புதினா பயன்கள் | Mint Uses in Tamil
Pudina Benefits in Tamil: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம்.காம்-ல் மருத்துவ குணம் நிறைந்த புதினாவை யாரெல்லாம் சாப்பிடலாம், யாரெல்லாம் சாப்பிடக்கூடாது, புதினா (pudina) சாப்பிடுவதால் என்னென்ன நோய்களை நிரந்தரமாக குணப்படுத்தலாம் என்பது பற்றி இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ளலாம். புதினா ஒரு வாசனை திறன் கொண்ட மூலிகை தாவரமாகும். புதினா சமையலில் பெரும்பாலும் வாசனைக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள். புதினா சாப்பிடுவதால் நம் உடலில் என்னென்ன நோய்களை (pudina benefits) குணப்படுத்தலாம் என்று விரிவாக படித்தறியலாம்..!
உடலுக்கு நலம் தரும் புதினா:
- புதினா எண்ணெயினை தலைக்கோ அல்லது உடம்பிற்கோ தேய்த்து குளித்து வர உடல் சூடு நீங்கி உடலிற்கு குளிர்ச்சி கிடைக்கும்.
- மேலும் புதினா ஒவ்வாமை, சளித்தொல்லை, பல் வலி, செரிமான கோளாறுகள் போன்ற பல வகையான நோய்களை சரிசெய்யும்.
ஆஸ்துமா நோயை குணப்படுத்தும் புதினா:
- ஆஸ்துமா என்ற கொடிய நோய் மனிதருடைய நுரையீரல் பகுதியை பாதிப்படைய செய்து சுவாசக்கோளாறு பிரச்சனையை ஏற்படுத்துகிறது. ஆஸ்துமா என்பது ஒவ்வாமை போன்ற நோயாலும் வருகிறது.
- ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் புதினாவை பக்குவம் செய்து சாப்பிட்டுவர மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளவர்களுக்கு விரைவில் குணமாகும்.
ஒரே கீரை..! பல நோய்க்கு தீர்வு..! |
குடல் சம்பந்த பிரச்சனையை குணப்படுத்தும் புதினா:
- புதினா எண்ணெய் எரிச்சல் கொண்ட குடலிற்கு ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது. புதினா குடலில் உள்ள தசைப்பிடிப்பினை குறைத்து குடலில் உண்டாகும் எரிச்சலை சரிசெய்கிறது.
- தொடர்ச்சியாக வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் சிறிதளவு புதினாவினை எடுத்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு பிரச்சனை முற்றிலுமாக குணமாகும்.
தலைவலி ஏற்படாமல் தடுக்கும் புதினா:
- ஒற்றை தலைவலி உள்ளவர்கள் புதினா எண்ணெயினை தலையில் தேய்த்து வர ஒற்றை தலைவலி குணமாகும்.
- மேலும் ஒற்றை தலைவலியால் அடிக்கடி அவதிப்படுபவர்கள் புதினாவினை அரைத்து நெற்றியில் பற்று போட்டுவர விரைவில் சரியாகும்.
பாலூட்டும் தாய்மார்களுக்கு:
- ஆறு மாத காலம் வரை பிறந்த குழந்தைக்கு பால் கொடுப்பது மிகவும் அவசியம். தாய்மார்களிடம் குழந்தைகள் அழுத்தி பால் குடிப்பதனால் அவர்களுக்கு மார்பகத்தில் காயங்கள் மற்றும் வலி உண்டாகின்றன.
- பாலூட்டும் தாய்மார்கள் புதினா இலையினை சாப்பிட்டு வர மார்பக காம்புகளில் உண்டாகும் வலி மற்றும் காயங்களை பெரிதும் பாதிப்படையாமல் குறைத்துவிடும்.
வாய் துர்நாற்றம் நீங்க:
- உணவுகள் சாப்பிட்ட பிறகு வாய் துர்நாற்றம் இல்லாமல் இருப்பதற்கு வாயில் புதினா இலைகளை போட்டு மென்று சாப்பிட்டால் வாய் துர்நாற்ற பிரச்சனை இருக்காது.
- உணவிலிருந்து பற்கள் மற்றும் ஈறுகளின் இடுக்கு பகுதிகளில் தங்கும் கிருமிகளை புதினா இலை சாற்றில் இருக்கும் வேதிப்பொருட்கள் முற்றிலும் அழித்து பற்கள் மற்றும் ஈறுகளை பாதுகாப்பாக வைத்திருக்கும்.
வாந்தி வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்:
- சிலருக்கு சாதாரணமாக வாமிட் பிரச்சனை ஏற்படும். ஒரு சிலருக்கு வெளியில் அதிகமாக பயணிப்பதால் வாமிட் ஏற்படும். அதிகமாக வாமிட் எடுப்பவர்கள் புதினா இலைகளை நசுக்கி அந்த இலைகளின் வாசனையை முகர்ந்து வர வாமிட் பிரச்சனை குறையும்.
- மேலும் வயிற்றை புரட்டி வாந்தி வரும் நிலையில் இருப்பவர்கள் அதற்கு முன்பே சிறிது புதினா இலைகளை சாப்பிடுவதால் வாந்தி ஏற்படாமல் தவிர்க்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in Tamil |