பனங்கிழங்கு மருத்துவ பயன்கள்..! Pana Kilangu Benefits in Tamil..!

Pana Kilangu Benefits in Tamil

பனங்கிழங்கு நன்மைகள்..! Palmyra Sprout Benefits in Tamil..! 

Pana Kilangu Benefits in Tamil:- ‘கற்பக விருட்சம்’ என்று சொல்லப்படும் பனை மரம் அதிக காலம் உயிர் வாழும் அதிசயம் கொண்டது. இதில் இருந்து கிடைக்கக்கூடிய அனைத்து பொருட்களும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. பனை மரத்தில் இருந்து பனம்பழத்தை வெட்டி குழியில் போட்டு புதைத்து, பனங்கிழங்கு சாகுபடி செய்கிறார்கள். இத்தகைய பனங்கிழங்கை நாம் சாப்பிடுவதினால் ஏற்படும் மருத்துவ குணங்களை பற்றி இப்பதிவில் நாம் படித்தறியலாமா..?

தினமும் 5 வால்நட் சாப்பிடுவதனால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா?

பனங்கிழங்கு நன்மைகள் – Pana Kilangu Benefits in Tamil

பனங்கிழங்கு நன்மைகள் – panang kilangu benefits in tamil: 1

weight increase

உடல் எடை அதிகரிக்க:-

மிகவும் ஒல்லியாக உடல் எடை குறைவாக உள்ளவர்கள் இந்த பனங்கிழங்கை சாப்பிடுவதினால் உடல் எடையை மிக எளிதாக அதிகரிக்கலாம். அது மட்டும் இல்லாமல் உடல் சூட்டினை குறைக்கும். எனவே உடல் உஷ்ணத்தினால் உடல் எடை குறையும் அப்படிப்பட்டவர்கள் தினமும் பனங்கிழங்கை சாப்பிட்டு வரலாம்.

பனங்கிழங்கு நன்மைகள் (pana kilangu benefits): 2

மலச்சிக்கல் சரியாக:-

மலச்சிக்கல் பிரச்சனையால் தினமும் அவதிப்படுபவர்கள் இந்த பனங்கிழங்கை சாப்பிடலாம். இவற்றில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து செரிமான மண்டலத்தை சீராக்கி மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்யும்.

பனங்கிழங்கு நன்மைகள் – pana kilangu during pregnancy in tamil: 3

கர்ப்பப்பை வலுப்பெற – pana kilangu during pregnancy in tamil:-

பலவீனமான கர்ப்பப்பை உள்ள பெண்கள் இந்த பனங்கிழங்கை பவுடர் செய்து தேங்காய் பாலுடன் கலந்து சாப்பிடுவதினால் கருப்பை வலுப்பெறும். இதற்கு என்ன காரணம் என்றால் பனங்கிழங்கில் உள்ள அதிகப்படியான ஊட்டச்சத்து உடலை ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் வைத்து கொள்ளும்.

பனங்கிழங்கு நன்மைகள்(pana kilangu benefits): 4

Anemia

இரத்த சோகை குணமாக – panang kilangu for anemia:-

பனங்கிழங்கில் உள்ள அதிகப்படியான இரும்பு சத்து இரத்த சோகை நோயை எளிதில் குணப்படுத்துகிறது. எனவே இரத்த சோகை உள்ளவர்கள் இந்த பனங்கிழங்கை தொடர்ந்து சாப்பிடுங்கள் நல்ல பலன் கிடைக்கும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

பனங்கிழங்கு நன்மைகள்: 5

சர்க்கரை நோய் குணமாக – pana kilangu for diabetes:-

பொதுவாக சர்க்கரை நோயாளிகள் பூமிக்கு அடியில் விளையக்கூடிய எந்த பொருட்களையும் சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றன. ஆனால் இந்த பனங்கிழங்கில் உள்ள சில வகையான வேதிப்பொருட்கள் உடலில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கின்றது. இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்துக்கொள்ளும். எனவே இந்த பனங்கிழங்கை எந்தவித பயம் இல்லாமல் சாப்பிடலாம்.

மூக்கிரட்டை கீரையின் பயன்கள்..!

பனங்கிழங்கு சாப்பிடும் முறை:-

Health Benefits of Palmyra sprout

நீரில் உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து நன்றாக கிழங்கை அவித்து சாப்பிடலாம்.

அல்லது அவித்த கிழங்கை நன்றாக வெயிலில் காயவைத்து மிஷினில் அரைத்து பவுடர் செய்து, பசும்பாலுடன் சிறிதளவு இந்த பனங்கிழங்கு பவுடரை சேர்த்து கொதிக்கவைத்து சாப்பிடலாம் மிகவும் சுவையாக இருக்கும்.

அதேபோல் அவித்த கிழங்கை மிக்சியில் புட்டு மாவு போல் அரைத்து அதனுடன் தேங்காய் துருவல், வெல்லம் அல்லது பனை வெல்லம் சேர்த்து சாப்பிடலாம் மிகவும் சுவையாக இருக்கும்.

அரைத்த பனங்கிழங்கு மாவை தோசையாகவும் சுட்டு சாப்பிடலாம்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆரோக்கியமும் நல்வாழ்வும்