நுரையீரலில் உருவாகும் சளியை நீக்கும் ஒரு சூப்பர் மருந்து..!

நுரையீரலில் சளி

நுரையீரலில் சளி (Lung Problems) நீங்க, சூப்பர் வழி இதோ..!

பொதுவாக நுரையீரலில் சளி (Lung Problems) பலவகையான பிரச்சனைகளை உருவாக்கும். குறிப்பாக நுரையீரலில் சளி அதிகரிக்க அதிகரிக்க உடலின் இயக்கமானது குறைக்கப்படுகிறது, மேலும் இரத்த ஓட்டத்தை தடை செய்கிறது, நமது எலும்புகள் அனைத்தையும் வலுவிழக்க செய்கிறது, மேலும் நம்முடைய நாடி, நரம்புகள் அனைத்தையும் தளர்ந்து போக வழிவகுக்கிறது.

இந்த சளி தொல்லையானது மூக்கை அடைத்து கொண்டு சளி உருவாக்குவது மட்டும் சளி பிரச்சனை (Lung Problems) என்று நினைக்க கூடாது. நம் நுரையீரலில் சளி தொல்லை எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கும். இந்த நுரையீரலில் சளி, (lung problems) சரி செய்ய இந்த இயற்கை மருத்துவ முறையை பின்பற்றினால் உடனே நுரையீரலில் உறைந்திருக்கும் சளி சரியாகிவிடும்.

சரி வாருங்கள் இந்த பகுதியில் நுரையீரலில் உறைந்திருக்கும் சளியை இயற்கை மருத்துவக் முறை மூலம் எப்படி சரிசெய்யலாம் என்பதை பற்றி இப்போது நாம் காண்போம்.

இயற்கையான முறையில் தலைவலியை எப்படி குணப்படுத்தலாம்?

இயற்கை மருத்துவ குறிப்பில் அதிகளவு சிறந்து விளங்குவது கரிசலாங்கண்ணி. இந்த கரிசலாங்கண்ணி இலையில் உள்ள மருத்துவ பயன்கள் நுரையீரலில் உருவாகும் சளியை சரி செய்ய பெரிதும் உதவுகிறது. இந்த கரிசலாங்கண்ணி கீரையை கொண்டு இயற்கை மருந்து தயாரிப்பதை பற்றி இப்போது நாம் காண்போம். இந்த இயற்கை மருந்து தயாரிப்பது என்பது ஒன்றும் கடினமான வேலையல்ல, மிக எளிதான முறையில் இந்த இயற்கை மருந்தை தயார் செய்துவிட முடியும். சரி இந்த இயற்கை மருந்து தயார் செய்ய தேவைப்படும் பொருட்கள் என்ன, எப்படி தயாரிக்க வேண்டும் என்பதை பற்றி இப்போது நாம் காண்போம்.

கரிசலாங்கண்ணி இயற்கை மருந்து தயார் செய்ய தேவைப்படும் பொருட்கள்:

  1. வேறுருடன் இருக்கும் கரிசலாங்கண்ணி கீரை – ஒன்று
  2. நெய் – தேவையான அளவு
  3. மிளகு தூள் – சிறிதளவு

இரத்தசோகைக்கான அறிகுறிகள் மற்றும் காரணங்கள்..!

கரிசலாங்கண்ணி இயற்கை மருந்து செய்முறை:

வேருடன் உள்ள கரிசலாங்கண்ணி இலையை நன்றாக சுத்தம் செய்துகொண்டு, மைபோல் நான்றாக அரைத்து கொள்ளவும்.

பின்பு ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் விட்டு அவற்றில் அரைத்து வைத்துள்ள கரிசலாங்கண்ணி பேஸ்ட் மற்றும் சிறிதளவு மிளகு தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி விட்டு, மெழுகு பதத்திற்கு வந்ததும், அடுப்பில் இருந்து இறக்கி, பதப்படுத்தி வைக்க வேண்டும்.

முக்கிய குறிப்பு இந்த கரிசலாங்கண்ணி இயற்கை மருந்து தயார் செய்யும் போது அடுப்பை மிதமான சூட்டில் வைத்துதான் தயார் செய்ய வேண்டும்.

கரிசலாங்கண்ணி இயற்கை மருந்து பயன்படுத்தும் முறை:

இந்த இயற்கை மருந்தை அதிகாலை எழுந்து, பல் துலக்கிவிட்டு, தங்களது வலது கை பெருவிரலால் இந்த மருந்தை தொட்டு எடுத்து கொள்ளவும்.

பின்பு தங்களது வாயை நன்றாக திறந்து, உள்நாக்கில் உள்ள மேல் துவாரத்தில் இந்த மருந்தை வைக்க வேண்டும்.

பின்பு 1/2 மணி நேரம் வரை காத்திருக்கவும், இவ்வாறு காத்திருக்கையில் சூஷ்ம நாடிகளுக்குள் உறைந்திருக்கும் சளி அனைத்தும் நூல்நூலாக வெளியேறும்.

இந்த முறையை தொடர்ந்து 45 நாட்கள் வரை அதிகாலை சூரியன் உதிப்பதற்குள் செய்துவர நுரையீரலில் சளி (lung problems) அனைத்தும் வெளியேறிவிடும்.

இது போன்ற மருத்துவ குறிப்புகளை தெரிந்துகொள்ள தினமும் எங்கள் பொதுநலம் பகுதியை பார்வையிடுங்கள் ..!

தோள்பட்டை வலிக்கு எளிய வீட்டு வைத்தியங்கள்..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.