கருப்பை நீர்கட்டி கரைய சித்த மருத்துவம் பகுதி – 2

Advertisement

கருப்பை நீர்கட்டி கரைய சித்த மருத்துவம் பகுதி – 2

கருப்பை கட்டி கரைய சித்த மருத்துவம் – இப்போது பெண்கள் அதிகம் சந்திக்கும் ஒரு மிக பெரிய பிரச்சனையாக கருப்பை நீர்க்கட்டி பிரச்சனை அமைந்துள்ளது. உணவு மற்றும் வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்களினால் பெண்களின் கருப்பையை தாக்கும் நோய்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கருப்பையில் தோன்றும் கட்டிகளின் காரணமாக மாதவிலக்கு கோளாறு, குழந்தையின்மை மற்றும் பல்வேறு தொல்லைகளை பெண்கள் சந்தித்து வருகின்றனர். குழந்தைப்பேறு என்பது பெண்களுக்கு மிக முக்கியமானது. இருப்பினும் கருப்பையில் ஏற்படும் சிறு சிறு கோளாறுகளால், தாய்மை பல பெண்களுக்கு ஏக்கமாக மாறிவிட்டது.

கருப்பை நீர் கட்டி கரைய சித்த மருத்துவம்..!

கருப்பை நீர்கட்டி கரைய சித்த மருத்துவம் – முருங்கைக்கீரை:-

பெண்களுக்கு ஏற்படும் கருப்பை கட்டி கரைய சித்த மருத்துவம்.அதாவது ஒரு கைப்பிடியளவு முருங்கைக்கீரை மற்றும் ஒரு நெல்லிக்காய் இரண்டையும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்து, அவற்றை வடிகட்டி அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து, காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இந்த முறையை வாரத்தில் ஒரு முறை செய்து வர பெண்களுக்கு ஏற்படும் கருப்பை நீர்க்கட்டி பிரச்சனை குணமாகும்.

கருப்பை நீர்கட்டி கரைய சித்த மருத்துவம் – மலைவேம்பு:

கருப்பை கட்டி கரைய சித்த மருத்துவம் – மலைவேம்பு பெண்களின் கருப்பை நீர்க்கட்டி பிரச்சனைக்கு  ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது. எனவே கருப்பை நீர்க்கட்டி பிரச்சனை உள்ளவர்கள் ஒரு கையளவு மலைவேம்பு இலையை எடுத்து, அதனை அரைத்து வடிகட்டி, அதனுடன் காய்ச்சாத பசும் பாலை கலந்து, காலை வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் குடிக்க வேண்டும். இந்த முறையை மாதவிலக்கு நடைபெறும் நாட்களில், மூன்றாவது நாள் அன்று பின்பற்ற வேண்டும். இவ்வாறு செய்து வர பெண்களுக்கு ஏற்படும் கருப்பை நீர் கட்டி பிரச்சனை குணமாகும்.

கருப்பை நீர்க்கட்டி பிரச்சனை சரியாக:

இந்த கருப்பை கட்டி கரைய சித்த மருத்துவம் வாரத்தில் இரண்டு முறையாவது வாழைத்தண்டு கூட்டு, வாழைப்பூ சாறு, பொரியல் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இவ்வாறு சேர்த்து கொள்வதினால் பெண்களுக்கு ஏற்படும் கருப்பை நீர்க்கட்டி கோளாறுகள் சரியாகும்.

கருப்பை நீர் கட்டி பிரச்சனைக்கு இதுவே சிறந்த மருந்து:-

  • கருப்பை கட்டி கரைய சித்த மருத்துவம் – பெண்களின் குழந்தையின்மை பிரச்சனையை சரி செய்ய இது ஒரு சிறந்த சித்த மருத்துவம்.  அதாவது 20 கிராம் சோம்பு, 20 கிராம் கருச்சீரகம், 5 கிராம் இலவங்கப்பட்டை, 2 கிராம் குங்குமப்பூ ஆகியவற்றை ஒன்று, இரண்டாக அடித்து பொடி செய்து கொள்ளவும்.
  • பின்பு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அவற்றில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்.
  • தண்ணீர் கொதி வந்ததும் இடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து திரும்பவும் 2 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைக்கவேண்டும்.
  • பின்பு அவற்றை வடிகட்டி தினமும் சாப்பிடும் முன் மூன்று வேளையில், ஏதேனும் ஒரு வேளையில் சாப்பிடுவதற்கு முன் இந்த கஷாயத்தை 200 மில்லி அருந்தி வர பெண்களின் கருப்பை நீர் கட்டி கரைந்து விடும்.

பொறுப்பு துறப்பு:

கருப்பை நீர் கட்டி பிரச்சனை குணமாக மேல் கூறப்பட்டுள்ள அனைத்து வைத்திய குறிப்புகளையும் மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்று, பின்பு மேற்கொள்ளவும். நன்றி நண்பர்களே..!

கருப்பை நீர் கட்டி பிரச்சனையை குணப்படுத்தும் சிறந்த மருத்துவ குறிப்பு..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement