21 நாட்கள் 21 செவ்வாழைப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா?

Advertisement

செவ்வாழை பழம் நன்மைகள் | Sevvalai Palam Benefits in Tamil

Red Banana Benefits in Tamil – வாழைப்பழம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது சொல்லுங்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்களை வாழைப்பழத்தை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். வாழைப்பழத்தில் நிறைய வகைகள் உள்ளது. அவற்றில் ஒன்று தான் செவ்வாழைப்பழம். இந்த பழம் அனைவருக்கும் மிகவும் பிடித்த பழமாகும். அதற்கு காரணம் அதனுடைய சிவப்பு நிறமாக கூட இருக்கலாம். இந்த செவ்வாழைப்பதை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் எண்ணற்ற நன்மைகள் நமது உடலில் நிகழும்.

செவ்வாழை பழம் பயன்கள் – Red Banana Benefits in Tamil:

செவ்வாழையில் பொட்டாசியம் சத்து நிறைந்து காணப்படுகிறது. இது சிறுநீரக கல் ஏற்படுவதை தடுக்கிறதாம்.

மேலும் இவற்றில் நார்ச்சத்து, வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதாம்.

நரம்பு தளர்ச்சி ஏற்படும் போது நமது உடலில் இருக்கும் பலம் குறையும் எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு செவ்வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி சரியாவதுடன் ஆண் தனமாய் சீரடையுமாம்.

மேலும் மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த செவ்வாழைப்பழம் சிறந்த தீர்வை கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதுமட்டும் இல்லாமல் பல் வலி, பல்லசைவு போன்ற எல்லாவிதமான பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம். ஆடிய பல் கூட செவ்வாழை பழத்தை 21 நாட்கள் சாப்பிட்டு வர கட்டியாகும் என்று சொல்லப்படுகிறது.

சொறி, சிரங்கு, தொழில் வெடிப்பு போன்ற சரும பிரச்சனைகளுக்கு செவ்வாழைப்பழம் சிறந்த நிவாரணம் தருகிறது. சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும் செவ்வாழையை தொடர்ந்து 7 நாட்களுக்கு சாப்பிட்டு வர சரும நோய் சரியாகும் என குறிப்பிடப்படுகிறது.

மேலும் படிக்க 👉 செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil
Advertisement