உடல் எடையை குறைக்க ரோஜா பூ தேநீர்

rose tea for weight loss in tamil

உடல்  எடையை குறைக்கும் ரோஜா பூ 

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் உடல் எடையை வேகமாக குறைப்பதற்கு ரோஜா பூ தேனீர் செய்யும் முறையையும்,  அதனால் ஏற்படும் நன்மைகளையும்  பார்க்கலாம். இந்த ரோஜா பூவானது  பல ஆரோக்கிய நன்மைகளையும்,  அழகை கூட்டுவதற்க்காகவும் பயன்படுகிறது. பெரும்பாலான உணவு வகைகளிலும் ரோஜா பூ பயன்படுத்தப்படுகிறது. உணவு பொருள்கள் மட்டுமின்றி அழகு சாதனா பொருட்கள் தயாரிக்கவும்  ரோஜா பூ முக்கிய  பொருளாக இருக்கிறது. நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமாக பயன்படும் ரோஜா பூ தேநீர் செய்யவதையும் அதை குடிப்பதால் ஏற்படும்  நன்மைகளையும் பார்க்கலாம் வாங்க.

உடல் எடையை வேகமாக குறைக்க தேன் சாப்பிடுங்கள்..!

உடல் எடையை குறைக்க உதவும் ரோஜா பூவின் நன்மைகள்:

நம் உடல் எடையை வேகமாக குறைப்பதற்கு இந்த ரோஜா பூவின் இதழ்களில் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.

இந்த ரோஜா பூவை பயன்படுத்தி தயாரிக்கப்படும்  தேநீரானது மூலிகை தேனீர்  என்று அழைக்கப்படுகிறது.

இந்த ரோஜாவில் Antioxidant அதிகம் உள்ளதால் உடலில் ஏற்படும் வீக்கங்களுக்கு எதிராக செயல்படுகிறது. இதனால் உடல் வீக்கத்தை குறைத்து உடல் எடையை குறைக்கவும்  இது உதவுகிறது.

சாதாரண டீ மற்றும் காபி குடிப்பதற்கு பதிலாக இந்த ரோஜா பூ டீ  தினமும்  குடித்து வந்தால் தேவையில்லாத பசி தூண்டலை தடுக்கும். இதனால் நீங்கள் அடிக்கடி சாப்பிடும் எண்ணம் வராது.

இந்த ரோஜா பூவில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து  உடல் எடையை குறைப்பதற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறது.

ரோஜா பூ தேநீர் செய்முறை:

முதலில் ரோஜா தேநீரை இரண்டு விதமாக செய்யலாம் ஒன்று மலர்ந்த ரோஜா பூவை வைத்து மற்றொன்று ரோஜா இதழை காயவைத்து பொடி  வைத்தும் செய்யலாம்.

ரோஜா பூ டீயை தயாரிப்பதற்கு முன்பாக இந்த ரோஜா இதழ்களை நன்றாக கழுவ வேண்டும். அதன் பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

பிறகு கொதிக்க வைத்த தண்ணீரில்  ரோஜா இதழ்களை  சேர்த்து 5 நிமிடம் கழித்து வடிகட்டி கொள்ளவும். அதன் பிறகு தேவையான இனிப்பு சேர்த்து கலக்கி விடவும்.

வெள்ளை ஜீனியை பயன்படுத்துவதற்கு பதில் நாட்டு சர்க்கரை பயன்படுத்துவது நல்லது. அதனுடன் இஞ்சி மற்றும் ஏலக்காய் சேர்த்து இந்த தேநீரை குடிக்கலாம்.

இந்த ரோஜா தேநீர் ஆனது சீரான செரிமானத்தையும், சாப்பிடும் உணவுகள் ஜீரணம் ஆவதற்கும் இந்த ரோஜா தேநீர் பயனுள்ளதாக இருக்கிறது.

ரோஜா பூ தேநீர் செய்வதற்கு இரசாயனம் இல்லாத ரோஜா பூவை வாங்குவது நல்லது.

தினமும் காலை, மாலை இரண்டு வேலை குடித்து வந்தால் உடல் குறைந்து அழகு கூடும்.

குறிப்பு: சாப்பிடும் உணவு பொருட்களில் அலர்ஜி இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு இதை பயன்படுத்தவும்.  

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil