உடலுக்கு ஆரோக்கியம் தரும் சிவப்பு அரிசி பயன்கள் பற்றி தெரியுமா?

சிவப்பு அரிசி பயன்கள்..!

Red Rice Benefits in Tamil: தென்னிந்தியர்களின் உணவு முறைகளில் முதல் இடத்தை பெற்றிருப்பது அரிசி உணவுகள் தான். மதிய உணவாக சாதம் தான் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். பொதுவாக அரிசியில பலவகையான உணவுகளை சமைக்கலாம். ஆனால் இந்த அரிசியிலும் பல வகைகள் இருக்கிறது. அவற்றில் ஒவ்வொரு ரகங்களும் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கின்றது. அந்த அரிசி வகைகளில் ஒன்றாக சிவப்பு அரிசி விளங்குகிறது. இந்த அரிசி பார்ப்பதற்கு சிவப்பாக இருக்கும், இதை சாப்பிடுவதனால் உடலுக்கு ஏராளமான நன்மைகளை அளிக்கின்றது. சரி இந்த பதிவில் சிவப்பு அரிசி பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

சிவப்பு அரிசியில் உள்ள சத்துக்கள்:-

இந்த சிவப்பு அரிசியில் அதிகளவு மாங்கனீசியம், கார்போஹைட், செலினியம், துத்தநாகம், கலோரிகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, கொழுப்புச்சத்து, மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

கவுனி அரிசி மருத்துவ பயன்கள்..!

சிவப்பு அரிசி மருத்துவ பயன்கள் –  Red Rice Benefits in Tamil

சிவப்பு அரிசி பயன்கள் – நீரிழிவு நோய் குணமாக:

sivappu kavuni rice benefits in tamil: நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை சத்து அதிகமுள்ள வெள்ளை அரிசியால் செய்யப்பட்ட உணவுகளை அதிகமாக சாப்பிடக்கூடாது. எனவே சர்க்கரை நோயாளிகள் வெள்ளை அரிசில் செய்த உணவுகளை சாப்பிடுவதற்கு பதில் நீரிழிவு நோயை நன்கு கட்டுப்படுத்தும் சிவப்பு அரிசி உணவுகளை உட்கொள்வதன் மூலம் நல்ல நிவாரணம் கிடைக்கும். எனவே சர்க்கரை நோயாளிகள் சிவப்பு அரிசியில் செய்யகூடிய உணவுகளை காலை மற்றும் மதிய உணவாக உட்கொள்வதன் மூலம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம்.

சிவப்பு அரிசி மருத்துவ பயன்கள் – தாய்ப்பால் நன்கு சுரக்க:-

புதிதாக குழந்தை பெற்ற பெண்களின் உடலுக்கு சக்தி அதிகம் தேவைப்படுகிறது. எனவே தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் சிவப்பு அரிசியால் செய்யப்பட்ட புட்டு மற்றும் இதர வகையான உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். தாய்மார்களின் உடல் வலிமை பெரும். தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளின் உடலும் ஆரோக்கியமாக இருப்பார்கள்.

Sigappu Arisi Benefits – உடல் சூடு:-

பொதுவாக மனிதர்களின் உடல் சராசரியான உடல் வெப்பத்தை கொண்டிருக்க வேண்டும். இருப்பினும் கால நிலை மாற்றங்களின் பொழுது உடலில் வெப்ப நிலை மாறுபடும். அதாவது கோடை காலங்களில் அதிகப்படியான வெப்பத்தின் காரணமான உடலில் உள்ள சத்துக்கள் அனைத்தும் வியர்வை மூலமாக வெளியேறிவிடும். இதை சமாளிக்க உடலுக்கு தேவையான நீர் அருந்துவதுடன் சிவப்பு அரிசியுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிடுவதால்  உடல் சூடு குறைந்து உடல் குளிர்ச்சியாக காணப்படும்.

Red Rice Benefits in Tamil – உடல் எடை குறைய:-

உடல் உடையை குறைக்க வேண்டும் என்று முயற்சிப்பவர்கள். கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை தவிர்த்து கொள்வதுடன், உடற்பயிற்சியையும் செய்ய வேண்டும். மேலும் விரைவில் உடல் எடையை குறைக்க காலை உணவாக சிவப்பு அரிசி புட்டு, இடியாப்பம் உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். இவற்றில் இருக்கும் வேதிப்பொருட்கள் பசி அதிகம் ஏற்படுவதை கட்டுப்படுத்துவதால் உடல் எடை சீக்கிரத்தில் குறைக்க முடிகிறது.

Red Rice Benefits in Tamil – குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு:

red rice in tamil: குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு சிவப்பு அரசி சிறந்த உணவாக விளங்குகிறது, அதாவது நல்ல உடல் மற்றும் மன வளர்ச்சி பெற அவர்கள் சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். எனவே சிவப்பு அரிசியில் செய்யப்பட்ட உணவுகளான சிவப்பரிசி கஞ்சி, சிவப்பரிசி இட்லி, புட்டு, இடியாப்பம் போன்றவற்றை குழந்தைகளின் உணவில் அடிக்கடி சேர்பதினால் அவர்களின் உடல் வலிமை பெறுவதுடன், உடல் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க முடியும்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்