நிமோனியா காய்ச்சல் அறிகுறிகள் | Pneumonia Fever in Tamil
pneumonia fever in tamil: மழைக்காலம் மற்றும் பனிக்காலத்தில் ஏற்படுகின்ற பெரும்பாலான காய்ச்சல்கள் எவ்வித பாகுபாடுமின்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தாக்குகிறது. குறிப்பாக சிறிய குழந்தைகளை அதிகமாக தாக்குகிறது. அப்படி பரவி வரும் பல காய்ச்சல்களில் நிமோனியா காய்ச்சலும் உண்டும். அந்த வகையில் நாம் இந்த பதிவில் நிமோனியா காய்ச்சல் என்றால் என்ன? அந்த நோய் எதன் மூலம் பரவுகிறது? அறிகுறிகள் மற்றும் தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி படித்தறியலாம் வாங்க.
நிமோனியா காய்ச்சல் என்றால் என்ன?
- நிமோனியா என்பது நுரையீரலைப் பாதிக்கும் ஒரு தோற்று நோயாகும். இந்த காய்ச்சல் நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தி மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
- இந்த நோய் ஸ்ட்ரெப்டோகாக்கஸ், ஃடெபைலோகாக்கஸ், நிமோகாக்கஸ், கிளப்சியெல்லா, மைக்கோபிளாஸ்மா, இன்ஃபுளூயென்சா போன்ற வைரஸ்கள், காற்றில் கலப்பதன் மூலம் மற்றவருக்கு பரவுகிறது. மேலும் பாக்டீரியா, ஃபங்கஸ் கிருமிகள் நிமோனியா காய்ச்சல் பரவுவதற்கு காரணமாக இருக்கலாம்.
- நிமோனியா காய்ச்சல் உள்ளவர்கள் இருமும் போது, தும்மும் போது வெளிப்படும் கிருமிகள் காற்றில் பரவி அது மற்றவர்களுக்கும் தொற்றை ஏற்படுத்துகிறது.
அறிகுறிகள் – Pneumonia Symptoms in Tamil:
- அதிக இருமல், சளி, மூச்சு விடுவதில் சிரமம்.
- அதிக காய்ச்சல்.
- உடல் சோர்வு
- வாந்தி, பசியின்மை
- வேகமாக மூச்சு விடுதல்
- தும்மும் போது நெஞ்சுவலி ஏற்படுதல், வயிற்று வலி போன்றவை இந்த நோயின் அறிகுறிகளாகும்.
தடுப்பதற்கான வழிமுறைகள் – Pneumonia Fever Meaning in Tamil
- நிமோனியா காய்ச்சல் உள்ளவர்களிடம் பழகும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும்.
- ஊட்டச்சத்து அதிகம் உள்ள உணவு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.
- புகையிலை நுரையீரலை பாதிப்பதால் புகைப்பிடித்தலை தவிர்க்க வேண்டும்.
நிமோனியா உணவுகள் – Pneumonia Symptoms in Tamil
மூச்சு திணறலை சரி செய்வதற்கு பூண்டை நசுக்கி நெஞ்சில் தடவிக்கொள்ளலாம் அல்லது அப்படியே சாப்பிடலாம். நெஞ்சில் உள்ள சளியை குறைப்பதற்கு தினமும் பாலில் 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து காய்ச்சி குடிக்கலாம்.
இருமலை குணப்படுத்த தேன் – Pneumonia Symptoms in Tamil:
ஒரு டேபிள் ஸ்பூன் தேனை நீரில் கலந்து குடிப்பதன் மூலம் நிமோனியா காய்ச்சலால் ஏற்படும் இருமலை சரி செய்யலாம்.
வீக்கத்தை குணப்படுத்த ஆப்பிள் – Pneumonia Fever in Tamil:
- நுரையீரலில் வீக்கத்தை குறைப்பதற்கு ஆப்பிள் சாப்பிடலாம். ஏனெனில் ஆப்பிளில் வைட்டமின் சி சத்து அதிகமாக இருப்பதால் இது நுரையீரல் வீக்கத்தை குணப்படுத்தும். ஆப்பிள் ஜூஸ் செய்தும் குடிக்கலாம்.
சிட்ரஸ் பழங்கள் – Pneumonia Symptoms in Tamil:
- நிமோனியா காய்ச்சல் இருக்கும் போது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு சிட்ரஸ் பழங்களான பெர்ரி, கிவி, ஆரஞ்சு மற்றும் கீரை வகைகளை உணவில் சேர்த்து கொள்ளலாம். கேரட், பீட்ரூட், கீரை போன்றவற்றை ஜூஸ் செய்து பருகலாம்.
புரோட்டீன் உணவுகள் – Pneumonia Fever in Tamil:
- புரோட்டின் அதிகம் உள்ள நட்ஸ் வகைகள், பீன்ஸ், இறைச்சி, மீன் போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும்.
மூளை காய்ச்சல் அறிகுறிகள் |
வைரஸ் காய்ச்சல் வராமல் இருக்க இதை சாப்பிடுங்க |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips tamil |