வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சதகுப்பை விதையின் பயன்கள் | Sathakuppai Seeds Benefits in Tamil

Updated On: October 28, 2024 12:22 PM
Follow Us:
சதகுப்பை விதை பயன்கள்
---Advertisement---
Advertisement

Sathakuppai Seeds Benefits in Tamil | சதகுப்பை பயன்கள்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சதகுப்பை விதையின் பயன்களை தொகுத்து பின்வருமாறு விவரித்துள்ளோம். சதகுப்பை விதை பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில் அவற்றின் பயன்கள் பற்றி விவரித்துள்ளோம்.

கொத்தமல்லி போன்ற கீரை வகையை சேர்ந்தது, இந்த சதகுப்பை கீரை. இதை சமையலுக்கு பயன்படுத்தலாம். பல்வேறு விதமான சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன. இதற்கு சோயிக்கீரை என்ற பெயரும் உண்டு. இந்த கீரையின் விதைதான், சதகுப்பை. இது சிறந்த மருத்துவதன்மை கொண்டது. சரி இந்த சதகுப்பை பயன்கள் பற்றி இங்கு நாம் படித்தறிவோம் வாங்க.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

Sathakuppai Seeds Benefits in Tamil:

குணம்:

சதகுப்பை வயிற்று உப்புசத்தை நீக்கும். ஜீரணத்தை மேம்படுத்தும். உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும். சிறுநீரை அதிகரிக்கும். மாதவிடாய் கால சிக்கலை நீக்கும். உடலுக்கு வெப்பத்தை அளித்து, உற்சாகம் கொடுக்கும். பசியை அதிகரிக்கும்.

சதகுப்பை பயன்கள்: 1

  • சதகுப்பை, கருஞ்சீரகம், மர மஞ்சள் இந்த மூன்றையும் சம அளவு எடுத்து நன்றாக பொடி செய்து, பின் அதனுடன் பனைவெல்லம் சேர்த்து அரைத்து 5 கிராம் அளவுக்கு காலை, மாலை இருவேளையும் சாப்பிடுங்கள்.
  • பின் 5 நிமிடம் கழித்து சோம்பு குடிநீர் குடித்து வர கருப்பை பலம்பெறும். கர்ப்பம் தரிக்க செய்யும்.

சதகுப்பை பயன்கள்: 2

குழந்தைகள் வயிற்று வலியால் அவதிப்படும்போது, சதகுப்பை கீரை சாறு 20 மி.லி. அளவுக்கு எடுத்து, ஒரு தேக்கரண்டி தேனுடன் கலந்து கொடுத்தால், வலி நீங்கும். பிரசவித்த தாய்மார்களுக்கு இந்த கீரையை சமைத்து கொடுத்தால் கருப்பை அழுக்குகள் வெளியேறும். ஜீரணமும் சீராகும்.

சதகுப்பை பயன்கள்: 3

  • சதகுப்பை விதையில் சார்வோன் மற்றும் லிம்மோனின் என்ற இருவித நறுமண எண்ணெய் உள்ளது.
  • இதன் மருத்துவ குணத்திற்கு இந்த மருத்துவ எண்ணெய்தான் காரணம். இவை தசைகளை தளரச் செய்து வலியை நீக்கும்.
கருப்பை நீர்கட்டி பிரச்சனையை குணப்படுத்தும் சிறந்த மருத்துவ குறிப்பு..!

சதகுப்பை பயன்கள்: 4

  • மாதவிடாய் சுழற்சி சரியாக அமையாமல் அவதிப்படுகிறவர்கள், மாதவிடாய் ஆரம்பிப்பதற்கு பத்து நாட்களுக்கு முன்னரே சதகுப்பை, எள், கருஞ்சீரகம் போன்றவற்றை சம அளவு எடுத்து லேசாக வறுத்து பொடி செய்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பனைவெல்லத்துடன் கலந்து உருண்டை செய்து தினம் இருவேளை சாப்பிட்டுவர வேண்டும்.
  • இதன் மூலம் மாதவிடாய் சுழற்சி சீராகும். அந்த காலகட்டத்தில் ஏற்படும் வலியும், சோர்வும் நீங்கும். கருப்பை பலம் பெரும்.

சதகுப்பை விதை பயன்கள்: 5

சதகுப்பை, ஆளிவிதை, ஆமணக்கு விதை ஆகியவற்றை அரைத்து மூட்டு வீக்கங்களுக்கு பற்றிடலாம். இவ்வாறு பற்று போடுவதினால் மூட்டு வீக்கம் குணமாகும்.

சதகுப்பை விதை பயன்கள்: 6

  • சளியுடன் கூடிய தலைவலி, காதுவலி, மூக்கில் நீர் வழிதல் போன்றவை ஏற்படும்போது ஒரு தேக்கரண்டி சதகுப்பையை 200 மி.லி. நீரில் நன்கு கொதிக்கவைத்து வடிகட்டி பருகுங்கள். நலம் பெறலாம்.
  • பிரசவித்த காலகட்டத்தில் பெண்கள் இது போல் தயாரித்து பருகினால் வயிற்றுக்கு இதமாக இருக்கும். வலி நீங்கும். ஜீரணம் மேம்படும். சிறுநீர் கழிப்பதில் தொந்தரவு இருக்காது. உடல் எடையும் அதிகரிக்காது.

சதகுப்பை விதை பயன்கள்: 7

அரை தேக்கரண்டி சதகுப்பை பொடியுடன், அரை தேக்கரண்டி அமுக்கரா சூரணம் கலந்து, சிறிது வெல்லமும் சேர்த்து சாப்பிட்டால் பிரசவித்த பெண்களுக்கு தாய்ப்பால் அதிகரிக்கும்.

அல்சர் குணமாக பாட்டி வைத்தியம் ..! அல்சர் முற்றிலும் குணமாக Patti Vaithiyam..!

சதகுப்பை விதை பயன்கள்: 8

  • கைக்குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்று தொந்தரவு ஏற்படும். பால் ஜீரணமாகாமல் வாந்தி எடுக்கும். இந்த அவஸ்தைகளால் அவ்வப்போது அழுதுகொண்டே இருக்கும்.
  • இதற்கு அரை தேக்கரண்டி சதகுப்பை, அரை தேக்கரண்டி பெருஞ்சீரகத்தை வறுத்து 100 மி.லி. நீரில் கலந்து நன்கு கொதிக்கவைத்து ஊட்டவேண்டும்.
  • இதை தினம் இருமுறை புதிதாக தயார் செய்து புகட்டவேண்டும். ஒரு மாத குழந்தைக்கு ஒரு தேக்கரண்டி கொடுக்கலாம்.
  • மாதம் ஆக ஆக அளவை அதிகரித்துக் கொள்ளலாம். இது எந்த வித பக்க விளைவையும் ஏற்படுத்தாது.

சதகுப்பை விதை பயன்கள்: 9

சதகுப்பை குழந்தைகளுக்கான வயிற்றுவலி மருந்துகள், ஜீரணத்தை மேம்படுத்த உதவும் மருந்துகள், வலி மருந்துகள், பிரசவத்திற்கு பின் கொடுக்கப்படும் லேகியங்கள், சளி இருமல் மற்றும் தலைவலிக்கான மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips in tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now