறது.

அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் சாப்பிட்டுவந்தால் உடல் நன்றாக இருக்கும்.

காலையில் நீராகாரம் குடிப்பதில் இவ்வளவு உள்ளதா அதா அந்த காலத்தில் காலையில் இதை குடித்திருப்பார்கள் போல

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆரோக்கியமும் நல்வாழ்வும்