இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா..? அப்போ நீங்கள் சரியாக தண்ணீர் குடிக்கவில்லை என்று அர்த்தம்..!

Signs Of Not Drinking Enough Water in Tamil

Signs Of Not Drinking Enough Water in Tamil

அன்பு நெஞ்சம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய ஆரோக்கியம் பதிவில் தண்ணீர் சரியாக குடிக்கவில்லை என்றால் என்ன அறிகுறிகள் தோன்றும் என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். நம் அன்றாட வாழ்வில் தண்ணீர் எவ்வளவு முக்கியம் என்று நம் அனைவருக்குமே தெரியும். உயிர் வாழ்வதற்கு உணவு எந்த அளவிற்கு முக்கியமோ அதேபோல தண்ணீரும் முக்கியம்.

பொதுவாக மனிதனின் உடல் 60% நீரால் ஆனது. இன்றைய உலகில் சாப்பிடுவதற்கே நேரம் இருப்பதில்லை. அதுபோல சிலர் தண்ணீர் குடிப்பதையே மறந்து வேலை செய்கின்றனர். ஒரு மனிதனின் உடலில் போதுமான அளவு நீர் இல்லாவிட்டால், அது உடலில் சில பாதிப்புகளை ஏற்படுத்தும். அந்த வகையில் சரியாக தண்ணீர் குடிக்காவிட்டால் என்ன அறிகுறிகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👉 அதிகம் தண்ணீர் குடிப்பது நல்லதா? கெட்டதா?

அதிகளவு தண்ணீர் குடிப்பதில்லை என்பதை சுட்டிக்காட்டும் அறிகுறிகள்:

செரிமான பிரச்சனைகள்:

செரிமான பிரச்சனைகள்

நம் உடல் உறுப்புகள் சரியாக செயல்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது நீர் தான். செரிமான மண்டலம் சரியாக செயல்பட நம் உடலில் நீர்சத்து அதிகம் இருக்க வேண்டும்.

உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இல்லாவிட்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். நீர்ச்சத்து இல்லையென்றால் வயிற்றில் சுரக்கும் அமிலம் செரிமான மண்டலத்தின் உள் பகுதியில் பெரிய சேதங்களை ஏற்படுத்துகிறது.

இதன் காரணமாக வயிற்றில் புண், வயிற்று வலி, அஜீரண கோளாறுகள் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

உடலில் வறட்சி ஏற்படுதல்: 

உடலில் வறட்சி ஏற்படுதல்

சரியாக தண்ணீர் குடிக்கவில்லை என்றால் உடலில் சில உறுப்புகளில் வறட்சி காணப்படும். நம் தோல் எப்பொழுதும் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும்.

இல்லாவிட்டால் வாய், உதடு, கை, கால் மற்றும் சருமத்தில் வறட்சி ஏற்படும். அதுமட்டுமில்லாமல் சரியாக தண்ணீர் குடிக்கவில்லை என்றால் கண்களிலும் வறட்சி ஏற்படும். இதுபோன்ற பகுதிகளில் வறட்சி ஏற்பட்டால் நீங்கள் சரியாக தண்ணீர் குடிக்கவில்லை என்று அர்த்தம்.

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

அடிக்கடி தாகம் எடுப்பது: 

அடிக்கடி தாகம் எடுப்பது

அடிக்கடி உங்களுக்கு தாகம் ஏற்படுகிறது என்றால் உங்கள் உடலில் நீர்ச்சத்து குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். அதனால் அதிகப்படியாக தண்ணீர் குடியுங்கள். அடிக்கடி தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்து கொள்ளுங்கள்.

உடல்நிலை சரியில்லாமல் போவது: 

உடல்நிலை சரியில்லாமல் போவது

ஒருவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனால் அவர் உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இல்லை என்று அர்த்தம்.

உடலில் போதுமான அளவு நீர் இல்லாவிட்டால், உடல் உறுப்புகள் அனைத்தும் சரியாக இயங்காது. அதுமட்டுமில்லாமல், இதனால் உடலில் சில பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

இவை அனைத்தும் நீங்கள் சரியாக தண்ணீர் குடிக்கவில்லை என்பதை காட்டும் ஆரம்ப அறிகுறிகள் ஆகும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil