தோல் நோய் குணப்படுத்தும் வீட்டு மருத்துவம் | Skin Diseases Treatment at Home in Tamil
பொதுவாக எத்தனை ஆண்டுகள் கடந்து சென்றாலும் நமது உடலில் ஏற்படும் ஒரு சில பிரச்சனைகள் என்பது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதில் முக்கியமானதக தோல் நோய் பிரச்சனை தான். இந்த தோல் நோய் பிரச்சனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவருக்கும் வருகிறது. இதனை குணப்படுத்துவதற்கு எவ்வளவோ மாத்திரைகள் சாப்பிட்டாலும் சிலருக்கு எளிதில் குணமடைவது இல்லை. இத்தகைய பிரச்சனை வந்தால் நாம் இயல்பான நிலையில் இருக்க முடியாது. அதனால் உங்களை விரைவில் உடம்பில் ஏற்படும் தோல் நோய் பிரச்சனையில் இருந்து விடுபட இன்றைய பதிவில் அதற்கான வீட்டு மருத்துவம் என்ன என்பது பற்றி தெரிந்துக்கொண்டு பயன்பெறலாம் வாங்க..!
இதையும் படியுங்கள்⇒ வெள்ளை படுதல் குணமாக வீட்டு வைத்தியம்..!
தோல் நோய் குணமாக வைத்தியம்- 1:
முதலில் 1 கப் வேப்பிலையை எடுத்துக்கொண்டு அதனை குளிப்பதற்கு வைக்கும் சூடு தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க விடுங்கள்.
நீங்கள் குளிக்கும் போது வேப்பிலை கொதிக்க வைத்த அந்த தண்ணீருடன் குளிர்ந்த தண்ணீர் கலந்து குளித்தால் போதும் உடம்பில் உள்ள தோல் நோய் பிரச்சனை விரைவில் குணமாகிவிடும்.
Skin Diseases Treatment in Tamil- 2:
தேங்காய் எண்ணெயில் Fatty Acid என்ற கொழுப்பு அமிலங்கள் நிறைய இருக்கிறது. அதனால் இது தோல் நோய் பிரச்சனையை குணப்படுத்த உதவுகிறது.
ஆகையால் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை தேங்காய் எண்ணெயை உடம்பில் தோல் நோய் உள்ள இடத்தில் அப்ளை செய்தால் போதும் எளிதில் தோல் நோய் குணமடைந்து விடும்.
Skin Diseases Treatment in Tamil– 3:
பூண்டு நிறைய பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. அதில் தோல் நோயும் ஒன்று. அதனால் 3 அல்லது 4 பூண்டு பற்கள் எடுத்துக்கொண்டு அதனை நன்றாக அரைத்து தோல் நோய் உள்ள இடத்தில் தடவினால் அந்த இடத்தில் எரிச்சல் இருக்கும். ஆனால் அந்த எரிச்சலுக்கு பிறகு தோல் நோய் விரைவில் சரியாகிவிடும்.
தோல் நோய் குணமாக வைத்தியம்- 4:
அதேபோல வேப்பிலையை சிறிதளவு எடுத்துக்கொண்டு அதனை சுத்தமான தண்ணீரில் அலசி அதன் பிறகு மிக்சி ஜாரில் போட்டு பேஸ்ட் போல அரைத்து கொள்ளுங்கள்.
இப்போது அரைத்து வைத்துள்ள வேப்பிலை பேஸ்டை 1 ஸ்பூன் சாப்பிட்டால் அதில் அதில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி பண்பு உங்களுது உடம்பில் இருக்கும் தோல் பிரச்சனை குணமடைய செய்கிறது.
இதையும் படியுங்கள்⇒ சிறுநீர் தொற்று நீங்க வீட்டு வைத்தியம்
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |