பாமாயில் பற்றிய தகவல்கள் – Palm Oil in Tamil
Palm Oil in Tamil – வணக்கம் நண்பர்களே இன்று நம் பொதுநலம்.காம் பதிவில் செம்பனை எண்ணெய் பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். செம்பனை எண்ணெய் என்றால் சிலருக்கு தெரியாது. நாம் ருசியாக சாப்பிடுவதற்கும், வறுத்து பொரித்து எடுப்பதற்கும் சமையல் எண்ணெய்களை பயன்படுத்துவோம். இப்படி பயன்படுத்தப்பட்ட எண்ணெயில் ஒன்று தான் செம்பனை எண்ணெய். இதனை பாமாயில் என்று சொன்னால் தான் பலருக்கும் தெரியும். பாமாயிலில் பால்மிடிக் அமிலம் உள்ளது. ஆகவேதான் இதற்கு பாமாயில் என்று பெயர் வந்தது. மேலும் செம்பனை எண்ணெய் பற்றி தகவல்களை நம் பதிவில் படித்து அறியலாம் வாங்க..
தேங்காய் எண்ணெய் நன்மைகள் |
செம்பனை எண்ணெயின் உற்பத்தி:
- செம்பனை என்ற தனி மரத்தில் இருந்து காய்க்க கூடிய பழங்களில் இருந்து தயாரிக்கப்படுவது தான் பாமாயில்.
- செம்பனை என்பது பனை மரம் அல்லது நுங்கு மரம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த எண்ணெய் ஒருவகை தாவர எண்ணெய் ஆகும்.
- இப்பனை மரங்கள் இந்தோனேசியா, மலேசியா, நைரீசிய போன்ற நாடுகளில் அதிக அளவு உற்பத்தி செய்யப்படுகிறது.
- இப்பனை பயிர் செய்வதினால் மக்களுக்கு வேலையும் கிடைக்கிறது. அதே சமயம் இவை பயிரிடப்படும் நாடுகளில் காடழிப்பும் ஏற்படுகிறது.
- மனிதர்கள் பயன்படுத்தப்படும் இந்த பாமாயில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பாவே மனிதர்களால் இது உபயோகப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.
- பாமாயில் இருக்க கூடிய இந்த பனை மரம் தென்கிழக்கு ஆசியாவில் 100 ஆண்டுகளுக்கு முன்பு இது ஒரு அலங்கார மரமாக கொண்டுவரப்பட்டுள்ளது.
- பாமாயில் எடுப்பதில் தாய்லாந்தும் முன்னேறி வருகின்றன.
- உலகில் மொத்தம் 42 நாடுகள் பாமாயிலை உற்பத்தி செய்து வருகின்றது.
- இந்தோனேசியா மற்றும் மலேசியா உலகளவில் 85 சதவிகிதமான பாமாயிலை உற்பத்தி செய்து விநியோகிக்கிறது.
- உலகம் முழுவதும் ஆண்டிற்கு 62 மில்லியன் டன் பாமாயில் உற்பத்தி செய்யப்படுகிறது.
- பாமாயில் மக்களுக்கு ஒரு முக்கிய உணவு பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
- பாமாயிலில் இரண்டு விதமாக எண்ணெய் எடுக்கப்படுகிறது. அதன் பழத்தில் இருந்தும் அந்த பழத்தின் கொட்டையில் இருந்தும் எண்ணெய் எடுக்கப்படுகிறது.
- பழத்தின் சதைப்பகுதி சிவப்பு நிறத்தில் இருப்பதால் எண்ணெய் சிவப்பு நிறமாக இருக்கும். இது பழத்தின் தன்மையை பொருத்து நிறங்கள் மாறுபடும்.
- இதன் மரத்தின் கொத்துகளில் 3000 பழங்கள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதில் 22 லிருந்து 25 சதவீதம் எண்ணெய் எடுக்கலாம்.
- பாமாயில் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் மற்றும் லிப்ஸ்டிக், பிஸ்கட், டூத்பேஸ்ட், சாக்லேட், ஐஸ்கிரீம் போன்ற பொருட்களில் சேர்க்கப்படுகிறது.
