ஞாபக சக்தியை அதிகப்படுத்தும் சீத்தா பழம் | Seetha Palam Nanmaigal in Tamil

seetha palam benefits in tamil

சீத்தாப்பழம் மருத்துவ பயன்கள்

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் சீத்தா பழத்தில் நன்மைகள் எவ்வளவு இருக்கிறது என்பதை பற்றி பார்க்க போகிறோம். பொதுவாக அதிகளவு சத்துக்கள் இருப்பது ஆப்பிள் ஆரஞ்சு என்று அதிக நபர்கள் நினைத்து இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் சொல்ல போனால் எல்லா பழங்களிலும் சத்துக்கள் உள்ளது அதிலும் மிகவும் முக்கியமாக சொல்ல போனால் இந்த சீத்தா பழத்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது வாங்க அதனை பற்றி தெரிந்துகொள்ளவும்.

சீத்தா பழம் நன்மைகள்:

சீத்தா பழம் நன்மைகள்

 

இந்த சீத்தாப்பழத்தில் அதிகம் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் இதனை உட்கொள்வதால் செல்களில் உள்ள கழிவுகளை வெளியாக்கி விடும். இதை தவிர கால்சியம் மெக்னீசியம் இருப்பு சத்து, நியாசின் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

இதனை சாப்பிடுவதால் அதிக உடல் எடை உள்ளவர்களுக்கு எடை குறையும் அதுமட்டுமில்லாமல் தைராய்டு பிரச்சனையால் அதிகரித்த உடல் எடையை குறைக்க இந்த சீத்தா பழம் உதவுகிறது.

கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக்கூடிய பழங்களில் ஒன்றானது இந்த சீத்தாப்பழம் இந்த பழத்தை சாப்பிடுவதால் குழந்தை நன்றாக பிறக்கும்.

ஏனென்றால் குழந்தையின் நோய் ஏதிர்ப்பு சக்தி எலும்புகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

அதுமட்டுமில்லாமல் கர்ப்பகாலத்தில் ஏற்படும் வாந்தி குமட்டல், பசியின்னை போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாக உதவுகிறது.

இந்த பழமானது ஆஸ்மா நோய் வராமல் தடுக்கும். இதில் வைட்டமின் B அதிகம் இருப்பதால் ஆஸ்மா நோய் வராமல் தடுக்கிறது.

குறிப்பாக மூச்சு திணறல் வீசிங் பிரச்சனை உள்ளவர்கள் இந்த சீத்தா பழத்தைசாப்பிட வேண்டாம்.

மாரடைப்பை தடுக்கும் இந்த பழத்தில் மெக்னீசியம் இதயத்தை வலுப்படுத்தும் அதனால் சீத்தா பழத்தை சாப்பிடுவது நல்லது. அதேபோல் இதயம் சீராக சுருங்கி விரிய உதவுகிறது.

செரிமான சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது. அதிலும் சிலருக்கு சாப்பிட்டவுடன் வயிற்று வலி ஏற்படும் அதனால் இதனை சாப்பிடலாம்.

இந்த பழத்தில் இருக்கக்கூடிய தாமிரம் நைட்ரேட்டு சத்துக்கள் குடலின் இயக்கத்தை சீராக வைக்கிறது. அதே போல் மல சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

சீத்தா பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது.

இரத்த அழுத்தம் கட்டுப்படும், இவற்றில் இருக்கக்கூடிய மெக்னீசியம் பொட்டாசியம் இரண்டுமே இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

கொலஸ்டரால் அளவை கட்டுக்குள் வைக்கும் உடலுக்குள் இருக்கும் கெட்ட கொழுப்புளை குறைக்கும்.

தோல் புற்றுநோயை குணமாக்கும். சர்ம புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அளிக்கும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Health Tips in Tamil