ஒரே ரத்த வகை உள்ளவர்கள் திருமணம் செய்யலாமா?

Advertisement

ஒரே ரத்த வகை உள்ளவர்கள் திருமணம் செய்யலாமா? – Husband and Wife Same Blood Group Any Problem in Tamil

வணக்கம் நண்பர்களே.. இன்றைய பதிவில் ஒரே ரத்த வகையை சேர்த்த ஆண், பெண் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா? ஏதாவது பிரச்சனை வருமா என்று பலர் யோசிப்பார்கள். குறிப்பாக ஒரே ரத்தம் வகையை சேர்ந்த ஆண், பெண் இருவரும் திருமணம் செய்து கொண்டால் குழந்தை பிறப்பதில் ஏதாவது பிரச்சனை ஏற்படுமா? என்று பயப்புடுவாங்க அவர்களுக்கான பதிவு தான் இந்த பதிவு. ஆம் ஒரே பிளட் குரூப்பை சேர்ந்தவர்கள் திருமணம் செய்யலாம் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். ஆகவே இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.

பிளட் குரூப்:

பொதுவாக ரத்த வகையில் நன்கு வகைகள் உள்ளன, அவை A, B, AB, O. இந்த ரத்த வகைகளில் பாசிட்டிவ், நெகட்டிவ் என்று பிரிக்கும் பொழுது A பாசிட்டிவ், A நெகட்டிவ், B பாசிட்டிவ், B நெகட்டிவ், AB பாசிட்டிவ், AB நெகட்டிவ், O பாசிட்டிவ், O நெகட்டிவ் என்று எட்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது.

ஒரே ரத்த வகை உள்ளவர்கள் திருமணம் செய்யலாமா?

ஒரே வகையான பிளட் குரூப்பை சேர்ந்தவர்கள் திருமணம் செய்யலாம். அதாவது B பாசிட்டிவ் உள்ள ஆண், B பாசிட்டிவ் உள்ள பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் இதனால் குழந்தை பிறப்பதில் எந்த ஒரு சிக்கலும் இருக்காது. அப்படி கருத்தரிக்கவில்லை என்றால் அவர்களுக்கு வேறு எதாவது பிரச்சனையாக கூட இருக்கலாம். ஆக வகைகள் மருத்துவரை அணுகி அதற்க்கான சிகிச்சை முறையை மேற்கொள்வது நல்லது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 உங்கள் Blood Group-ஐ வைத்து உங்கள் குணத்தை அறியலாம்..!

Same Blood Group Marriage Problems in Tamil – எப்போது பிரச்சனை வரும்?

கணவனுக்கு பாசிட்டிவ் பிளட் குரூப்பாக இருந்து, மனைவிக்கு நெகட்டிவ் பிளட் குரூப்பாக இருந்து அவர்கள் உறவுகொள்ளும்போது. அந்த பெண்டிர்க்கு உண்டாகும் கருவில் உள்ள குழந்தையின் பிளட் குரூப் பாசிட்டிவ் ஆக இருந்தால். அதனை Rh factor என்ற பிரச்சனை உருவாகிறது.

இந்த பிரச்சனை வரும் போது என்ன ஆகும் என்றால்? கருவில் உள்ள குழந்தை பிளட் குரூப் பாசிட்டிவ்வாகவும், தாயின் பிளட் குரூப் நெகட்டிவ்வாகவும் இருக்கும் பொழுது. இத்தகைய சந்தர்ப்பங்களில் அந்த தாய், அதிகப்படியான இரத்தப்போக்கு மற்றும் பல சிக்கல்களை சந்திக்க வாய்ப்புள்ளன.

ஆக ஒரு Rh நெகட்டிவ் கொண்ட தாய். Rh பாசிட்டிவ் கொண்ட தந்தை இருவருக்கும் பிறகு Rh பாசிட்டியூவில் பிறகும் குழந்தையை ஐசோஇம்யூனைசேஷன் என்று அழைக்கப்படும் ஒரு செயல்முறைக்கு வழிவகுக்கும்.

இது நிகழும் போது, குழந்தை கருப்பையில் இருக்கும் போது, குழந்தையின் இரத்தம் தாயின் உடலில் நுழையக்கூடும். இது கர்ப்பத்திற்கு பின் ஏற்படும் சிக்கல்களுக்கு வழிவகுக்கும். ஒருவேளை தாய் குழந்தையை கலைத்தாலும், Rh பாசிட்டிவ் தந்தையின் இரத்தம் கலந்தாலும், இந்த ஆபத்து நிகழும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil 
Advertisement