- பேக்கரி பொருட்களில் அதிக அளவு பாமாயில் பயன்படுத்தப்படுகிறது. பாமாயில் எண்ணெய் தயாரித்த பிறகு அதன் சக்கை விலங்குகளுக்கு உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் காகிதம், உரங்கள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
- 16 மற்றும் 17 நூற்றாண்டில் அட்லாண்டிக் கடல் வர்த்தகர்களுக்கு பாமாயில் ஒரு முக்கிய வணிக பொருளாக இருந்தது.
- 18 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் தொழில்துறை புரட்சியில் மெழுகுவர்த்தி செய்வதற்கும், இயந்திரத்திற்கு மசக்கு எண்ணெயாகவும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது.
- 1910 ஆம் ஆண்டில் மலேசியாவில் வில்லியம் சிங் மற்றும் ஹென்றி டாங்கி ஆகியோரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
- இந்த எண்ணெய் தமிழ்நாடுகளில் விலை குறைந்த அளவில் விற்பனை செய்யப்படுகிறது.
பாமாயில் நன்மைகள் மற்றும் தீமைகள் – Palm Oil in Tamil:
நாம் எல்லாரும் உபயோகிக்க கூடிய எண்ணெயில் ஒன்று தான் இந்த பாமாயில். விலை குறைந்த எண்ணெயும் இது தான். ஆனால் இதில் சில ஆரோக்கியமற்ற பிரச்சனைகள் இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. சில ஆராய்ச்சிகள் இதனை நல்லது என்றும், சில ஆராய்ச்சிகள் கெட்டது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் முடிவு நம் கைகளில் தான் இருக்கிறது.
- முதலில் பாமாயிலை உபயோகிப்பதற்கு முன்பு நம் உடலை பற்றி தெரிந்து கொண்டு அதன் பிறகு உபயோகிப்பது நல்லது.
- வைட்டமின் A சத்து குறைவாக இருக்கு நபர்கள் பாமாயிலை பயன்படுத்துவதற்கு எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் உபயோகிக்கலாம். இதனால் தேவையான வைட்டமின் A சத்துக்கள் கிடைக்கின்றது.
- பாமாயிலில் உள்ள பீட்டா கரோட்டின் சத்துக்கள் அதிகம் இருப்பதால் கண் பார்வையை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் இது சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகும்.
- பாமாயிலில் உள்ள டோக்கோஃபெரல்கள் இயற்கை ஆன்டி ஆக்ஸிடன்ட்களாக செயல்படுகின்றது. இதனால் புற்றுநோய் செல்களை சாதாரண செல்லாக மாற்றுகின்றது.
- பாமாயிலில் உள்ள பீட்டா கரோட்டின் இருப்பதால் உடலில் உள்ள ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவுகின்றது.
- மேலும் ஹார்மோன் பிரச்சனைகள் அதிகம் உள்ளவர்கள் குளிரூட்டப்பட்ட பாமாயிலை உபயோக்கிப்பது நல்லது.
- பாமாயிலில் வைட்டமின் E உள்ளதால் இது உடலுக்கு இளமை தோற்றத்தை தருவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.
- பாமாயிலில் அதிக கொழுப்புச் சத்துக்கள் இருப்பதால் இதனை இதய நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.
- பாமாயிலில் கொழுப்புகள் அதிகம் இருப்பதால் இது உடல் எடையை அதிகரிக்க செய்கிறது. மேலும் இதனை உணவில் சேர்ப்பதால் உடலில் உள்ள கொழுப்பு செல்களை படிப்படியாக குறைக்கிறது.
- பாமாயிலில் உள்ள அதிகமான கொழுப்பு வளர்சிதை நோய்களை உண்டாகிறது. மேலும் இதனை உபயோகிப்பதற்கு சில வழிமுறைகள் இருக்கின்றது.
உபயோகிக்கும் முறை:
அடுப்பில் ஒரு கடாய் வைத்து கடாய் பாமாயிலை கடாயில் சேர்த்து 5 அல்லது 6 பூண்டு பல் எடுத்து அந்த கடாயில் சேர்த்து கொதித்து வந்ததும் வடிகட்டில் வடித்த பின்பு உணவில் சேர்ப்பதன் மூலம் எந்த விதமான பிரச்சனைகளும் வராது என்று சொல்லப்படுகிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | உடல் ஆரோக்கிய குறிப்புகள் |